• Jul 21 2025

ஹம்பாந்தோட்டையில் மீண்டும் தொடங்கிய உப்பு உற்பத்தி

Chithra / Jul 21st 2025, 2:21 pm
image

 

18 மாதங்களுக்குப் பிறகு லங்கா உப்பு நிறுவனம் ஹம்பாந்தோட்டையில் உப்பு உற்பத்தியை மீண்டும் தொடங்கியுள்ளது.

இந்த முறை எதிர்பார்க்கப்படும் உப்பு உற்பத்தி 40,000 மெட்ரிக் தொன் என்று லங்கா உப்பு நிறுவனத்தின் தலைவர் டி. நந்தன திலக தெரிவித்துள்ளார்.

வானிலை காரணமாக 18 மாதங்களுக்கு முன்பு ஹம்பாந்தோட்டையில் உப்பு உற்பத்தியை நிறுத்த நிறுவனம் நடவடிக்கை எடுத்திருந்தது.

அதனை தொடர்ந்து, இன்று (21) காலை உப்பு உற்பத்தி மீண்டும் தொடங்கியுள்ளது. 

கடந்த ஆண்டு ஒரு இலட்சம் மெட்ரிக் தொன் உப்பு எதிர்பார்க்கப்பட்ட போதிலும், 40,000 மெட்ரிக் தொன் உப்பு மட்டுமே பெறப்பட்டது.

ஹம்பாந்தோட்டை மகாலேவாவிலும் நாளை  உப்பு அறுவடை தொடங்குமென அவர் மேலும் தெரிவித்துள்ளார்.


ஹம்பாந்தோட்டையில் மீண்டும் தொடங்கிய உப்பு உற்பத்தி  18 மாதங்களுக்குப் பிறகு லங்கா உப்பு நிறுவனம் ஹம்பாந்தோட்டையில் உப்பு உற்பத்தியை மீண்டும் தொடங்கியுள்ளது.இந்த முறை எதிர்பார்க்கப்படும் உப்பு உற்பத்தி 40,000 மெட்ரிக் தொன் என்று லங்கா உப்பு நிறுவனத்தின் தலைவர் டி. நந்தன திலக தெரிவித்துள்ளார்.வானிலை காரணமாக 18 மாதங்களுக்கு முன்பு ஹம்பாந்தோட்டையில் உப்பு உற்பத்தியை நிறுத்த நிறுவனம் நடவடிக்கை எடுத்திருந்தது.அதனை தொடர்ந்து, இன்று (21) காலை உப்பு உற்பத்தி மீண்டும் தொடங்கியுள்ளது. கடந்த ஆண்டு ஒரு இலட்சம் மெட்ரிக் தொன் உப்பு எதிர்பார்க்கப்பட்ட போதிலும், 40,000 மெட்ரிக் தொன் உப்பு மட்டுமே பெறப்பட்டது.ஹம்பாந்தோட்டை மகாலேவாவிலும் நாளை  உப்பு அறுவடை தொடங்குமென அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

Advertisement

Advertisement

Advertisement