இரத்தினபுரி - எம்பிலிபிட்டிய, கிரலவெல்கடுவ பகுதியில் இடம்பெற்ற இரட்டைக் கொலைச் சம்பவம் தொடர்பில் 26 வயதுடைய இளைஞர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
பொலிஸாரின் ஆரம்பகட்ட விசாரணைகளின்படி, தனிப்பட்ட தகராறு காரணமாக ஏற்பட்ட வாக்குவாதம் முற்றியதைத் தொடர்ந்து இந்தக் கொலைச் சம்பவம் இடம்பெற்றுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்தச் சம்பவத்தில் உயிரிழந்தவர்கள் 58 வயதுடைய தந்தையும், 54 வயதுடைய தாயும் என அடையாளம் காணப்பட்டுள்ளனர்.
கொலைச் சம்பவம் தொடர்பில் கைது செய்யப்பட்டுள்ள சந்தேகநபர் உயிரிழந்த தம்பதியரின் மகன் என பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
இச்சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை எம்பிலிபிட்டிய பொலிஸார் முன்னெடுத்து வருகின்றனர்
பெற்றோரை கொன்ற மகன் கைது எம்பிலிபிட்டியவில் அதிர்ச்சி சம்பவம் இரத்தினபுரி - எம்பிலிபிட்டிய, கிரலவெல்கடுவ பகுதியில் இடம்பெற்ற இரட்டைக் கொலைச் சம்பவம் தொடர்பில் 26 வயதுடைய இளைஞர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.பொலிஸாரின் ஆரம்பகட்ட விசாரணைகளின்படி, தனிப்பட்ட தகராறு காரணமாக ஏற்பட்ட வாக்குவாதம் முற்றியதைத் தொடர்ந்து இந்தக் கொலைச் சம்பவம் இடம்பெற்றுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.இந்தச் சம்பவத்தில் உயிரிழந்தவர்கள் 58 வயதுடைய தந்தையும், 54 வயதுடைய தாயும் என அடையாளம் காணப்பட்டுள்ளனர்.கொலைச் சம்பவம் தொடர்பில் கைது செய்யப்பட்டுள்ள சந்தேகநபர் உயிரிழந்த தம்பதியரின் மகன் என பொலிஸார் தெரிவித்துள்ளனர்.இச்சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை எம்பிலிபிட்டிய பொலிஸார் முன்னெடுத்து வருகின்றனர்