• Jul 21 2025

மருத்துவக் கனவுகளுடன் ரஷ்யா சென்ற மாணவன்; சிறையில் சித்திரவதை - கதறும் பெற்றோர் !

shanuja / Jul 21st 2025, 1:09 pm
image

தமிழகத்திலிருந்து மருத்துவ கற்கைக்காக கனவுகளுடன் ரஷ்யா சென்றுள்ள மாணவன் ஒருவர், தன்னை சிறையில் சித்திரவதை செய்கின்றனர் என்று பெற்றோருக்கு காணொலி ஒன்றை அனுப்பியுள்ளார். 


கடலுார் மாவட்டம், சேத்தியாத்தோப்பு அடுத்த பாளையங்கோட்டையைச் சேர்ந்த சரவணன் கிஷோர், மருத்துவ கற்கைக்கு  கடந்த 2021 ஆம் ஆண்டு ரஷ்யா சென்றார். 


ரஷ்யாவில் சேலம் மாவட்டம், எடப்பாடியைச் சேர்ந்த நித்திஷ், மற்றும் 3 ரஷ்ய மாணவர்களுடன் அறையில் தங்கியிருந்தார்.  படிப்பு செலவிற்காக நண்பர்களுடன் இணைந்து  கூரியர் நிறுவனத்தில் பகுதி நேர பணியில் ஈடுபட்டார். 


இந்த நிலையில் கடந்த 2023 ஆம் ஆண்டு மே மாதம், வாடிக்கையாளர்களிடம் பொருட்களை டெலிவரி செய்யும் போது அதில் ரஷ்ய நாட்டில் தடைசெய்யப்பட்ட பொருள் இருந்ததாக கூறி, ரஷ்ய  பொலிஸாரால் குறித்த மாணவன் உட்பட அவனது நண்பர்கள் கைது செய்யப்பட்டனர்.


இது தொடர்பில் தமிழக மாணவர்களின்  பெற்றோருக்கு தகவல் தெரிவிக்கப்பட்ட நிலையில், அவர்களை மீட்கும் முயற்சியில் இற்றைவரை ஈடுபட்டு வருகின்றனர். கைது செய்யப்பட்டவர்களில் 3 ரஷ்ய மாணவர்கள் விடுவிக்கப்பட்டு, தமிழகத்தைச் சேர்ந்த இருவரும் சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர்.


இந்த நிலையில் சிறையில் உள்ள கடலுார் மாவட்டத்தைச் சேர்ந்த மாணவன்  சரவணன் கிஷோர், தனது பெற்றோருக்கு  காணொலி ஒன்றை அனுப்பியுள்ளார். அதில் தங்களை சிறையில் சித்திரவதை செய்வதாகவும், போர்முனைக்கு அனுப்ப கட்டாயப்படுத்தி ஆவணங்களில் கையெழுத்து பெறுவதாகவும் தெரிவித்துள்ளார். 


அதன்பின்னர் மற்றொரு காணொலியில் தன்னை போருக்கு வாகனத்தில் ஏற்றி அழைத்து செல்வதாக படபடப்புடன் தெரிவித்துள்ளார்.

காணொலியைக் கேட்டு அச்சமடைந்த அவரது பெற்றோர், மருத்துவக் கனவுகளுடன் கல்வி கற்கவே மகனை அனுப்பினோம். எங்களது மகனை மீட்க தமிழக அரசு முன்வர வேண்டும். பிரதமர் மோடி, முதல்வர் ஆகியோர் இதில் தலையிட்டு எங்களது மகனை மீட்டுத் தாருங்கள் என்று கதறி கோரிக்கை விடுத்துள்ளனர். 


பெற்றோர் கதறிய காணொளி தற்போது சமூக வலைத்தளங்களில் வெளியாகி, பெரும் சோகத்தை ஏற்படுத்தியதுடன், மாணவனை மீட்க வேண்டும் என்று பலரும் மாணவனுக்கு ஆதரவாக கருத்துக்களைப் பதிவிட்டு வருகின்றனர்.

