• Jul 16 2026

தேசிய அடையாள அட்டை இல்லாவிட்டாலும் O/L பரீட்சைக்கு விண்ணப்பிக்கலாம்! பரீட்சைகள் திணைக்களம்

Chithra / Jul 15th 2026, 6:51 pm
image


2026 ஆம் ஆண்டுக்கான கல்விப் பொதுத் தராதரப் பத்திர (சாதாரண தர) பரீட்சைக்கு தேசிய அடையாள அட்டை (NIC) இல்லாவிட்டாலும் விண்ணப்பிக்க முடியும் என இலங்கை பரீட்சைகள் திணைக்களம் அறிவித்துள்ளது.


குறித்த பரீட்சைக்கான விண்ணப்பங்கள் கடந்த 03.07.2026 ஆம் திகதி முதல் நிகழ்நிலை (Online) முறையில் கோரப்பட்டு வருவதுடன், எதிர்வரும் 23.07.2026 ஆம் திகதி வரை மட்டுமே விண்ணப்பங்கள் ஏற்றுக்கொள்ளப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.


தேசிய அடையாள அட்டை இல்லாத பாடசாலை விண்ணப்பதாரிகளுக்கான விண்ணப்ப நடைமுறைகள் தொடர்பான விசேட அறிவுறுத்தல்கள் பாடசாலை அதிபர்களுக்கு வழங்கப்பட்டுள்ளதாக பரீட்சைகள் திணைக்களம் குறிப்பிட்டுள்ளது.


அதேவேளை, தேசிய அடையாள அட்டை இல்லாத தனிப்பட்ட விண்ணப்பதாரிகள் தங்களது பாதுகாவலரின் தேசிய அடையாள அட்டை எண்ணைப் பயன்படுத்தி பரீட்சைக்கான விண்ணப்பத்தை சமர்ப்பிக்க முடியும் என்றும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.


தேசிய அடையாள அட்டை இதுவரை பெறாதிருப்பது, தனிப்பட்ட விண்ணப்பதாரிகள் பரீட்சைக்கு விண்ணப்பிப்பதில் எவ்வித தடையுமல்ல என பரீட்சைகள் திணைக்களம் உறுதிப்படுத்தியுள்ளது.


எனவே, அனைத்து விண்ணப்பதாரிகளும் 23.07.2026 ஆம் திகதிக்கு முன்னர் தங்களது விண்ணப்பங்களை நிகழ்நிலை முறையில் சமர்ப்பிக்குமாறு கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது.


மேலும், எந்தவொரு காரணத்திற்காகவும் விண்ணப்பங்களை சமர்ப்பிக்கும் இறுதித் திகதி நீடிக்கப்பட மாட்டாது என இலங்கை பரீட்சைகள் திணைக்களம் வலியுறுத்தியுள்ளது.

தேசிய அடையாள அட்டை இல்லாவிட்டாலும் O/L பரீட்சைக்கு விண்ணப்பிக்கலாம் பரீட்சைகள் திணைக்களம் 2026 ஆம் ஆண்டுக்கான கல்விப் பொதுத் தராதரப் பத்திர (சாதாரண தர) பரீட்சைக்கு தேசிய அடையாள அட்டை (NIC) இல்லாவிட்டாலும் விண்ணப்பிக்க முடியும் என இலங்கை பரீட்சைகள் திணைக்களம் அறிவித்துள்ளது.குறித்த பரீட்சைக்கான விண்ணப்பங்கள் கடந்த 03.07.2026 ஆம் திகதி முதல் நிகழ்நிலை (Online) முறையில் கோரப்பட்டு வருவதுடன், எதிர்வரும் 23.07.2026 ஆம் திகதி வரை மட்டுமே விண்ணப்பங்கள் ஏற்றுக்கொள்ளப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.தேசிய அடையாள அட்டை இல்லாத பாடசாலை விண்ணப்பதாரிகளுக்கான விண்ணப்ப நடைமுறைகள் தொடர்பான விசேட அறிவுறுத்தல்கள் பாடசாலை அதிபர்களுக்கு வழங்கப்பட்டுள்ளதாக பரீட்சைகள் திணைக்களம் குறிப்பிட்டுள்ளது.அதேவேளை, தேசிய அடையாள அட்டை இல்லாத தனிப்பட்ட விண்ணப்பதாரிகள் தங்களது பாதுகாவலரின் தேசிய அடையாள அட்டை எண்ணைப் பயன்படுத்தி பரீட்சைக்கான விண்ணப்பத்தை சமர்ப்பிக்க முடியும் என்றும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.தேசிய அடையாள அட்டை இதுவரை பெறாதிருப்பது, தனிப்பட்ட விண்ணப்பதாரிகள் பரீட்சைக்கு விண்ணப்பிப்பதில் எவ்வித தடையுமல்ல என பரீட்சைகள் திணைக்களம் உறுதிப்படுத்தியுள்ளது.எனவே, அனைத்து விண்ணப்பதாரிகளும் 23.07.2026 ஆம் திகதிக்கு முன்னர் தங்களது விண்ணப்பங்களை நிகழ்நிலை முறையில் சமர்ப்பிக்குமாறு கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது.மேலும், எந்தவொரு காரணத்திற்காகவும் விண்ணப்பங்களை சமர்ப்பிக்கும் இறுதித் திகதி நீடிக்கப்பட மாட்டாது என இலங்கை பரீட்சைகள் திணைக்களம் வலியுறுத்தியுள்ளது.

Advertisement

Advertisement

Advertisement