• May 25 2026

பாதுகாப்பற்ற மதகில் வீழ்ந்த மாணவி உயிரிழப்பு; சீரற்ற வானிலையால் 8000க்கும் மேற்பட்டோர் பாதிப்பு

Chithra / Oct 22nd 2025, 8:10 am
image


கனமழை காரணமாக பாதுகாப்பற்ற மதகில் வீழ்ந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த மாணவி ஒருவர் நேற்று உயிரிழந்துள்ளார்.

உயிரிழந்த மாணவி ஹங்வெல்ல ராஜசிங்க மத்திய கல்லூரியில் கல்வி பயின்று வந்த மாணவி என தெரியவந்துள்ளது.

குறித்த மாணவி பேருந்து தரிப்பிடம் அருகே காத்திருந்தபோது, அவர் பாதுகாப்பற்ற மதகில் சிக்கிக் கொண்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

பின்னர், அப்பகுதி மக்கள் ஒன்றிணைந்து அவரை அவிசாவளை மருத்துவமனையில் அனுமதித்தனர்.

இந்தநிலையில் அவர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் சிகிச்சை பலனின்றி  உயிரிழந்தார்.

இந்நிலையில் நாட்டில் நிலவும் சீரற்ற வானிலை காரணமாக, ஆறு மாவட்டங்களில் 2052 குடும்பங்களைச் சேர்ந்த 8346 பேர் பாதிக்கப்பட்டுள்ளதாக பேரிடர் முகாமைத்துவ மையம் தெரிவித்துள்ளது.

இதுவரை 335 வீடுகள் பகுதியளவில் சேதமடைந்துள்ளன, மேலும் பல பகுதிகளில் வெள்ளம், மண்சரிவு மற்றும் பலத்த காற்றால் சேதங்கள் பதிவாகியுள்ளன.

வளிமண்டலவியல் திணைக்களம், அடுத்த 12 மணி நேரத்தில் 150 மி.மீ. அளவில் கனமழை பெய்யக்கூடும் என எச்சரிக்கை விடுத்துள்ளது.

மழை காரணமாக பல நீர்த்தேக்கங்களின் வான் கதவுகள் திறக்கப்பட்டுள்ளன, அதேசமயம் மண்சரிவால் மலையக ரயில் போக்குவரத்து தடம் புரண்ட நிலையில், இன்று நண்பகல் வரை சேவைகள் வழமைக்கு திரும்பாது என ரயில்வே திணைக்களம் தெரிவித்துள்ளது.

இதனிடையே, 11 மாவட்டங்களுக்கு மண்சரிவு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளதுடன், பல பகுதிகளில் வெள்ளப்பெருக்கு மற்றும் போக்குவரத்து நெரிசல் நிலவுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.


பாதுகாப்பற்ற மதகில் வீழ்ந்த மாணவி உயிரிழப்பு; சீரற்ற வானிலையால் 8000க்கும் மேற்பட்டோர் பாதிப்பு கனமழை காரணமாக பாதுகாப்பற்ற மதகில் வீழ்ந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த மாணவி ஒருவர் நேற்று உயிரிழந்துள்ளார்.உயிரிழந்த மாணவி ஹங்வெல்ல ராஜசிங்க மத்திய கல்லூரியில் கல்வி பயின்று வந்த மாணவி என தெரியவந்துள்ளது.குறித்த மாணவி பேருந்து தரிப்பிடம் அருகே காத்திருந்தபோது, அவர் பாதுகாப்பற்ற மதகில் சிக்கிக் கொண்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.பின்னர், அப்பகுதி மக்கள் ஒன்றிணைந்து அவரை அவிசாவளை மருத்துவமனையில் அனுமதித்தனர்.இந்தநிலையில் அவர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் சிகிச்சை பலனின்றி  உயிரிழந்தார்.இந்நிலையில் நாட்டில் நிலவும் சீரற்ற வானிலை காரணமாக, ஆறு மாவட்டங்களில் 2052 குடும்பங்களைச் சேர்ந்த 8346 பேர் பாதிக்கப்பட்டுள்ளதாக பேரிடர் முகாமைத்துவ மையம் தெரிவித்துள்ளது.இதுவரை 335 வீடுகள் பகுதியளவில் சேதமடைந்துள்ளன, மேலும் பல பகுதிகளில் வெள்ளம், மண்சரிவு மற்றும் பலத்த காற்றால் சேதங்கள் பதிவாகியுள்ளன.வளிமண்டலவியல் திணைக்களம், அடுத்த 12 மணி நேரத்தில் 150 மி.மீ. அளவில் கனமழை பெய்யக்கூடும் என எச்சரிக்கை விடுத்துள்ளது.மழை காரணமாக பல நீர்த்தேக்கங்களின் வான் கதவுகள் திறக்கப்பட்டுள்ளன, அதேசமயம் மண்சரிவால் மலையக ரயில் போக்குவரத்து தடம் புரண்ட நிலையில், இன்று நண்பகல் வரை சேவைகள் வழமைக்கு திரும்பாது என ரயில்வே திணைக்களம் தெரிவித்துள்ளது.இதனிடையே, 11 மாவட்டங்களுக்கு மண்சரிவு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளதுடன், பல பகுதிகளில் வெள்ளப்பெருக்கு மற்றும் போக்குவரத்து நெரிசல் நிலவுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

Advertisement

Advertisement

Advertisement