• Apr 16 2026

முல்லைத்தீவில் பாதுகாப்பு தரப்பினரின் திடீர் நடவடிக்கை...! முக்கிய இடங்கள் முற்றுகை...!samugammedia

Ziya / Dec 21st 2023, 9:25 am
image

நாட்டில் போதைப்பொருள் ஒழிப்பு மற்றும் தடுப்பு நடவடிக்கையில் பொலிசார் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றார்கள்.

அந்த வகையில் முல்லைத்தீவு மாவட்டத்திலும் பல இடங்களில் போதைப் பொருள் ஒழிப்பு நடவடிக்கையில் பொலிசார் மற்றும் விசேட  அதிரடிப்படையினர் இணைந்து முன்னெடுத்து வருகின்றார்கள்.

அந்தவகையில் முள்ளியவளை பகுதியில் கஞ்சா வியாபாரி ஒருவர் நேற்றையதினம்(20) கைது செய்யப்பட்டுள்ளார்.

பொலிசார் மற்றும் விசேட  அதிரடிப்படையினரின் இந்த நடவடிக்கையில் 9 பரல்கள் மற்றும் கசிப்புக் காய்ச்ச பயன்படுத்தப்படும் பொருட்கள் என்பன இதன் போது மீட்கப்பட்டுள்ளன.

குறித்த பகுதியில் ரகசியமான முறையில் கசிப்பு காச்சி வெளியிடங்களுக்கு விநியோகித்து வரும் குறித்த பகுதியே பொலிசாரின் சிறப்பு அதிரடிப்படையினரின் முற்றுகைக்கு உட்படுத்தப்பட்டுள்ளது.

மீட்கப்பட்ட பொருட்களையும் சான்று பொருட்களையும் மாவட்ட நீதிமன்றத்தில் முன்ப்படுத்தும் நடவடிக்கையில் முள்ளியவளை பொலிசார் ஈடுபட்டுள்ளார்கள்.




முல்லைத்தீவில் பாதுகாப்பு தரப்பினரின் திடீர் நடவடிக்கை. முக்கிய இடங்கள் முற்றுகை.samugammedia நாட்டில் போதைப்பொருள் ஒழிப்பு மற்றும் தடுப்பு நடவடிக்கையில் பொலிசார் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றார்கள். அந்த வகையில் முல்லைத்தீவு மாவட்டத்திலும் பல இடங்களில் போதைப் பொருள் ஒழிப்பு நடவடிக்கையில் பொலிசார் மற்றும் விசேட  அதிரடிப்படையினர் இணைந்து முன்னெடுத்து வருகின்றார்கள்.அந்தவகையில் முள்ளியவளை பகுதியில் கஞ்சா வியாபாரி ஒருவர் நேற்றையதினம்(20) கைது செய்யப்பட்டுள்ளார்.பொலிசார் மற்றும் விசேட  அதிரடிப்படையினரின் இந்த நடவடிக்கையில் 9 பரல்கள் மற்றும் கசிப்புக் காய்ச்ச பயன்படுத்தப்படும் பொருட்கள் என்பன இதன் போது மீட்கப்பட்டுள்ளன. குறித்த பகுதியில் ரகசியமான முறையில் கசிப்பு காச்சி வெளியிடங்களுக்கு விநியோகித்து வரும் குறித்த பகுதியே பொலிசாரின் சிறப்பு அதிரடிப்படையினரின் முற்றுகைக்கு உட்படுத்தப்பட்டுள்ளது. மீட்கப்பட்ட பொருட்களையும் சான்று பொருட்களையும் மாவட்ட நீதிமன்றத்தில் முன்ப்படுத்தும் நடவடிக்கையில் முள்ளியவளை பொலிசார் ஈடுபட்டுள்ளார்கள்.

Advertisement

Advertisement

Advertisement