• Jun 01 2026

தொற்றாநோயின் தாக்கத்தின் அதிகரிப்பிற்கு புகைத்தலே பிரதான காரணம்!

shanu / Jun 1st 2026, 3:07 pm
image

மட்டக்களப்பு மாவட்டத்தில் தொற்றாநோயின் தாக்கத்தின் நிலை அதிகரிப்பதற்கு புகைத்தலே பிரதான காரணமாக இருக்கின்றது. புகைத்தல் அற்ற மாவட்டமாக மட்டக்களப்பு மாவட்டத்தினை மாற்றுவதற்கு அனைவரும் ஒத்துழைப்பு வழங்க வேண்டும் என மட்டக்களப்பு மாவட்ட தொற்றா நோய் தடுப்பு பொறுப்பு வைத்திய அதிகாரி எம்.ருதேசன் தெரிவித்தார்.


புகைப்பொருள் பாவனையற்ற மாநகரசபையாக மட்டக்களப்பு மாநகரசபையினை பிரகடனப்படுத்தும் வகையிலான பெயர்ப்பலகையொன்று இன்று திரைநீக்கம் செய்யப்பட்டுள்ளதுடன் புகையிலை பாவனைக்கு எதிரான ஸ்டிக்கர்கள் ஒட்டப்பட்டன.


சர்வதேச புகைத்தல் ஒழிப்பு வாரத்தின் இராண்டாம் நாளான இன்று மட்டக்களப்பு பிராந்திய சுகாதார சேவைகள் திணைக்களமும் மட்டக்களப்பு மாவட்ட செயலகமும் இணைந்து நடாத்திய நிகழ்வு இன்று நடைபெற்றது.


மட்டக்களப்பு பிராந்திய சுகாதார பணிப்பாளர் டாக்;;டர் ஆர்.முரளீஸ்வரன் தலைமையில் நடைபெற்ற இந்த நிகழ்வில் பிரதி பிராந்திய சுகாதார பணிப்பாளர் மோகனகுமார், மாவட்ட தொற்றா நோய் தடுப்பு பொறுப்பு வைத்திய அதிகாரி எம்.ருதேசன், மட்டக்களப்பு சுகாதார வைத்திய அதிகாரி இளையதம்பி உதயகுமார், வைத்திய நிபுணர்கள், உயர் வைத்திய அதிகாரிகள், மாவட்ட போதைப்பொருள் முற்தடுப்பு மற்றும் கட்டுப்பாட்டு இணைப்பாளர் ப.தினேஸ் சிரேஸ்ட சாரண மாணவி செல்வி மதிவண்ணன் ஸ்ருதிகா , மற்றும் பலர் கலந்து கொண்டனர்.


இதன்போது புகைத்தல் பாவனையினால் எதிர்நொக்கும் சவால்கள் தொடர்பிலும் அதனை தவிர்ப்பதன் முக்கியத்துவம் தொடர்பிலும் வின்ஸன்ட்; மகளிர் தேசிய பாடசாலை மாணவியினால் விசேட உரை நிகழ்த்தப்பட்டதுடன் புகையிலையொழிப்பு வாரத்தின் முக்கியத்துவம் குறித்தும் விழிப்புணர்வு முன்னெடுக்கப்பட்டது.


இந்த நிகழ்வில் விசேடமாக பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் அலுவலத்தின் நுழைவாயிலில் “சிகரட் நாற்றமில்லாத பகுதிக்கு உங்களை வரவேற்கின்றோம்”என்னும் பெயர்ப்பலகை திரைநீக்கம் செய்யப்பட்டதுடன் முச்சக்கரவண்டிகள்,ஹோட்டல்களிலும் ஸ்டிக்கர்கள் ஒட்டப்பட்டன.


இதன்போது கருத்து தெரிவித்த வைத்திய அதிகாரி எம்.ருதேசன்,

நேற்றைய தினம் உலக புகையிலை எதிர்ப்பு தினம். இந்த புகையிலை பயன்பாடு பற்றி, அதனால்வரும் பாதிப்புகள் பற்றி நம்ம எல்லோரும் அறிந்தது. உலகத்துக்கே பெரிய சவாலாக இருந்து கொண்டிருக்கிற, சுகாதாரத்துறைக்கு பாரிய சவாலாக இருந்து கொண்டிருக்கிறது தொற்றாநோய்கள். 


தொற்றாநோய்களுக்கு பல ஆபத்து காரணிகள் இருந்தாலும், தவிர்க்கக்கூடிய—தடுக்கக்கூடிய ஆபத்துக் காரணிகள் பலவற்றுக்குள்ள மிகவும் முக்கியமான ஒரு காரணியாக இருக்கிறது இந்த புகைத்தலாகும்.


