• May 02 2026

இலங்கை வம்சாவளி நடிகை சென்னையில் எடுத்த விபரீத முடிவு

Chithra / Apr 6th 2026, 2:14 pm
image

இலங்கையை பூர்வீகமாக கொண்ட நடிகை சுபாஷினி சென்னை போரூர் அருகே உள்ள பிரபலமான அடுக்குமாடி குடியிருப்பிலுள்ள தனது அறையில் நேற்று இரவு  உயிர்மாய்த்துள்ளதாக தகவல்கள்  வெளியாகியுள்ளது. 


இதுதொடர்பில் தகவல் அறிந்த பொலிஸார் அவரது உடலை பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். 


முதல்கட்ட விசாரணையில் கணவருடன் வீடியோ அழைப்பில் பேசிய பிறகு அவர் இந்த முடிவை எடுத்ததாக கூறப்படுகின்றது. 


இதனால், குடும்பத்தகராறு காரணமாக ஏற்பட்ட மனஉளைச்சலில் இந்த விபரீத முடிவை எடுத்தாரா? என்றும் பொலிஸார் விசாரித்து வருகின்றனர்.

 

பெங்களூரில் கணவருடன் வசித்து வந்த நடிகை சுபாஷினி ஷூட்டிங்கிற்காக சென்ற இடத்தில் உயிர்மாய்த்துள்ளமை பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. 


நடிகை சுபாஷினி 'கயல்' என்ற சின்னத்திரை தொடரில் நடித்து வந்தார். திரைப்படங்களிலும் நடித்துள்ளார். இன்ஸ்டாகிராம் போன்ற சமூக வலைத்தளங்களில் மிகவும் பிரபலமாக இருந்து வந்தார். 


நடிகை சுபாஷினி உயிர்மாய்த்தாரா அல்லது கொலை செய்யப்பட்டாரா? என பல்வேறு கோணங்களில் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.  


இவரின் உயிரிழப்பு அவரது இரசிகர்கள் மத்தியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளமை குறிப்பிடத்தக்கது. 

இலங்கை வம்சாவளி நடிகை சென்னையில் எடுத்த விபரீத முடிவு இலங்கையை பூர்வீகமாக கொண்ட நடிகை சுபாஷினி சென்னை போரூர் அருகே உள்ள பிரபலமான அடுக்குமாடி குடியிருப்பிலுள்ள தனது அறையில் நேற்று இரவு  உயிர்மாய்த்துள்ளதாக தகவல்கள்  வெளியாகியுள்ளது. இதுதொடர்பில் தகவல் அறிந்த பொலிஸார் அவரது உடலை பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். முதல்கட்ட விசாரணையில் கணவருடன் வீடியோ அழைப்பில் பேசிய பிறகு அவர் இந்த முடிவை எடுத்ததாக கூறப்படுகின்றது. இதனால், குடும்பத்தகராறு காரணமாக ஏற்பட்ட மனஉளைச்சலில் இந்த விபரீத முடிவை எடுத்தாரா என்றும் பொலிஸார் விசாரித்து வருகின்றனர். பெங்களூரில் கணவருடன் வசித்து வந்த நடிகை சுபாஷினி ஷூட்டிங்கிற்காக சென்ற இடத்தில் உயிர்மாய்த்துள்ளமை பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. நடிகை சுபாஷினி 'கயல்' என்ற சின்னத்திரை தொடரில் நடித்து வந்தார். திரைப்படங்களிலும் நடித்துள்ளார். இன்ஸ்டாகிராம் போன்ற சமூக வலைத்தளங்களில் மிகவும் பிரபலமாக இருந்து வந்தார். நடிகை சுபாஷினி உயிர்மாய்த்தாரா அல்லது கொலை செய்யப்பட்டாரா என பல்வேறு கோணங்களில் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.  இவரின் உயிரிழப்பு அவரது இரசிகர்கள் மத்தியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளமை குறிப்பிடத்தக்கது. 

Advertisement

Advertisement

Advertisement