• Oct 07 2026

இராணுவ வீரர்களுக்காக கொள்ளுப்பிட்டி பள்ளிவாசலில் விசேட துஆப் பிரார்த்தனை

Aathira / Oct 6th 2026, 11:31 am
image

இலங்கை இராணுவத்தின் ஆண்டுவிழாவை முன்னிட்டு, நாட்டின் அமைதி மற்றும் இராணுவ வீரர்களின் பாதுகாப்பு, நலனுக்காக ஆசி வேண்டி கொள்ளுப்பிட்டி ஜும்மாப் பள்ளிவாசலில் விசேட 'கிராத்' மற்றும் துஆப் பிரார்த்தனை நிகழ்வு நடைபெற்றுள்ளது.

இந்த நிகழ்வில் இலங்கை இராணுவத் தளபதி லெப்டினன்ட் ஜெனரல் நிலந்த பிரேமரத்ன தலைமை விருந்தினராகக் கலந்து கொண்டுள்ளார்.

இதன்போது, மௌலவி முகமது லத்பான் சயீத், ஷேக் ஏ.பி. ரிஸ்வான் மற்றும் ஷேக் மசூக் சஜீர் ஆகிய மார்க்க அறிஞர்களால் இராணுவ வீரர்களுக்கும், நாட்டுக்காக அர்ப்பணிப்புடன் சேவையாற்றும் படைவீரர்களுக்கும் ஆசி வேண்டி விசேட 'கிராத்' ஓதப்பட்டதுடன், துஆப் பிரார்த்தனைகளும் இடம்பெற்றுள்ளன.

நாட்டில் அமைதி நிலவவும், இராணுவ வீரர்களின் பாதுகாப்பு மற்றும் நலன் உறுதி செய்யப்படவும் இந்தப் பிரார்த்தனைகள் முன்னெடுக்கப்பட்டன.

இந்நிகழ்வில் இராணுவத்தின் சிரேஷ்ட அதிகாரிகள், உயர் அதிகாரிகள் உள்ளிட்ட பல்வேறு தரங்களைச் சேர்ந்த படைவீரர்கள் கலந்து கொண்டனர்.

இராணுவ வீரர்களுக்காக கொள்ளுப்பிட்டி பள்ளிவாசலில் விசேட துஆப் பிரார்த்தனை இலங்கை இராணுவத்தின் ஆண்டுவிழாவை முன்னிட்டு, நாட்டின் அமைதி மற்றும் இராணுவ வீரர்களின் பாதுகாப்பு, நலனுக்காக ஆசி வேண்டி கொள்ளுப்பிட்டி ஜும்மாப் பள்ளிவாசலில் விசேட 'கிராத்' மற்றும் துஆப் பிரார்த்தனை நிகழ்வு நடைபெற்றுள்ளது.இந்த நிகழ்வில் இலங்கை இராணுவத் தளபதி லெப்டினன்ட் ஜெனரல் நிலந்த பிரேமரத்ன தலைமை விருந்தினராகக் கலந்து கொண்டுள்ளார்.இதன்போது, மௌலவி முகமது லத்பான் சயீத், ஷேக் ஏ.பி. ரிஸ்வான் மற்றும் ஷேக் மசூக் சஜீர் ஆகிய மார்க்க அறிஞர்களால் இராணுவ வீரர்களுக்கும், நாட்டுக்காக அர்ப்பணிப்புடன் சேவையாற்றும் படைவீரர்களுக்கும் ஆசி வேண்டி விசேட 'கிராத்' ஓதப்பட்டதுடன், துஆப் பிரார்த்தனைகளும் இடம்பெற்றுள்ளன.நாட்டில் அமைதி நிலவவும், இராணுவ வீரர்களின் பாதுகாப்பு மற்றும் நலன் உறுதி செய்யப்படவும் இந்தப் பிரார்த்தனைகள் முன்னெடுக்கப்பட்டன.இந்நிகழ்வில் இராணுவத்தின் சிரேஷ்ட அதிகாரிகள், உயர் அதிகாரிகள் உள்ளிட்ட பல்வேறு தரங்களைச் சேர்ந்த படைவீரர்கள் கலந்து கொண்டனர்.

Advertisement

Advertisement

Advertisement