• Aug 06 2026

துபாயில் திடீர் தாக்குதல்-தொழிற்பேட்டையில் அடுத்தடுத்து வெடிப்புகள்!

Ziya / Aug 5th 2026, 3:36 pm
image

ஐக்கிய அரபு அமீரகத்தின் துபாயில் உள்ள ஜெபல் அலி தொழிற்பேட்டை மீது தாக்குதல் நடத்தப்பட்டதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.


ஈரான் ஆதரவு பெற்ற ஏமன் ஹூதி இயக்கமே இந்தத் தாக்குதலுக்குப் பின்னால் இருக்கலாம் என தகவல்கள் தெரிவிக்கின்றன.


தாக்குதலைத் தொடர்ந்து ஜெபல் அலி பகுதியில் பலத்த வெடிப்புகள் மற்றும் பரவலான தீ விபத்துகள் ஏற்பட்டதாகவும், அப்பகுதி முழுவதும் பெரும் புகைமண்டலம் சூழ்ந்துள்ளது.


சம்பவத்தையடுத்து அப்பகுதியில் பதற்றமான சூழல் நிலவி வரும் நிலையில், தாக்குதலின் முழுமையான சேத விவரங்கள், உயிரிழப்புகள் மற்றும் காயமடைந்தவர்கள் குறித்த அதிகாரப்பூர்வ தகவல்கள் இதுவரை வெளியாகவில்லை.


தாக்குதலுக்கு ஹூதி இயக்கமே காரணமா என்பது குறித்தும் இன்னும் அதிகாரப்பூர்வ உறுதிப்படுத்தல் கிடைக்கவில்லை.


மத்திய கிழக்கில் ஏற்கனவே பதற்றம் அதிகரித்துள்ள நிலையில், துபாயின் முக்கிய தொழிற்பேட்டையில் ஏற்பட்டதாகக் கூறப்படும் இந்தச் சம்பவம் பிராந்திய பாதுகாப்பு குறித்து புதிய அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.


சம்பவம் தொடர்பான மேலதிக தகவல்கள் வெளியாகும் நிலையில், நிலைமை மேலும் தீவிரமடையுமா என்ற எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது.

துபாயில் திடீர் தாக்குதல்-தொழிற்பேட்டையில் அடுத்தடுத்து வெடிப்புகள் ஐக்கிய அரபு அமீரகத்தின் துபாயில் உள்ள ஜெபல் அலி தொழிற்பேட்டை மீது தாக்குதல் நடத்தப்பட்டதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.ஈரான் ஆதரவு பெற்ற ஏமன் ஹூதி இயக்கமே இந்தத் தாக்குதலுக்குப் பின்னால் இருக்கலாம் என தகவல்கள் தெரிவிக்கின்றன.தாக்குதலைத் தொடர்ந்து ஜெபல் அலி பகுதியில் பலத்த வெடிப்புகள் மற்றும் பரவலான தீ விபத்துகள் ஏற்பட்டதாகவும், அப்பகுதி முழுவதும் பெரும் புகைமண்டலம் சூழ்ந்துள்ளது.சம்பவத்தையடுத்து அப்பகுதியில் பதற்றமான சூழல் நிலவி வரும் நிலையில், தாக்குதலின் முழுமையான சேத விவரங்கள், உயிரிழப்புகள் மற்றும் காயமடைந்தவர்கள் குறித்த அதிகாரப்பூர்வ தகவல்கள் இதுவரை வெளியாகவில்லை.தாக்குதலுக்கு ஹூதி இயக்கமே காரணமா என்பது குறித்தும் இன்னும் அதிகாரப்பூர்வ உறுதிப்படுத்தல் கிடைக்கவில்லை.மத்திய கிழக்கில் ஏற்கனவே பதற்றம் அதிகரித்துள்ள நிலையில், துபாயின் முக்கிய தொழிற்பேட்டையில் ஏற்பட்டதாகக் கூறப்படும் இந்தச் சம்பவம் பிராந்திய பாதுகாப்பு குறித்து புதிய அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.சம்பவம் தொடர்பான மேலதிக தகவல்கள் வெளியாகும் நிலையில், நிலைமை மேலும் தீவிரமடையுமா என்ற எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது.

Advertisement

Advertisement

Advertisement