QR முறையன்றி எரிபொருளை விநியோகிக்கும் எரிபொருள் நிரப்பு நிலையங்களுக்கு எதிராக சட்டம் நடைமுறைப்படுத்தப்படும் என்றும், அவர்களின் அனுமதிப்பத்திரத்தை ரத்துச் செய்ய நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் இலங்கை பெற்றோலியக் கூட்டுத்தாபனத்தின் தலைவர் டி.ஜே. ராஜகருணா தெரிவித்துள்ளார்.
அவ்வாறான எரிபொருள் நிரப்பு நிலையங்கள் குறித்து பொதுமக்கள் தொடர்ந்து பொலிஸாருக்கோ அல்லது எரிபொருள் கூட்டுத்தாபனத்திற்கோ தகவல் வழங்குமாறு தலைவர் கோரிக்கை விடுத்துள்ளார்.
இதேவேளை, கச்சா எண்ணெய் கப்பல் ஒன்றை உறுதிப்படுத்தும் வரை நாட்டுக்கு எரிபொருளைப் பெற்றுக்கொள்வதில் ஒருவித அபாயம் காணப்படுவதாகவும் டி.ஜே. ராஜகருணா மேலும் தெரிவித்தார்.
இந்த நிலையை கட்டுப்படுத்த வேண்டும் என்றும், அதன்படி QR குறியீட்டைப் பயன்படுத்துவது கட்டாயமாகும் என்றும் சுட்டிக்காட்டினார்.
QR முறையைத் தவிர்த்து செயல்படும் எரிபொருள் நிரப்பும் நிலையங்களுக்கு கடும் எச்சரிக்கை QR முறையன்றி எரிபொருளை விநியோகிக்கும் எரிபொருள் நிரப்பு நிலையங்களுக்கு எதிராக சட்டம் நடைமுறைப்படுத்தப்படும் என்றும், அவர்களின் அனுமதிப்பத்திரத்தை ரத்துச் செய்ய நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் இலங்கை பெற்றோலியக் கூட்டுத்தாபனத்தின் தலைவர் டி.ஜே. ராஜகருணா தெரிவித்துள்ளார். அவ்வாறான எரிபொருள் நிரப்பு நிலையங்கள் குறித்து பொதுமக்கள் தொடர்ந்து பொலிஸாருக்கோ அல்லது எரிபொருள் கூட்டுத்தாபனத்திற்கோ தகவல் வழங்குமாறு தலைவர் கோரிக்கை விடுத்துள்ளார். இதேவேளை, கச்சா எண்ணெய் கப்பல் ஒன்றை உறுதிப்படுத்தும் வரை நாட்டுக்கு எரிபொருளைப் பெற்றுக்கொள்வதில் ஒருவித அபாயம் காணப்படுவதாகவும் டி.ஜே. ராஜகருணா மேலும் தெரிவித்தார். இந்த நிலையை கட்டுப்படுத்த வேண்டும் என்றும், அதன்படி QR குறியீட்டைப் பயன்படுத்துவது கட்டாயமாகும் என்றும் சுட்டிக்காட்டினார்.