• Apr 14 2026

நான்கு மாவட்டங்களுக்கு முதலாம் கட்ட மண்சரிவு எச்சரிக்கை

dorin / Apr 13th 2026, 9:22 pm
image

நாட்டின் நான்கு மாவட்டங்களுக்கு தேசிய கட்டிட ஆராய்ச்சி நிறுவனம் முதலாம் கட்ட மண்சரிவு எச்சரிக்கையை விடுத்துள்ளது. 

இந்த எச்சரிக்கை அறிவித்தல் இன்று  பிற்பகல் 04.00 மணி முதல் நாளை பிற்பகல் 04.00 மணி வரை நடைமுறையில் இருக்கும் என அந்த நிறுவனம் தெரிவித்துள்ளது. 

இதன்படி, கண்டி, நுவரெலியா, கேகாலை மற்றும் இரத்தினபுரி ஆகிய மாவட்டங்களின் சில பிரதேச செயலக பிரிவுகளுக்கு இவ்வாறு முதலாம் கட்ட 'கவனம் செலுத்துக' (Level 1 - Watch) எனும் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. 

கண்டி மாவட்டம்: யட்டிநுவர பிரதேச செயலக பிரிவு. 

கேகாலை மாவட்டம்: வரக்காபொல, கேகாலை மற்றும் ரம்புக்கனை பிரதேச செயலக பிரிவுகள். 

நுவரெலியா மாவட்டம்: நுவரெலியா மற்றும் அம்பகமுவ பிரதேச செயலக பிரிவுகள். 

இரத்தினபுரி மாவட்டம்: இம்புல்பே, குருவிட்ட, ஓப்பநாயக்க, பெல்மதுளை மற்றும் இரத்தினபுரி பிரதேச செயலக பிரிவுகள்.

நான்கு மாவட்டங்களுக்கு முதலாம் கட்ட மண்சரிவு எச்சரிக்கை நாட்டின் நான்கு மாவட்டங்களுக்கு தேசிய கட்டிட ஆராய்ச்சி நிறுவனம் முதலாம் கட்ட மண்சரிவு எச்சரிக்கையை விடுத்துள்ளது. இந்த எச்சரிக்கை அறிவித்தல் இன்று  பிற்பகல் 04.00 மணி முதல் நாளை பிற்பகல் 04.00 மணி வரை நடைமுறையில் இருக்கும் என அந்த நிறுவனம் தெரிவித்துள்ளது. இதன்படி, கண்டி, நுவரெலியா, கேகாலை மற்றும் இரத்தினபுரி ஆகிய மாவட்டங்களின் சில பிரதேச செயலக பிரிவுகளுக்கு இவ்வாறு முதலாம் கட்ட 'கவனம் செலுத்துக' (Level 1 - Watch) எனும் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. கண்டி மாவட்டம்: யட்டிநுவர பிரதேச செயலக பிரிவு. கேகாலை மாவட்டம்: வரக்காபொல, கேகாலை மற்றும் ரம்புக்கனை பிரதேச செயலக பிரிவுகள். நுவரெலியா மாவட்டம்: நுவரெலியா மற்றும் அம்பகமுவ பிரதேச செயலக பிரிவுகள். இரத்தினபுரி மாவட்டம்: இம்புல்பே, குருவிட்ட, ஓப்பநாயக்க, பெல்மதுளை மற்றும் இரத்தினபுரி பிரதேச செயலக பிரிவுகள்.

Advertisement

Advertisement

Advertisement