• Sep 14 2025

மியன்மார் சைபர் குற்ற முகாம்களில் மீண்டும் சிக்கியுள்ள இலங்கையர்கள்

Chithra / Sep 14th 2025, 8:16 am
image


மியான்மரில் உள்ள சைபர் குற்ற முகாம்களில் மேலும் 13 இலங்கையர்கள் தடுத்து வைக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் கிடைத்துள்ளதாக வௌிவிவகார அமைச்சு தெரிவித்துள்ளது. 

சுற்றுலா விசாவில் வந்த ஒரு குழு இந்த சைபர் முகாம்களில் தடுத்து வைக்கப்பட்டுள்ளதாக வௌிவிவகார அமைச்சின் ஊடகப் பேச்சாளர் துஷாரா ரோட்ரிக் அத தெரணவிடம் தெரிவித்தார். 

மியான்மரின் மியாவடி பகுதிக்கு அருகில் அமைந்துள்ள இந்த சைபர் முகாம்கள் பயங்கரவாத குழுக்களால் கட்டுப்படுத்தப்படுகின்றன. 

ஏராளமான இலங்கையர்கள் இந்த முகாம்களில் ஏற்கனவே தடுத்து வைக்கப்பட்டிருந்தனர். 

தூதரகங்களின் தலையீட்டால், பல சந்தர்ப்பங்களில் அங்கிருந்த இலங்கையர்களை மீண்டும் நாட்டிற்கு அழைத்து வருவதற்கான முயற்சிகள் முன்னெடுக்கப்பட்டிருந்தன. 

கணினித் துறையில் வேலை வாய்ப்பை பெற்றுக்கொள்வதற்கு விரும்பும் சில இலங்கையர்கள் சுற்றுலா விசாவில் வெளிநாடுகளுக்குச் சென்று பின்னர் இதுபோன்ற கடத்தல்காரர்களிடம் சிக்கிக் கொள்வதாக இலங்கை வெளிவிவகார அமைச்சு சுட்டிக்காட்டுகிறது.

மியன்மார் சைபர் குற்ற முகாம்களில் மீண்டும் சிக்கியுள்ள இலங்கையர்கள் மியான்மரில் உள்ள சைபர் குற்ற முகாம்களில் மேலும் 13 இலங்கையர்கள் தடுத்து வைக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் கிடைத்துள்ளதாக வௌிவிவகார அமைச்சு தெரிவித்துள்ளது. சுற்றுலா விசாவில் வந்த ஒரு குழு இந்த சைபர் முகாம்களில் தடுத்து வைக்கப்பட்டுள்ளதாக வௌிவிவகார அமைச்சின் ஊடகப் பேச்சாளர் துஷாரா ரோட்ரிக் அத தெரணவிடம் தெரிவித்தார். மியான்மரின் மியாவடி பகுதிக்கு அருகில் அமைந்துள்ள இந்த சைபர் முகாம்கள் பயங்கரவாத குழுக்களால் கட்டுப்படுத்தப்படுகின்றன. ஏராளமான இலங்கையர்கள் இந்த முகாம்களில் ஏற்கனவே தடுத்து வைக்கப்பட்டிருந்தனர். தூதரகங்களின் தலையீட்டால், பல சந்தர்ப்பங்களில் அங்கிருந்த இலங்கையர்களை மீண்டும் நாட்டிற்கு அழைத்து வருவதற்கான முயற்சிகள் முன்னெடுக்கப்பட்டிருந்தன. கணினித் துறையில் வேலை வாய்ப்பை பெற்றுக்கொள்வதற்கு விரும்பும் சில இலங்கையர்கள் சுற்றுலா விசாவில் வெளிநாடுகளுக்குச் சென்று பின்னர் இதுபோன்ற கடத்தல்காரர்களிடம் சிக்கிக் கொள்வதாக இலங்கை வெளிவிவகார அமைச்சு சுட்டிக்காட்டுகிறது.

Advertisement

Advertisement

Advertisement