மரணத்துல முதலாவது காரணியாக இருக்கிறது வந்து மாரடைப்பு. இந்த புகைத்தலானது சுற்றோட்டத் தொகுதியில பாரிய பாதிப்பை ஏற்படுத்துகின்றது. சுற்றோட்டத் தொகுதியில வார வருத்தங்கள் என்று சொல்லக்குள்ள ஹார்ட் அட்டாக், பிரஷர், ஸ்ட்ரோக் இப்படி பல வகையான வருத்தங்கள். அதோட பல வகையான கேன்சருக்கு புகைத்தல் ஒரு காரணியாக இருக்கின்றது. 


நுரையீரல் கேன்சர், வாய்க்குள்ள வார புற்றுநோய், தொண்டை, களம், உவரான பல கேன்சருக்கு காரணியாக இருக்கிறதோட, நுரையீரல்கள்ல ஏற்படுற பல சிஓபிடி என்று சொல்ற பயங்கரமான வருத்தங்கள் உட்பட பல வருத்தங்களுக்கு காரணியாக இருக்கின்றது.


எனவே, இவற்றை நாங்க கட்டுப்படுத்த வேண்டும், தடுக்க வேண்டும், குறைக்க வேண்டும். அதற்கு பாரிய நடவடிக்கைகள் எல்லாம் நாம் எடுத்துக் கொண்டிருக்கின்றோம். என்றாலும், வர்த்தகத் துறையினரால் அதைவிட பன்மடங்கு கவர்ச்சியான, பல சலுகைகளுடன் கூடிய பல்வேறு வகையான விளம்பரங்கள் அவங்களாலும் செய்யப்பட்டு கொண்டிருக்கிறதால், எங்களது உண்மையான விழிப்புணர்வு மக்களுக்குப் போய் சேர்வது குறைவாக இருக்கிறது. 


எனவே, இந்த வகையில எல்லோருடைய ஒத்தாசை ஒத்துழைப்பு எங்களுக்கு தேவைப்படுகின்றது. எனவே, இந்த நாளிலே நாம் எல்லோருக்கும், எல்லா துறையினருக்கும் கல்வித்துறை, நிர்வாகத்துறை, வர்த்தகத்துறை போன்ற சகல துறையினருக்கும் நான் அன்பாக அழைப்பு விடுக்கின்றோம், இந்த மட்டக்களப்பு பிரதேசத்திலே, மட்டக்களப்பு மாநகர சபையிலே, மட்டக்களப்பு மாவட்டத்திலே இந்த புகைத்தலை குறைக்கிறதுக்கு, கட்டுப்படுத்துறதுக்கு நீங்க எல்லோரும் பூரண ஒத்துழைப்பு தரவேண்டும்.


நமது மட்டக்களப்பு மாநகர சபை நகரபிதா அவர்கள் மிகவும் கவனத்தில் எடுக்க வேண்டும். மிக விரைவாகவே அவர் மட்டக்களப்பு மாநகர சபையை புகைத்தல் அற்;ற பகுதியாக மாற்றுவதற்கான முழு ஏற்பாடுகள் செய்வார் என பிரதானமாக நாம் நம்புகின்றோம். எனவே, ஆசிரியர்கள், அதிபர்கள், மாணவர்கள் எல்லோரும் ஒத்துழைப்பு தரவேண்டும். பாடசாலைகளுக்கு அருகில் புகையிலை பொருள்கள் விற்றால், நீங்கள் அதுக்குரிய பொறுப்பான இடங்களுக்கு தகவல்களை வழங்க வேண்டும்.


வைத்தியசாலை, பாடசாலை, பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் அலுவலகம்,மாவட்ட செயலகம் போன்ற முக்கியமான அலுவலகங்களுக்கு அருகில் எல்லாம் புகைத்தல் பொருட்கள் விற்பதை நாங்க முற்றாகத் தடை செய்வதற்கான பூரண முயற்சிகளை எடுத்துக் கொண்டிருக்கிறோம். 


அதோடு மட்டுமில்லாம 21 வயதுக்குட்பட்ட ஆட்களுக்கு புகைத்தல் பொருட்கள் விற்பனை செய்வது, மாணவர்களுக்கு விற்பனை செய்வதை தடுப்பதற்காக அனைவரும் கவனத்தில் கொண்டுசெயற்படவேண்டும் என உங்கள் அனைவரையும் அன்பாகக் கேட்டுக் கொள்கின்றோம். இது எந்த அளவுக்கு பெரியொரு பாதிப்பை ஏற்படுத்துகின்றது என்று எல்லோரும் உணர்வோமாக இருந்தால், இதற்கு எல்லோருடைய பூரண ஒத்துழைப்பு கிடைக்கும்.