மருத்துவக் கனவுகளுடன் ரஷ்யா சென்ற மாணவன்; சிறையில் சித்திரவதை - கதறும் பெற்றோர் தமிழகத்திலிருந்து மருத்துவ கற்கைக்காக கனவுகளுடன் ரஷ்யா சென்றுள்ள மாணவன் ஒருவர், தன்னை சிறையில் சித்திரவதை செய்கின்றனர் என்று பெற்றோருக்கு காணொலி ஒன்றை அனுப்பியுள்ளார். கடலுார் மாவட்டம், சேத்தியாத்தோப்பு அடுத்த பாளையங்கோட்டையைச் சேர்ந்த சரவணன் கிஷோர், மருத்துவ கற்கைக்கு  கடந்த 2021 ஆம் ஆண்டு ரஷ்யா சென்றார். ரஷ்யாவில் சேலம் மாவட்டம், எடப்பாடியைச் சேர்ந்த நித்திஷ், மற்றும் 3 ரஷ்ய மாணவர்களுடன் அறையில் தங்கியிருந்தார்.  படிப்பு செலவிற்காக நண்பர்களுடன் இணைந்து  கூரியர் நிறுவனத்தில் பகுதி நேர பணியில் ஈடுபட்டார். இந்த நிலையில் கடந்த 2023 ஆம் ஆண்டு மே மாதம், வாடிக்கையாளர்களிடம் பொருட்களை டெலிவரி செய்யும் போது அதில் ரஷ்ய நாட்டில் தடைசெய்யப்பட்ட பொருள் இருந்ததாக கூறி, ரஷ்ய  பொலிஸாரால் குறித்த மாணவன் உட்பட அவனது நண்பர்கள் கைது செய்யப்பட்டனர்.இது தொடர்பில் தமிழக மாணவர்களின்  பெற்றோருக்கு தகவல் தெரிவிக்கப்பட்ட நிலையில், அவர்களை மீட்கும் முயற்சியில் இற்றைவரை ஈடுபட்டு வருகின்றனர். கைது செய்யப்பட்டவர்களில் 3 ரஷ்ய மாணவர்கள் விடுவிக்கப்பட்டு, தமிழகத்தைச் சேர்ந்த இருவரும் சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர்.இந்த நிலையில் சிறையில் உள்ள கடலுார் மாவட்டத்தைச் சேர்ந்த மாணவன்  சரவணன் கிஷோர், தனது பெற்றோருக்கு  காணொலி ஒன்றை அனுப்பியுள்ளார். அதில் தங்களை சிறையில் சித்திரவதை செய்வதாகவும், போர்முனைக்கு அனுப்ப கட்டாயப்படுத்தி ஆவணங்களில் கையெழுத்து பெறுவதாகவும் தெரிவித்துள்ளார். அதன்பின்னர் மற்றொரு காணொலியில் தன்னை போருக்கு வாகனத்தில் ஏற்றி அழைத்து செல்வதாக படபடப்புடன் தெரிவித்துள்ளார்.காணொலியைக் கேட்டு அச்சமடைந்த அவரது பெற்றோர், மருத்துவக் கனவுகளுடன் கல்வி கற்கவே மகனை அனுப்பினோம். எங்களது மகனை மீட்க தமிழக அரசு முன்வர வேண்டும். பிரதமர் மோடி, முதல்வர் ஆகியோர் இதில் தலையிட்டு எங்களது மகனை மீட்டுத் தாருங்கள் என்று கதறி கோரிக்கை விடுத்துள்ளனர். பெற்றோர் கதறிய காணொளி தற்போது சமூக வலைத்தளங்களில் வெளியாகி, பெரும் சோகத்தை ஏற்படுத்தியதுடன், மாணவனை மீட்க வேண்டும் என்று பலரும் மாணவனுக்கு ஆதரவாக கருத்துக்களைப் பதிவிட்டு வருகின்றனர்.

Advertisement

Advertisement

Advertisement