• Apr 17 2026

உயர்தரப் பரீட்சையில் சாதித்த யாழ். இந்து மாணவன் திடீர் மரணம்

Chithra / Apr 4th 2026, 1:47 pm
image

உயர்தரப் பரீட்சையில் சிறந்த பெறுபேறு பெற்ற மாணவன் ஒருவர் இன்று சனிக்கிழமை காலை உடல்நலக் குறைவு காரணமாக உயிரிழந்த சம்பவம் யாழ்ப்பாணத்தில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. 


யாழ். இணுவில் தெற்கு இணுவிலை வசிப்பிடமாக கொண்ட யாழ்ப்பாணம் இந்துக் கல்லூரி கல்வி கற்ற மாணவனான லவன் அக்சயன் என்பவரே  இவ்வாறு உயிரிழந்துள்ளார். 


இவர் அண்மையில் வெளியான 2025 ஆம் ஆண்டுக்கான கல்விப் பொதுத் தராதர உயர்தரப் பரீட்சையில் கணிதப் பிரிவில் 3 A சித்திகள் பெற்று யாழ் மாவட்ட ரீதியில் 24 ஆவது இடம் பிடித்துச் சாதித்திருந்தார். 


இரத்தத்தில் கிருமித் தொற்று ஏற்பட்டமையே மரணத்திற்கு காரணம் என குறிப்பிடப்படுகின்றது. 


இந்நிலையில் தனது பரீட்சை பெறுபேறைக்கூட சந்தோசமாய் கொண்டாடாமல்  மாணவன்  திடீரென உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படத்தியுள்ளது. 

உயர்தரப் பரீட்சையில் சாதித்த யாழ். இந்து மாணவன் திடீர் மரணம் உயர்தரப் பரீட்சையில் சிறந்த பெறுபேறு பெற்ற மாணவன் ஒருவர் இன்று சனிக்கிழமை காலை உடல்நலக் குறைவு காரணமாக உயிரிழந்த சம்பவம் யாழ்ப்பாணத்தில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. யாழ். இணுவில் தெற்கு இணுவிலை வசிப்பிடமாக கொண்ட யாழ்ப்பாணம் இந்துக் கல்லூரி கல்வி கற்ற மாணவனான லவன் அக்சயன் என்பவரே  இவ்வாறு உயிரிழந்துள்ளார். இவர் அண்மையில் வெளியான 2025 ஆம் ஆண்டுக்கான கல்விப் பொதுத் தராதர உயர்தரப் பரீட்சையில் கணிதப் பிரிவில் 3 A சித்திகள் பெற்று யாழ் மாவட்ட ரீதியில் 24 ஆவது இடம் பிடித்துச் சாதித்திருந்தார். இரத்தத்தில் கிருமித் தொற்று ஏற்பட்டமையே மரணத்திற்கு காரணம் என குறிப்பிடப்படுகின்றது. இந்நிலையில் தனது பரீட்சை பெறுபேறைக்கூட சந்தோசமாய் கொண்டாடாமல்  மாணவன்  திடீரென உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படத்தியுள்ளது. 

Advertisement

Advertisement

Advertisement