தொற்றாநோயின் தாக்கத்தின் அதிகரிப்பிற்கு புகைத்தலே பிரதான காரணம் மட்டக்களப்பு மாவட்டத்தில் தொற்றாநோயின் தாக்கத்தின் நிலை அதிகரிப்பதற்கு புகைத்தலே பிரதான காரணமாக இருக்கின்றது. புகைத்தல் அற்ற மாவட்டமாக மட்டக்களப்பு மாவட்டத்தினை மாற்றுவதற்கு அனைவரும் ஒத்துழைப்பு வழங்க வேண்டும் என மட்டக்களப்பு மாவட்ட தொற்றா நோய் தடுப்பு பொறுப்பு வைத்திய அதிகாரி எம்.ருதேசன் தெரிவித்தார்.புகைப்பொருள் பாவனையற்ற மாநகரசபையாக மட்டக்களப்பு மாநகரசபையினை பிரகடனப்படுத்தும் வகையிலான பெயர்ப்பலகையொன்று இன்று திரைநீக்கம் செய்யப்பட்டுள்ளதுடன் புகையிலை பாவனைக்கு எதிரான ஸ்டிக்கர்கள் ஒட்டப்பட்டன.சர்வதேச புகைத்தல் ஒழிப்பு வாரத்தின் இராண்டாம் நாளான இன்று மட்டக்களப்பு பிராந்திய சுகாதார சேவைகள் திணைக்களமும் மட்டக்களப்பு மாவட்ட செயலகமும் இணைந்து நடாத்திய நிகழ்வு இன்று நடைபெற்றது.மட்டக்களப்பு பிராந்திய சுகாதார பணிப்பாளர் டாக்;;டர் ஆர்.முரளீஸ்வரன் தலைமையில் நடைபெற்ற இந்த நிகழ்வில் பிரதி பிராந்திய சுகாதார பணிப்பாளர் மோகனகுமார், மாவட்ட தொற்றா நோய் தடுப்பு பொறுப்பு வைத்திய அதிகாரி எம்.ருதேசன், மட்டக்களப்பு சுகாதார வைத்திய அதிகாரி இளையதம்பி உதயகுமார், வைத்திய நிபுணர்கள், உயர் வைத்திய அதிகாரிகள், மாவட்ட போதைப்பொருள் முற்தடுப்பு மற்றும் கட்டுப்பாட்டு இணைப்பாளர் ப.தினேஸ் சிரேஸ்ட சாரண மாணவி செல்வி மதிவண்ணன் ஸ்ருதிகா , மற்றும் பலர் கலந்து கொண்டனர்.இதன்போது புகைத்தல் பாவனையினால் எதிர்நொக்கும் சவால்கள் தொடர்பிலும் அதனை தவிர்ப்பதன் முக்கியத்துவம் தொடர்பிலும் வின்ஸன்ட்; மகளிர் தேசிய பாடசாலை மாணவியினால் விசேட உரை நிகழ்த்தப்பட்டதுடன் புகையிலையொழிப்பு வாரத்தின் முக்கியத்துவம் குறித்தும் விழிப்புணர்வு முன்னெடுக்கப்பட்டது.இந்த நிகழ்வில் விசேடமாக பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் அலுவலத்தின் நுழைவாயிலில் “சிகரட் நாற்றமில்லாத பகுதிக்கு உங்களை வரவேற்கின்றோம்”என்னும் பெயர்ப்பலகை திரைநீக்கம் செய்யப்பட்டதுடன் முச்சக்கரவண்டிகள்,ஹோட்டல்களிலும் ஸ்டிக்கர்கள் ஒட்டப்பட்டன.இதன்போது கருத்து தெரிவித்த வைத்திய அதிகாரி எம்.ருதேசன்,நேற்றைய தினம் உலக புகையிலை எதிர்ப்பு தினம். இந்த புகையிலை பயன்பாடு பற்றி, அதனால்வரும் பாதிப்புகள் பற்றி நம்ம எல்லோரும் அறிந்தது. உலகத்துக்கே பெரிய சவாலாக இருந்து கொண்டிருக்கிற, சுகாதாரத்துறைக்கு பாரிய சவாலாக இருந்து கொண்டிருக்கிறது தொற்றாநோய்கள். தொற்றாநோய்களுக்கு பல ஆபத்து காரணிகள் இருந்தாலும், தவிர்க்கக்கூடிய—தடுக்கக்கூடிய ஆபத்துக் காரணிகள் பலவற்றுக்குள்ள மிகவும் முக்கியமான ஒரு காரணியாக இருக்கிறது இந்த புகைத்தலாகும்.