கர்ப்பிணி தாய்மார்கள் மகபே்பேற்றுதொட்டியில் கட்டி தூக்கி செல்லும் நிலையில் இறம்பொடை 50 ஏக்கர் பகுதியில் ஆபத்தான நிலையில் பிரதான பாலம் உடனடி நடவடிக்கை எடுக்க மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
நுவரெலியா மாவட்டம், கொத்மலை பிரதேச செயலகப் பிரிவிற்குட்பட்ட இறம்பொடை '50 ஏக்கர்' பகுதியில் அமைந்துள்ள பாலம் எந்த நேரத்திலும் இடிந்து விழும் ஆபத்தான நிலையில் காணப்படுவதாக அப்பகுதி மக்கள் அச்சம் வெளியிட்டுள்ளனர்.
இது குறித்து நுவரெலியா மாவட்ட ஆளும் கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர் மஞ்சுல சுரவீர ஆராய்ச்சி மற்றும் கிருஷ்ணன் கலைச் செல்வி ஏனைய பாராளுமன்ற உறுப்பினர் எதிர் கட்சி பாராளுமன்ற உறுப்பினர் ஜீவன் தொண்டமான் பழனி திகாம்பரம் வேலுச்சாமி இராதாகிருஷ்ணன் மத்திய மாகாண ஆளுநர் நுவரெலியா மாவட்ட அரசாங்க அதிபர் திருமதி துஷாரி தென்னகோன் கொத்மலை பிரதேச சபையின் தவிசாளர் மற்றும் வட்டார பிரதேச சபையின் உறுப்பினர் இச் சம்பவம் குறித்து உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும்.
இப்பாலத்தை நாள்தோறும் 120-க்கும் மேற்பட்ட குடும்பங்களைச் சேர்ந்த 800-க்கும் அதிகமான பொதுமக்கள் தமது அன்றாட தேவைகளுக்காகப் பயன்படுத்தி வருகின்றனர்.
கடந்த 'தித்வா' புயலின் போது சேதமடைந்த இப்பாலம் குறித்து அதிகாரிகளுக்குப் பலமுறை அறிவித்தும் இதுவரை எந்தவித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை என மக்கள் குற்றஞ்சாட்டுகின்றனர்.
தற்போது பெய்து வரும் கடும் மழையால் பாலத்தின் சில பகுதிகள் உடைந்து விழுந்துள்ளதோடு, மழைக்காலங்களில் பாலத்தின் மேல் வெள்ளநீர் பாய்வதால் போக்குவரத்து முற்றாகப் பாதிக்கப்படுகிறது.
இதனால் பொதுமக்கள் மரப்பலகைகளைப் போட்டு ஆபத்தான முறையில் பயணித்து வருகின்றனர். பாலத்தின் இரும்புக்கம்பிகள் துருப்பிடித்து, கொன்கிரீட் பகுதிகள் தகர்ந்து வருவதால் கர்ப்பிணித் தாய்மார்கள், பாடசாலை மாணவர்கள், வயோதிபர்கள் மற்றும் நோயாளிகள் கடும் உயிராபத்தை எதிர்கொண்டுள்ளனர். என்ன டா
அவசர மருத்துவ தேவைகளுக்கோ அல்லது சடலங்களை வெளியே கொண்டு செல்வதற்கோ கூட முடியாத அவலநிலை ஏற்பட்டுள்ளது.
எனவே, ஏதேனும் அசம்பாவிதங்கள் அல்லது உயிரிழப்புகள் சம்பவிப்பதற்கு முன்னர், சம்பந்தப்பட்ட அதிகாரிகள் உடனடியாக அந்த இடத்திற்குச் சென்று தொழில்நுட்ப ரீதியாக ஆய்வு செய்து, பாலத்தை முழுமையாகப் புனரமைக்க வேண்டும் என அப்பகுதி மக்கள் வலியுறுத்துகின்றனர்.
அதுவரை மக்களின் பாதுகாப்பான போக்குவரத்திற்காக மாற்றுப் பாதை வசதியை ஏற்படுத்தித் தருமாறும் அவர்கள் அவசரக் கோரிக்கை விடுத்துள்ளனர்.
