• Feb 20 2026

தெற்காசிய தடகள குண்டு போடுதல்; வெண்கலப் பதக்கத்தை சுவீகரித்த யாழ்.இளைஞன்!

shanuja / Oct 25th 2025, 8:12 pm
image

 தெற்காசிய தடகள  குண்டு போடுதல் சம்பியன்ஷிப் போட்டியில் யாழ்ப்பாணத்தைச் சேர்ந்த இளைஞன் வெண்கலப் பதக்கத்தைத் தட்டித் தூக்கியுள்ளார். 


நான்காவது தெற்காசிய தடகள சம்பியன்ஷிப் போட்டி இந்தியாவில் நடைபெற்று வருகின்ற நிலையில் குண்டு போடுதல் போட்டியில் குறித்த இளைஞன் வெண்கலப் பதக்கத்தை வென்றுள்ளார். 


யாழ்ப்பாணம்  பருத்தித்துறை ஹாட்லிக் கல்லூரியின் பழைய மாணவன் மிதுன்ராஜ் என்பவரே இவ்வாறு   வெண்கலப் பதக்கத்தை சுவீகரித்துள்ளார். 


குறித்த இளைஞர் குண்டு போடுதலில் 14.68 மீற்றர் தூரத்திற்கு குண்டை எறிந்துள்ளார். இதன் மூலமே அவர் வெண்கலப் பதக்கத்தை தட்டித் தூக்கியுள்ளார். 


குறித்த இளைஞர் குண்டு போடுதலில் வெண்கலப் பதக்கத்தைப் பெற்று ஹாட்லிக் கல்லூரிற்கும் யாழிற்கும் பெருமை சேர்த்துள்ளார்.

தெற்காசிய தடகள குண்டு போடுதல்; வெண்கலப் பதக்கத்தை சுவீகரித்த யாழ்.இளைஞன்  தெற்காசிய தடகள  குண்டு போடுதல் சம்பியன்ஷிப் போட்டியில் யாழ்ப்பாணத்தைச் சேர்ந்த இளைஞன் வெண்கலப் பதக்கத்தைத் தட்டித் தூக்கியுள்ளார். நான்காவது தெற்காசிய தடகள சம்பியன்ஷிப் போட்டி இந்தியாவில் நடைபெற்று வருகின்ற நிலையில் குண்டு போடுதல் போட்டியில் குறித்த இளைஞன் வெண்கலப் பதக்கத்தை வென்றுள்ளார். யாழ்ப்பாணம்  பருத்தித்துறை ஹாட்லிக் கல்லூரியின் பழைய மாணவன் மிதுன்ராஜ் என்பவரே இவ்வாறு   வெண்கலப் பதக்கத்தை சுவீகரித்துள்ளார். குறித்த இளைஞர் குண்டு போடுதலில் 14.68 மீற்றர் தூரத்திற்கு குண்டை எறிந்துள்ளார். இதன் மூலமே அவர் வெண்கலப் பதக்கத்தை தட்டித் தூக்கியுள்ளார். குறித்த இளைஞர் குண்டு போடுதலில் வெண்கலப் பதக்கத்தைப் பெற்று ஹாட்லிக் கல்லூரிற்கும் யாழிற்கும் பெருமை சேர்த்துள்ளார்.

Advertisement

Advertisement

Advertisement