மரணத்துல முதலாவது காரணியாக இருக்கிறது வந்து மாரடைப்பு. இந்த புகைத்தலானது சுற்றோட்டத் தொகுதியில பாரிய பாதிப்பை ஏற்படுத்துகின்றது. சுற்றோட்டத் தொகுதியில வார வருத்தங்கள் என்று சொல்லக்குள்ள ஹார்ட் அட்டாக், பிரஷர், ஸ்ட்ரோக் இப்படி பல வகையான வருத்தங்கள். அதோட பல வகையான கேன்சருக்கு புகைத்தல் ஒரு காரணியாக இருக்கின்றது. நுரையீரல் கேன்சர், வாய்க்குள்ள வார புற்றுநோய், தொண்டை, களம், உவரான பல கேன்சருக்கு காரணியாக இருக்கிறதோட, நுரையீரல்கள்ல ஏற்படுற பல சிஓபிடி என்று சொல்ற பயங்கரமான வருத்தங்கள் உட்பட பல வருத்தங்களுக்கு காரணியாக இருக்கின்றது.எனவே, இவற்றை நாங்க கட்டுப்படுத்த வேண்டும், தடுக்க வேண்டும், குறைக்க வேண்டும். அதற்கு பாரிய நடவடிக்கைகள் எல்லாம் நாம் எடுத்துக் கொண்டிருக்கின்றோம். என்றாலும், வர்த்தகத் துறையினரால் அதைவிட பன்மடங்கு கவர்ச்சியான, பல சலுகைகளுடன் கூடிய பல்வேறு வகையான விளம்பரங்கள் அவங்களாலும் செய்யப்பட்டு கொண்டிருக்கிறதால், எங்களது உண்மையான விழிப்புணர்வு மக்களுக்குப் போய் சேர்வது குறைவாக இருக்கிறது. எனவே, இந்த வகையில எல்லோருடைய ஒத்தாசை ஒத்துழைப்பு எங்களுக்கு தேவைப்படுகின்றது. எனவே, இந்த நாளிலே நாம் எல்லோருக்கும், எல்லா துறையினருக்கும் கல்வித்துறை, நிர்வாகத்துறை, வர்த்தகத்துறை போன்ற சகல துறையினருக்கும் நான் அன்பாக அழைப்பு விடுக்கின்றோம், இந்த மட்டக்களப்பு பிரதேசத்திலே, மட்டக்களப்பு மாநகர சபையிலே, மட்டக்களப்பு மாவட்டத்திலே இந்த புகைத்தலை குறைக்கிறதுக்கு, கட்டுப்படுத்துறதுக்கு நீங்க எல்லோரும் பூரண ஒத்துழைப்பு தரவேண்டும்.நமது மட்டக்களப்பு மாநகர சபை நகரபிதா அவர்கள் மிகவும் கவனத்தில் எடுக்க வேண்டும். மிக விரைவாகவே அவர் மட்டக்களப்பு மாநகர சபையை புகைத்தல் அற்;ற பகுதியாக மாற்றுவதற்கான முழு ஏற்பாடுகள் செய்வார் என பிரதானமாக நாம் நம்புகின்றோம். எனவே, ஆசிரியர்கள், அதிபர்கள், மாணவர்கள் எல்லோரும் ஒத்துழைப்பு தரவேண்டும். பாடசாலைகளுக்கு அருகில் புகையிலை பொருள்கள் விற்றால், நீங்கள் அதுக்குரிய பொறுப்பான இடங்களுக்கு தகவல்களை வழங்க வேண்டும்.வைத்தியசாலை, பாடசாலை, பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் அலுவலகம்,மாவட்ட செயலகம் போன்ற முக்கியமான அலுவலகங்களுக்கு அருகில் எல்லாம் புகைத்தல் பொருட்கள் விற்பதை நாங்க முற்றாகத் தடை செய்வதற்கான பூரண முயற்சிகளை எடுத்துக் கொண்டிருக்கிறோம். அதோடு மட்டுமில்லாம 21 வயதுக்குட்பட்ட ஆட்களுக்கு புகைத்தல் பொருட்கள் விற்பனை செய்வது, மாணவர்களுக்கு விற்பனை செய்வதை தடுப்பதற்காக அனைவரும் கவனத்தில் கொண்டுசெயற்படவேண்டும் என உங்கள் அனைவரையும் அன்பாகக் கேட்டுக் கொள்கின்றோம். இது எந்த அளவுக்கு பெரியொரு பாதிப்பை ஏற்படுத்துகின்றது என்று எல்லோரும் உணர்வோமாக இருந்தால், இதற்கு எல்லோருடைய பூரண ஒத்துழைப்பு கிடைக்கும்.

Advertisement

Advertisement

Advertisement