திருகோணமலை மாவட்டத்தின் கந்தளாய் பகுதியில் சிறுபோக நெற்செய்கை பணிகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.
கந்தளாய் நீர்ப்பாசனப் பொறியியலாளர் அலுவலகத்தின் கீழ் உள்ள சுமார் 22,000 ஏக்கர் நிலப்பரப்பில் இவ்வாண்டிற்கான நெற்செய்கை மேற்கொள்ளப்படவுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. இதற்கான முதல் கட்டமாகவே கந்தளாய் குளத்திலிருந்து விவசாயத்திற்கான நீர் திறக்கப்பட்டுள்ளது.
இதனைத் தொடர்ந்து செட்டிக்காடு, பரட்டைக்காடு, வட்டுக்கச்சி, வான் எல, ரஜ எல உள்ளிட்ட பகுதிகளில் விவசாய நடவடிக்கைகள் தற்போது மும்முரமாக முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.
விவசாயிகள் வழமைபோன்று உற்சாகத்துடன் பயிரிடும் பணிகளில் ஈடுபட்டு வருவதுடன், இம்முறை சிறுபோக விளைச்சல் அதிகரிக்கும் என நம்பிக்கையுடன் செயல்பட்டு வருகின்றனர்.
கந்தளாய் பகுதியில் சிறுபோக நெற்செய்கை ஆரம்பம் திருகோணமலை மாவட்டத்தின் கந்தளாய் பகுதியில் சிறுபோக நெற்செய்கை பணிகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.கந்தளாய் நீர்ப்பாசனப் பொறியியலாளர் அலுவலகத்தின் கீழ் உள்ள சுமார் 22,000 ஏக்கர் நிலப்பரப்பில் இவ்வாண்டிற்கான நெற்செய்கை மேற்கொள்ளப்படவுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. இதற்கான முதல் கட்டமாகவே கந்தளாய் குளத்திலிருந்து விவசாயத்திற்கான நீர் திறக்கப்பட்டுள்ளது.இதனைத் தொடர்ந்து செட்டிக்காடு, பரட்டைக்காடு, வட்டுக்கச்சி, வான் எல, ரஜ எல உள்ளிட்ட பகுதிகளில் விவசாய நடவடிக்கைகள் தற்போது மும்முரமாக முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.விவசாயிகள் வழமைபோன்று உற்சாகத்துடன் பயிரிடும் பணிகளில் ஈடுபட்டு வருவதுடன், இம்முறை சிறுபோக விளைச்சல் அதிகரிக்கும் என நம்பிக்கையுடன் செயல்பட்டு வருகின்றனர்.