• Aug 31 2025

இந்தோனேசியாவில் கைதான குற்றவாளிகள் இன்று நாட்டிற்கு; அழைத்துவர சென்ற விசேட பொலிஸ் குழு!

shanuja / Aug 30th 2025, 4:07 pm
image

இந்தோனேசியாவில் கைது செய்யப்பட்டுள்ள பாதாள உலகக் குழு தலைவர்களான கெஹெல்பத்தர பத்மே உள்ளிட்ட ஐவரும் இன்றிரவு நாட்டுக்கு அழைத்து வரப்படவுள்ளனர். 


குறித்த கும்பலை  அழைத்து வருவதற்காக விசேட பொலிஸ் குழு இன்று (30) காலை நாட்டிலிருந்து புறப்பட்டுச் சென்றது. 


கைது செய்யபட்ட ஐவரையும், இலங்கையில் இருந்து சென்ற பொலிஸ் குழு பொறுப்பேற்ற நிலையில், அவர்கள் விமானத்தில் இலங்கை நோக்கி புறப்பட்டுள்ளதாக உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. 


குறித்த விமானம் இன்றிரவு இலங்கையை வந்தடையும் என எதிர்பார்க்கப்படுகிறது. 


இந்தோனேசிய  ஜகார்த்தாவில் வைத்து கெஹெல்பத்தர பத்மே உள்ளிட்ட ஐந்து குற்றவாளிகள் அண்மையில் அந்நாட்டு பொலிஸாரால் கைது செய்யப்பட்டனர். 


அவர்களை இலங்கைக்கு அழைத்து வர நடவடிக்கை எடுக்கப்படும் என்று பாதுகாப்பு அமைச்சர் தெரிவித்திருந்த நிலையில் குறித்த கும்பல் இன்று நாட்டை வந்தடையும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்தோனேசியாவில் கைதான குற்றவாளிகள் இன்று நாட்டிற்கு; அழைத்துவர சென்ற விசேட பொலிஸ் குழு இந்தோனேசியாவில் கைது செய்யப்பட்டுள்ள பாதாள உலகக் குழு தலைவர்களான கெஹெல்பத்தர பத்மே உள்ளிட்ட ஐவரும் இன்றிரவு நாட்டுக்கு அழைத்து வரப்படவுள்ளனர். குறித்த கும்பலை  அழைத்து வருவதற்காக விசேட பொலிஸ் குழு இன்று (30) காலை நாட்டிலிருந்து புறப்பட்டுச் சென்றது. கைது செய்யபட்ட ஐவரையும், இலங்கையில் இருந்து சென்ற பொலிஸ் குழு பொறுப்பேற்ற நிலையில், அவர்கள் விமானத்தில் இலங்கை நோக்கி புறப்பட்டுள்ளதாக உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. குறித்த விமானம் இன்றிரவு இலங்கையை வந்தடையும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்தோனேசிய  ஜகார்த்தாவில் வைத்து கெஹெல்பத்தர பத்மே உள்ளிட்ட ஐந்து குற்றவாளிகள் அண்மையில் அந்நாட்டு பொலிஸாரால் கைது செய்யப்பட்டனர். அவர்களை இலங்கைக்கு அழைத்து வர நடவடிக்கை எடுக்கப்படும் என்று பாதுகாப்பு அமைச்சர் தெரிவித்திருந்த நிலையில் குறித்த கும்பல் இன்று நாட்டை வந்தடையும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Advertisement

Advertisement

Advertisement