• Apr 23 2026

வாய்க்கால்களைத் தூர்வாரும் விசேட செயற்றிட்டம் !

Ziya / Apr 21st 2026, 4:59 pm
image

பல தசாப்தங்களாகத் தூர்வாரப்படாமல் காணப்பட்டமையால், மழைக்காலங்களில் மக்கள் மிகப் பெரிய வெள்ளப் பேரிடர்களைச் சந்திப்பதற்குக் காரணமாக அமைந்த வாய்க்கால்களைத் தூர்வாரும் விசேட செயற்றிட்டம் தற்போது துரிதமாக முன்னெடுக்கப்பட்டு வருகின்றது.


இதன் ஒரு கட்டமாக, கிளிநொச்சி மாவட்டத்தின் கனகாம்பிகைக்குளத்திலிருந்து கிளிநொச்சிக்குளம் வரையிலான 1.5 கிலோமீற்றர் நீளமான பிரதான வாய்க்காலைத் தூர்வாரும் பணிகளை, வடக்கு மாகாண ஆளுநர் நா.வேதநாயகன் மற்றும் கிளிநொச்சி மாவட்டச் செயலாளர் சு.முரளிதரன் ஆகியோர் இன்று (21) செவ்வாய்க்கிழமை இரத்தினபுரம் பகுதிக்குச் சென்று நேரில் பார்வையிட்டனர்.


வடக்கு மாகாண சபையின் மீண்டெழும் நிதியிலிருந்து 5 மில்லியன் ரூபா ஒதுக்கீட்டில் இந்தப் பணிகள் முன்னெடுக்கப்படுகின்றன. 


குறித்த நிதி ஒதுக்கீட்டுக்கு அமைவாக, மேற்படி வாய்க்கால் அண்ணளவாக 10 மீற்றர் அகலப்படுத்தப்பட்டுத் தூர்வாரப்பட்டு வருகின்றது.


இப்பணிகளைப் பார்வையிட்ட ஆளுநர், வேலைத்திட்டங்களை முன்னெடுக்கும்போது எதிர்கொள்ளும் சவால்கள் மற்றும் நடைமுறைச் சிக்கல்கள் தொடர்பில் நீர்ப்பாசனப் பொறியியலாளரிடம் கேட்டறிந்து கொண்டார்.


இதன்போது, வாய்க்காலுக்குச் சொந்தமான ஒதுக்கப் பிரதேசத்தினுள் காணிகளை ஆக்கிரமித்துள்ள சிலரால் இப்பணிகளுக்கு இடையூறு ஏற்படுத்தப்படுவதாக அதிகாரிகளால் சுட்டிக்காட்டப்பட்டது. இதனையடுத்து, பொலிஸாரின் உதவியுடன் குறித்த ஆக்கிரமிப்புகளை உடனடியாக அகற்றி, பணிகளை எவ்விதத் தடையுமின்றித் தொடர்ச்சியாக முன்னெடுப்பதற்கான உரிய நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு மாவட்டச் செயலாளருக்கு ஆளுநர் பணிப்புரை விடுத்தார்

வாய்க்கால்களைத் தூர்வாரும் விசேட செயற்றிட்டம் பல தசாப்தங்களாகத் தூர்வாரப்படாமல் காணப்பட்டமையால், மழைக்காலங்களில் மக்கள் மிகப் பெரிய வெள்ளப் பேரிடர்களைச் சந்திப்பதற்குக் காரணமாக அமைந்த வாய்க்கால்களைத் தூர்வாரும் விசேட செயற்றிட்டம் தற்போது துரிதமாக முன்னெடுக்கப்பட்டு வருகின்றது.இதன் ஒரு கட்டமாக, கிளிநொச்சி மாவட்டத்தின் கனகாம்பிகைக்குளத்திலிருந்து கிளிநொச்சிக்குளம் வரையிலான 1.5 கிலோமீற்றர் நீளமான பிரதான வாய்க்காலைத் தூர்வாரும் பணிகளை, வடக்கு மாகாண ஆளுநர் நா.வேதநாயகன் மற்றும் கிளிநொச்சி மாவட்டச் செயலாளர் சு.முரளிதரன் ஆகியோர் இன்று (21) செவ்வாய்க்கிழமை இரத்தினபுரம் பகுதிக்குச் சென்று நேரில் பார்வையிட்டனர்.வடக்கு மாகாண சபையின் மீண்டெழும் நிதியிலிருந்து 5 மில்லியன் ரூபா ஒதுக்கீட்டில் இந்தப் பணிகள் முன்னெடுக்கப்படுகின்றன. குறித்த நிதி ஒதுக்கீட்டுக்கு அமைவாக, மேற்படி வாய்க்கால் அண்ணளவாக 10 மீற்றர் அகலப்படுத்தப்பட்டுத் தூர்வாரப்பட்டு வருகின்றது.இப்பணிகளைப் பார்வையிட்ட ஆளுநர், வேலைத்திட்டங்களை முன்னெடுக்கும்போது எதிர்கொள்ளும் சவால்கள் மற்றும் நடைமுறைச் சிக்கல்கள் தொடர்பில் நீர்ப்பாசனப் பொறியியலாளரிடம் கேட்டறிந்து கொண்டார்.இதன்போது, வாய்க்காலுக்குச் சொந்தமான ஒதுக்கப் பிரதேசத்தினுள் காணிகளை ஆக்கிரமித்துள்ள சிலரால் இப்பணிகளுக்கு இடையூறு ஏற்படுத்தப்படுவதாக அதிகாரிகளால் சுட்டிக்காட்டப்பட்டது. இதனையடுத்து, பொலிஸாரின் உதவியுடன் குறித்த ஆக்கிரமிப்புகளை உடனடியாக அகற்றி, பணிகளை எவ்விதத் தடையுமின்றித் தொடர்ச்சியாக முன்னெடுப்பதற்கான உரிய நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு மாவட்டச் செயலாளருக்கு ஆளுநர் பணிப்புரை விடுத்தார்

Advertisement

Advertisement

Advertisement