• Feb 20 2026

இலங்கை U-19 ஆசிய கோப்பை அணி; யாழ்ப்பாணத்தைச் சேர்ந்த இரண்டு வீரர்கள் தெரிவு!

shanuja / Dec 9th 2025, 5:46 pm
image

இலங்கை U-19 ஆசிய கோப்பை அணியில்  யாழ்ப்பாணத்தைப் பிரதிநிதித்துவப்படுத்தி இரண்டு வீரர்கள் தெரிவாகியுள்ளனர். 


வரவிருக்கும் ACC ஆண்கள் U-19 ஆசிய கோப்பையில் (50 ஓவர்) பங்கேற்க 15 பேர் கொண்ட அணியை இலங்கை கிரிக்கெட் தேர்வுக் குழு அறிவித்துள்ளது. 


SLC அறிக்கையின்படி, இலங்கை அணி நாளை (10)  ஐக்கிய அரபு எமிரேட்ஸுக்குப் புறப்படும்.


இலங்கை அணி நேபாளம், ஆப்கானிஸ்தான் மற்றும் வங்கதேசத்துடன் இணைந்து B குழுவில் இடம் பெற்றுள்ளது. 


இந்தப் பட்டியலில் யாழ்ப்பாணத்தைப் பிரதிநிதித்துவப்படுத்தி இரண்டு வீரர்கள் இடம்பிடித்துள்ளனர். 


யாழ்ப்பாணம் சென்.ஜோன்ஸ் கல்லூரியைச் சேர்ந்த குகதாஸ் மாதுளனும், யாழ்ப்பாணம் பருத்தித்துறை ஹாட்லிக் கல்லூரியைச் சேர்ந்த விக்னேஸ்வரன் ஆகாஷ் ஆகியோர் தெரிவாகியுள்ளனர்.

இலங்கை U-19 ஆசிய கோப்பை அணி; யாழ்ப்பாணத்தைச் சேர்ந்த இரண்டு வீரர்கள் தெரிவு இலங்கை U-19 ஆசிய கோப்பை அணியில்  யாழ்ப்பாணத்தைப் பிரதிநிதித்துவப்படுத்தி இரண்டு வீரர்கள் தெரிவாகியுள்ளனர். வரவிருக்கும் ACC ஆண்கள் U-19 ஆசிய கோப்பையில் (50 ஓவர்) பங்கேற்க 15 பேர் கொண்ட அணியை இலங்கை கிரிக்கெட் தேர்வுக் குழு அறிவித்துள்ளது. SLC அறிக்கையின்படி, இலங்கை அணி நாளை (10)  ஐக்கிய அரபு எமிரேட்ஸுக்குப் புறப்படும்.இலங்கை அணி நேபாளம், ஆப்கானிஸ்தான் மற்றும் வங்கதேசத்துடன் இணைந்து B குழுவில் இடம் பெற்றுள்ளது. இந்தப் பட்டியலில் யாழ்ப்பாணத்தைப் பிரதிநிதித்துவப்படுத்தி இரண்டு வீரர்கள் இடம்பிடித்துள்ளனர். யாழ்ப்பாணம் சென்.ஜோன்ஸ் கல்லூரியைச் சேர்ந்த குகதாஸ் மாதுளனும், யாழ்ப்பாணம் பருத்தித்துறை ஹாட்லிக் கல்லூரியைச் சேர்ந்த விக்னேஸ்வரன் ஆகாஷ் ஆகியோர் தெரிவாகியுள்ளனர்.

Advertisement

Advertisement

Advertisement