இறம்பொடை 50 ஏக்கரில் ஆபத்தான நிலையில் பிரதான பாலம் உடனடி நடவடிக்கை கோரும் மக்கள் கர்ப்பிணி தாய்மார்கள் மகபே்பேற்றுதொட்டியில் கட்டி தூக்கி செல்லும் நிலையில் இறம்பொடை 50 ஏக்கர் பகுதியில் ஆபத்தான நிலையில் பிரதான பாலம் உடனடி நடவடிக்கை எடுக்க மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.நுவரெலியா மாவட்டம், கொத்மலை பிரதேச செயலகப் பிரிவிற்குட்பட்ட இறம்பொடை '50 ஏக்கர்' பகுதியில் அமைந்துள்ள பாலம் எந்த நேரத்திலும் இடிந்து விழும் ஆபத்தான நிலையில் காணப்படுவதாக அப்பகுதி மக்கள் அச்சம் வெளியிட்டுள்ளனர். இது குறித்து நுவரெலியா மாவட்ட ஆளும் கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர் மஞ்சுல சுரவீர ஆராய்ச்சி மற்றும் கிருஷ்ணன் கலைச் செல்வி ஏனைய பாராளுமன்ற உறுப்பினர் எதிர் கட்சி பாராளுமன்ற உறுப்பினர் ஜீவன் தொண்டமான் பழனி திகாம்பரம் வேலுச்சாமி இராதாகிருஷ்ணன் மத்திய மாகாண ஆளுநர் நுவரெலியா மாவட்ட அரசாங்க அதிபர் திருமதி துஷாரி தென்னகோன் கொத்மலை பிரதேச சபையின் தவிசாளர் மற்றும் வட்டார பிரதேச சபையின் உறுப்பினர் இச் சம்பவம் குறித்து உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும்.இப்பாலத்தை நாள்தோறும் 120-க்கும் மேற்பட்ட குடும்பங்களைச் சேர்ந்த 800-க்கும் அதிகமான பொதுமக்கள் தமது அன்றாட தேவைகளுக்காகப் பயன்படுத்தி வருகின்றனர். கடந்த 'தித்வா' புயலின் போது சேதமடைந்த இப்பாலம் குறித்து அதிகாரிகளுக்குப் பலமுறை அறிவித்தும் இதுவரை எந்தவித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை என மக்கள் குற்றஞ்சாட்டுகின்றனர்.தற்போது பெய்து வரும் கடும் மழையால் பாலத்தின் சில பகுதிகள் உடைந்து விழுந்துள்ளதோடு, மழைக்காலங்களில் பாலத்தின் மேல் வெள்ளநீர் பாய்வதால் போக்குவரத்து முற்றாகப் பாதிக்கப்படுகிறது. இதனால் பொதுமக்கள் மரப்பலகைகளைப் போட்டு ஆபத்தான முறையில் பயணித்து வருகின்றனர். பாலத்தின் இரும்புக்கம்பிகள் துருப்பிடித்து, கொன்கிரீட் பகுதிகள் தகர்ந்து வருவதால் கர்ப்பிணித் தாய்மார்கள், பாடசாலை மாணவர்கள், வயோதிபர்கள் மற்றும் நோயாளிகள் கடும் உயிராபத்தை எதிர்கொண்டுள்ளனர். என்ன டாஅவசர மருத்துவ தேவைகளுக்கோ அல்லது சடலங்களை வெளியே கொண்டு செல்வதற்கோ கூட முடியாத அவலநிலை ஏற்பட்டுள்ளது.எனவே, ஏதேனும் அசம்பாவிதங்கள் அல்லது உயிரிழப்புகள் சம்பவிப்பதற்கு முன்னர், சம்பந்தப்பட்ட அதிகாரிகள் உடனடியாக அந்த இடத்திற்குச் சென்று தொழில்நுட்ப ரீதியாக ஆய்வு செய்து, பாலத்தை முழுமையாகப் புனரமைக்க வேண்டும் என அப்பகுதி மக்கள் வலியுறுத்துகின்றனர்.அதுவரை மக்களின் பாதுகாப்பான போக்குவரத்திற்காக மாற்றுப் பாதை வசதியை ஏற்படுத்தித் தருமாறும் அவர்கள் அவசரக் கோரிக்கை விடுத்துள்ளனர்.