மீன் பிடி தடைக்காலம் நிறைவடைந்த நிலையில் மீன் பிடிக்க கடலுக்குச் சென்ற ராமேஸ்வரம் மீனவர்கள் மீது நடுக்கடலில் இலங்கை கடற்படையினர் தாக்குதல் நடத்தி விரட்டி அடித்ததாக கரை திரும்பிய மீனவர்கள் குற்றம் சாட்டியுள்ளனர்.
மேலும் மீன்பிடி தடைக்காலம் முடிந்து மீன் பிடிக்க சென்ற மீனவர்களுக்கு எதிர்பார்த்த மீன் வரத்து இல்லை என வேதனை தெரிவித்துள்ளனர்.
தமிழக அரசால் ஆண்டு தோறும் அமல்படுத்தப்படும் மீன்பிடி தடைக்காலம் கடந்த ஏப்ரல் மாதம் 15 ஆம் திகதி தொடங்கி ஜூன் மாதம் 14ஆம் திகதி நள்ளிரவுடன் நிறைவடைந்தது.
மீன் பிடி தடைக்காலம் நிறைவடைந்த நிலையில் ராமேஸ்வரம் பகுதி மீனவர்கள் மீன்பிடிக்க கடலுக்கு செல்ல கடந்த திங்கட்கிழமை தயாரான நிலையில், வங்க கடலில் வீசிய சூறைக்காற்று காரணமாக, அரசால் மீனவர்களுக்கு வழங்கப்படும் மீன்பிடி அனுமதிச்சீட்டு ரத்து செய்யப்பட்டது.
இதனையடுத்து மீன்பிடி தடைக்காலம் முடிந்து 64 நாட்களின் பின் நேற்று ராமேஸ்வரம் துறைமுகத்திலிருந்து 400க்கும் மேற்பட்ட விசைப்படகுகளில் 5 ஆயிரத்திற்கும் மேற்பட்ட மீனவர்கள் மீன்பிடிக்க கடலுக்குச் சென்றனர்.
மீனவர்கள் கச்சத்தீவுக்கும் தனுஷ்கோடிக்கும் இடையே மீன் பிடித்து கொண்டிருந்த போது அப்பகுதியில் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்த இலங்கை கடற்படையினர் எல்லை தாண்டி மீன்பிடித்ததாக மீனவர்களை விரட்டி அடித்ததாகவும், ஒரு சில படகில் இருந்த மீனவர்கள் மீது தாக்குதல் நடத்தியதாகவும் சொல்லப்படுகிறது.
இதனால் பெருத்த நஷ்டத்துடன் கரை திரும்பியதாக மீனவர்கள் புகார் தெரிவித்துள்ளனர்.
மேலும் தடைகாலம் முடிந்து மீன்பிடிக்கச் செல்லும் மீனவர்களுக்கு இறால், நண்டு கணவாய் உள்ளிட்ட வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்யப்படும் மீன்கள் அதிகளவு கிடைக்கும்.
ஆனால் மீன்பிடி தடைக்காலத்தின் போது இயந்திரம் பொருத்தப்பட்ட நாட்டுப்படகு மீனவர்கள் மீன்பிடியில் ஈடுபட்டதால் தடைகாலம் முடிந்து மீன் பிடிக்க சென்ற விசைப்படகு மீனவர்கள் எதிர்பார்த்த மீன்பாடு இல்லை. இதனால் படகு ஒன்றுக்கு சுமார் 50 ஆயிரம் முதல் 70 ஆயிரம் வரை நஷ்டம் ஏற்பட்டுள்ளதாக வேதனை தெரிவித்துள்ளனர்.
தடைகாலம் முடிந்து மீன்பிடிக்க சென்ற இந்திய மீனவர்கள் மீது இலங்கை கடற்படை தாக்குதல் மீன் பிடி தடைக்காலம் நிறைவடைந்த நிலையில் மீன் பிடிக்க கடலுக்குச் சென்ற ராமேஸ்வரம் மீனவர்கள் மீது நடுக்கடலில் இலங்கை கடற்படையினர் தாக்குதல் நடத்தி விரட்டி அடித்ததாக கரை திரும்பிய மீனவர்கள் குற்றம் சாட்டியுள்ளனர். மேலும் மீன்பிடி தடைக்காலம் முடிந்து மீன் பிடிக்க சென்ற மீனவர்களுக்கு எதிர்பார்த்த மீன் வரத்து இல்லை என வேதனை தெரிவித்துள்ளனர்.தமிழக அரசால் ஆண்டு தோறும் அமல்படுத்தப்படும் மீன்பிடி தடைக்காலம் கடந்த ஏப்ரல் மாதம் 15 ஆம் திகதி தொடங்கி ஜூன் மாதம் 14ஆம் திகதி நள்ளிரவுடன் நிறைவடைந்தது. மீன் பிடி தடைக்காலம் நிறைவடைந்த நிலையில் ராமேஸ்வரம் பகுதி மீனவர்கள் மீன்பிடிக்க கடலுக்கு செல்ல கடந்த திங்கட்கிழமை தயாரான நிலையில், வங்க கடலில் வீசிய சூறைக்காற்று காரணமாக, அரசால் மீனவர்களுக்கு வழங்கப்படும் மீன்பிடி அனுமதிச்சீட்டு ரத்து செய்யப்பட்டது.இதனையடுத்து மீன்பிடி தடைக்காலம் முடிந்து 64 நாட்களின் பின் நேற்று ராமேஸ்வரம் துறைமுகத்திலிருந்து 400க்கும் மேற்பட்ட விசைப்படகுகளில் 5 ஆயிரத்திற்கும் மேற்பட்ட மீனவர்கள் மீன்பிடிக்க கடலுக்குச் சென்றனர். மீனவர்கள் கச்சத்தீவுக்கும் தனுஷ்கோடிக்கும் இடையே மீன் பிடித்து கொண்டிருந்த போது அப்பகுதியில் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்த இலங்கை கடற்படையினர் எல்லை தாண்டி மீன்பிடித்ததாக மீனவர்களை விரட்டி அடித்ததாகவும், ஒரு சில படகில் இருந்த மீனவர்கள் மீது தாக்குதல் நடத்தியதாகவும் சொல்லப்படுகிறது. இதனால் பெருத்த நஷ்டத்துடன் கரை திரும்பியதாக மீனவர்கள் புகார் தெரிவித்துள்ளனர். மேலும் தடைகாலம் முடிந்து மீன்பிடிக்கச் செல்லும் மீனவர்களுக்கு இறால், நண்டு கணவாய் உள்ளிட்ட வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்யப்படும் மீன்கள் அதிகளவு கிடைக்கும்.ஆனால் மீன்பிடி தடைக்காலத்தின் போது இயந்திரம் பொருத்தப்பட்ட நாட்டுப்படகு மீனவர்கள் மீன்பிடியில் ஈடுபட்டதால் தடைகாலம் முடிந்து மீன் பிடிக்க சென்ற விசைப்படகு மீனவர்கள் எதிர்பார்த்த மீன்பாடு இல்லை. இதனால் படகு ஒன்றுக்கு சுமார் 50 ஆயிரம் முதல் 70 ஆயிரம் வரை நஷ்டம் ஏற்பட்டுள்ளதாக வேதனை தெரிவித்துள்ளனர்.