• Oct 21 2026

இன்றும் பலத்த மின்னல் அபாயம்! 7 மாகாணங்களுக்கு கடும் எச்சரிக்கை

Chithra / Oct 20th 2026, 2:27 pm
image


நாட்டின் பல மாகாணங்களில் கடுமையான மின்னல் தாக்கங்கள் ஏற்படக்கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் அவசர எச்சரிக்கை விடுத்துள்ளது.


அதன்படி, மத்திய, சப்ரகமுவ, வடமத்திய, கிழக்கு, வடக்கு, ஊவா மற்றும் தென் மாகாணங்களுக்கும் குருநாகல் மாவட்டத்திற்கும் இந்த எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.


இன்று (20) முற்பகல் 11.30 மணிக்கு வெளியிடப்பட்ட இந்த எச்சரிக்கை, நாளை (21) அதிகாலை 1.30 மணி வரை அமுலில் இருக்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது.


குறித்த பகுதிகளில் பல இடங்களில் இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடும் என்பதுடன், கடுமையான மின்னல் தாக்கங்களும் ஏற்படுவதற்கான சாத்தியக்கூறுகள் காணப்படுவதாக வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது.


மேலும், இடியுடன் கூடிய மழை பெய்யும் சந்தர்ப்பங்களில் தற்காலிகமாகப் பலத்த காற்றும் வீசக்கூடும் என எச்சரிக்கப்பட்டுள்ளது.


இதன் காரணமாக, பொதுமக்கள் மின்னல் தாக்கங்களிலிருந்து தங்களைப் பாதுகாத்துக்கொள்ளத் தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.


குறிப்பாக, இடியுடன் கூடிய மழை பெய்யும் வேளைகளில் பாதுகாப்பான கட்டடங்களுக்குள் தங்கியிருக்குமாறும், திறந்தவெளிகள் மற்றும் மரங்களுக்கு அடியில் நிற்பதைத் தவிர்க்குமாறும் கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளனர்.


அத்துடன், மின்னல் தாக்கங்கள் ஏற்படும் சந்தர்ப்பங்களில் மின்சார இணைப்புக் கம்பிகளுடன் தொடர்புடைய சாதனங்களைப் பயன்படுத்துவதைத் தவிர்க்குமாறும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.


பலத்த காற்றினால் மரங்கள் முறிந்து விழுதல் மற்றும் மின்கம்பிகள் அறுந்து விழுதல் போன்ற அபாயங்கள் ஏற்படக்கூடும் என்பதால், பொதுமக்கள் மிகுந்த அவதானத்துடன் செயற்படுமாறு வளிமண்டலவியல் திணைக்களம் வலியுறுத்தியுள்ளது.

இன்றும் பலத்த மின்னல் அபாயம் 7 மாகாணங்களுக்கு கடும் எச்சரிக்கை நாட்டின் பல மாகாணங்களில் கடுமையான மின்னல் தாக்கங்கள் ஏற்படக்கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் அவசர எச்சரிக்கை விடுத்துள்ளது.அதன்படி, மத்திய, சப்ரகமுவ, வடமத்திய, கிழக்கு, வடக்கு, ஊவா மற்றும் தென் மாகாணங்களுக்கும் குருநாகல் மாவட்டத்திற்கும் இந்த எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.இன்று (20) முற்பகல் 11.30 மணிக்கு வெளியிடப்பட்ட இந்த எச்சரிக்கை, நாளை (21) அதிகாலை 1.30 மணி வரை அமுலில் இருக்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது.குறித்த பகுதிகளில் பல இடங்களில் இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடும் என்பதுடன், கடுமையான மின்னல் தாக்கங்களும் ஏற்படுவதற்கான சாத்தியக்கூறுகள் காணப்படுவதாக வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது.மேலும், இடியுடன் கூடிய மழை பெய்யும் சந்தர்ப்பங்களில் தற்காலிகமாகப் பலத்த காற்றும் வீசக்கூடும் என எச்சரிக்கப்பட்டுள்ளது.இதன் காரணமாக, பொதுமக்கள் மின்னல் தாக்கங்களிலிருந்து தங்களைப் பாதுகாத்துக்கொள்ளத் தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.குறிப்பாக, இடியுடன் கூடிய மழை பெய்யும் வேளைகளில் பாதுகாப்பான கட்டடங்களுக்குள் தங்கியிருக்குமாறும், திறந்தவெளிகள் மற்றும் மரங்களுக்கு அடியில் நிற்பதைத் தவிர்க்குமாறும் கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளனர்.அத்துடன், மின்னல் தாக்கங்கள் ஏற்படும் சந்தர்ப்பங்களில் மின்சார இணைப்புக் கம்பிகளுடன் தொடர்புடைய சாதனங்களைப் பயன்படுத்துவதைத் தவிர்க்குமாறும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.பலத்த காற்றினால் மரங்கள் முறிந்து விழுதல் மற்றும் மின்கம்பிகள் அறுந்து விழுதல் போன்ற அபாயங்கள் ஏற்படக்கூடும் என்பதால், பொதுமக்கள் மிகுந்த அவதானத்துடன் செயற்படுமாறு வளிமண்டலவியல் திணைக்களம் வலியுறுத்தியுள்ளது.

Advertisement

Advertisement

Advertisement