இலங்கையின் வெளிநாட்டுக் கடன் மறுசீரமைப்பு நடவடிக்கை செயல்முறை தொடர்பாக இந்திய ஏற்றுமதி-இறக்குமதி வங்கியுடன் (EXIM) இருதரப்பு திருத்தப்பட்ட ஒப்பந்தங்கள் சமீபத்தில் கையெழுத்தானது.
2021-22 ஆம் ஆண்டில் வரலாற்றில் மிக மோசமான பொருளாதார நெருக்கடியின் உச்சத்தில் இலங்கை இருந்தபோது, இந்தியாவிடமிருந்து பெறப்பட்ட அவசர உதவி, இலங்கையின் பொருளாதார மீட்சிக்கு உறுதுணையாக இருந்ததோடு, அவற்றின் பெரும்பாலான பகுதி இந்தியாவின் EXIM வங்கி ஊடாக வழங்கப்பட்டிருந்தமை சுட்டிக்காட்டத்தக்கது.
இந்த திருத்தப்பட்ட ஒப்பந்தங்கள் இந்திய அரசாங்கத்துடன் 7 மறுசீரமைக்கப்பட்ட கடன் வழங்கும் முறைமைகள் மற்றும் பெற்றுக் கொள்வோருக்கான 4 கடன் வசதி ஒப்பந்தங்களுக்காக கையெழுத்திடப்பட்டுள்ளன.
இதன் மொத்த மதிப்பு சுமார் 930.8 மில்லியன் அமெரிக்க டொலர்கள் என தெரிவிக்கப்படுகிறது.
இலங்கை - இந்திய EXIM வங்கி இடையே திருத்தப்பட்ட ஒப்பந்தங்கள் கையெழுத்து இலங்கையின் வெளிநாட்டுக் கடன் மறுசீரமைப்பு நடவடிக்கை செயல்முறை தொடர்பாக இந்திய ஏற்றுமதி-இறக்குமதி வங்கியுடன் (EXIM) இருதரப்பு திருத்தப்பட்ட ஒப்பந்தங்கள் சமீபத்தில் கையெழுத்தானது. 2021-22 ஆம் ஆண்டில் வரலாற்றில் மிக மோசமான பொருளாதார நெருக்கடியின் உச்சத்தில் இலங்கை இருந்தபோது, இந்தியாவிடமிருந்து பெறப்பட்ட அவசர உதவி, இலங்கையின் பொருளாதார மீட்சிக்கு உறுதுணையாக இருந்ததோடு, அவற்றின் பெரும்பாலான பகுதி இந்தியாவின் EXIM வங்கி ஊடாக வழங்கப்பட்டிருந்தமை சுட்டிக்காட்டத்தக்கது. இந்த திருத்தப்பட்ட ஒப்பந்தங்கள் இந்திய அரசாங்கத்துடன் 7 மறுசீரமைக்கப்பட்ட கடன் வழங்கும் முறைமைகள் மற்றும் பெற்றுக் கொள்வோருக்கான 4 கடன் வசதி ஒப்பந்தங்களுக்காக கையெழுத்திடப்பட்டுள்ளன. இதன் மொத்த மதிப்பு சுமார் 930.8 மில்லியன் அமெரிக்க டொலர்கள் என தெரிவிக்கப்படுகிறது.