• Feb 20 2026

இளையோர் உலகக் கிண்ணத்தின் சுப்பர் சிக்ஸ் சுற்றில் இலங்கை - ஆப்கான் இன்று மோதல்!

shanuja / Jan 26th 2026, 12:01 pm
image

இளையோர் உலகக் கிண்ணத்தின் சுப்பர் சிக்ஸ் சுற்றில் இன்று ஆப்கானை எதிர்கொள்ளும் இலங்கை

நடப்பு ஐ.சி.சி இளையோர் உலகக்கிண்ண கிரிக்கெட் தொடரின் சுப்பர் சிக்ஸ் சுற்றில் இலங்கை அணி இன்றைய தினம்(26) தங்களது முதலாவது ஆட்டத்தில் ஆப்கானிஸ்தான் இளையோர் அணியை எதிர்கொள்கிறது.


நமீபியாவில் நடைபெறும் இந்த ஆட்டம் இலங்கை நேரப்படி பிற்பகல் 1.00 மணிக்கு ஆரம்பமாகிறது. 


முதல் சுற்றில் குழு ஏ யில் இடம் பிடித்திருந்த இலங்கை மூன்று ஆட்டங்களில் இரண்டு போட்டிகளில் வெற்றி பெற்றது. 


இறுதியாக நடைபெற்ற அவுஸ்திரேலிய அணியுடனான ஆட்டத்தில் படுதோல்வியை சந்தித்து புள்ளி பட்டியலில் இரண்டாவது இடத்தைப் பிடித்தது. 


இந்நிலையில் அடுத்த சுற்றான சுப்பர் சிக்ஸ் சுற்றுக்கு தகுதி பெற்றுள்ள இலங்கை அணி தங்களது முதல் ஆட்டத்தில் இன்றைய தினம் ஆப்கானிஸ்தான் இளையோர் அணியை எதிர்கொள்கிறது. 

இளையோர் உலகக் கிண்ணத்தின் சுப்பர் சிக்ஸ் சுற்றில் இலங்கை - ஆப்கான் இன்று மோதல் இளையோர் உலகக் கிண்ணத்தின் சுப்பர் சிக்ஸ் சுற்றில் இன்று ஆப்கானை எதிர்கொள்ளும் இலங்கைநடப்பு ஐ.சி.சி இளையோர் உலகக்கிண்ண கிரிக்கெட் தொடரின் சுப்பர் சிக்ஸ் சுற்றில் இலங்கை அணி இன்றைய தினம்(26) தங்களது முதலாவது ஆட்டத்தில் ஆப்கானிஸ்தான் இளையோர் அணியை எதிர்கொள்கிறது.நமீபியாவில் நடைபெறும் இந்த ஆட்டம் இலங்கை நேரப்படி பிற்பகல் 1.00 மணிக்கு ஆரம்பமாகிறது. முதல் சுற்றில் குழு ஏ யில் இடம் பிடித்திருந்த இலங்கை மூன்று ஆட்டங்களில் இரண்டு போட்டிகளில் வெற்றி பெற்றது. இறுதியாக நடைபெற்ற அவுஸ்திரேலிய அணியுடனான ஆட்டத்தில் படுதோல்வியை சந்தித்து புள்ளி பட்டியலில் இரண்டாவது இடத்தைப் பிடித்தது. இந்நிலையில் அடுத்த சுற்றான சுப்பர் சிக்ஸ் சுற்றுக்கு தகுதி பெற்றுள்ள இலங்கை அணி தங்களது முதல் ஆட்டத்தில் இன்றைய தினம் ஆப்கானிஸ்தான் இளையோர் அணியை எதிர்கொள்கிறது. 

Advertisement

Advertisement

Advertisement