• May 08 2025

மரக்கறிகளின் விலைகள் திடீர் அதிகரிப்பு

Thansita / May 8th 2025, 9:03 pm
image

 தற்போது சந்தையில் அத்தியாவசிய பொருட்களின் விலைகள் மீண்டும் அதிகரித்துள்ளதுடன், அரிசி பற்றாக்குறையும் நிலவுவதாக நுகர்வோர் மற்றும் வர்த்தகர்கள் தெரிவிக்கின்றனர். 

இந்த நிலையில்  இலங்கை மத்திய வங்கி நேற்றைய தினம் வெளியிட்ட தினசரி விலை அறிக்கையின் படி, பல அத்தியாவசிய பொருட்களின் விலைகள் வேகமாக அதிகரித்துள்ளது. 

 இலங்கை மத்திய வங்கியின் அறிக்கையின் படி , நேற்றைய முன்தினம் புறக்கோட்டை மொத்த விற்பனை சந்தையில் 650 ரூபாவிற்கு விற்பனை செய்யப்பட்ட போஞ்சி நேற்றைய தினம் 750 ரூபாவிற்கு விற்பனை செய்யப்பட்டது. 

 அதன்படி ஒரு கிலோகிராம் போஞ்சியின் விலை ஒரு நாளில் 100 ரூபாய் அதிகரித்துள்ளது. 

 மேலும், 650 ரூபாவிற்கு விற்பனை செய்யப்பட்ட ஒரு கிலோகிராம் கரட் நேற்றைய தினம் 800 ரூபாவிற்கு விற்பனை செய்யப்பட்டது.  அத்துடன், 560 ரூபாவிற்கு விற்பனை செய்யப்பட்ட ஒரு கிலோகிராம் கோவா நேற்றைய தினம் 660 ரூபாவிற்கு விற்பனை செய்யப்பட்டது. 

1000 ரூபாவிற்கு விற்பனை செய்யப்பட்ட தக்காளி நேற்றைய தினம் 1200 ரூபாவிற்கு விற்பனை செய்யப்பட்டது.  மேலும் கடந்த சில வாரங்களாக 160 ரூபாய் முதல் 180 ரூபாய் வரை காணப்பட்ட தேங்காயின் விலை இன்று மீண்டும் அதிகரித்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. 

 இதற்கிடையில் உப்பு ஒரு கிலோகிராமின் விலை 350 ரூபாவாக அதிகரித்துள்ளதாக நுகர்வோர் குற்றஞ்சாட்டியுள்ளனர் என்பதும் குறிப்பிடத்தக்கது .

மரக்கறிகளின் விலைகள் திடீர் அதிகரிப்பு  தற்போது சந்தையில் அத்தியாவசிய பொருட்களின் விலைகள் மீண்டும் அதிகரித்துள்ளதுடன், அரிசி பற்றாக்குறையும் நிலவுவதாக நுகர்வோர் மற்றும் வர்த்தகர்கள் தெரிவிக்கின்றனர்.  இந்த நிலையில்  இலங்கை மத்திய வங்கி நேற்றைய தினம் வெளியிட்ட தினசரி விலை அறிக்கையின் படி, பல அத்தியாவசிய பொருட்களின் விலைகள் வேகமாக அதிகரித்துள்ளது.  இலங்கை மத்திய வங்கியின் அறிக்கையின் படி , நேற்றைய முன்தினம் புறக்கோட்டை மொத்த விற்பனை சந்தையில் 650 ரூபாவிற்கு விற்பனை செய்யப்பட்ட போஞ்சி நேற்றைய தினம் 750 ரூபாவிற்கு விற்பனை செய்யப்பட்டது.  அதன்படி ஒரு கிலோகிராம் போஞ்சியின் விலை ஒரு நாளில் 100 ரூபாய் அதிகரித்துள்ளது.  மேலும், 650 ரூபாவிற்கு விற்பனை செய்யப்பட்ட ஒரு கிலோகிராம் கரட் நேற்றைய தினம் 800 ரூபாவிற்கு விற்பனை செய்யப்பட்டது.  அத்துடன், 560 ரூபாவிற்கு விற்பனை செய்யப்பட்ட ஒரு கிலோகிராம் கோவா நேற்றைய தினம் 660 ரூபாவிற்கு விற்பனை செய்யப்பட்டது. 1000 ரூபாவிற்கு விற்பனை செய்யப்பட்ட தக்காளி நேற்றைய தினம் 1200 ரூபாவிற்கு விற்பனை செய்யப்பட்டது.  மேலும் கடந்த சில வாரங்களாக 160 ரூபாய் முதல் 180 ரூபாய் வரை காணப்பட்ட தேங்காயின் விலை இன்று மீண்டும் அதிகரித்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.  இதற்கிடையில் உப்பு ஒரு கிலோகிராமின் விலை 350 ரூபாவாக அதிகரித்துள்ளதாக நுகர்வோர் குற்றஞ்சாட்டியுள்ளனர் என்பதும் குறிப்பிடத்தக்கது .

Advertisement

Advertisement

Advertisement