• Jul 12 2025

வீட்டில் உறங்கிக் கொண்டிருந்தவர் மீது துப்பாக்கிச் சூடு! பாணந்துறையில் இன்று அதிகாலை பரபரப்பு

Chithra / Jul 11th 2025, 8:12 am
image


பாணந்துறை, ஹிரண பகுதியில் இன்று (11) அதிகாலை  நபர் ஒருவர் மீது துப்பாக்கிச் சூடு மேற்கொள்ளப்பட்டுள்ளது. 

ஹிரண பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட மாலமுல்லா பகுதியில் அமைந்துள்ள வீடொன்றில் உறங்கிக் கொண்டிருந்த ஒருவரை இலக்கு வைத்தே துப்பாக்கிப் பிரயோகம் மேற்கொள்ளப்பட்டுள்ளது.

அடையாளம் தெரியாத நபர் ஒருவர் குறித்த வீட்டின் ஜன்னலை உடைத்து, துப்பாக்கிச் சூடு நடத்திவிட்டு தப்பிச் சென்றதாக பொலிஸார் தெரிவித்தனர்.

துப்பாக்கிச் சூட்டில் காயமடைந்த நபர் சிகிச்சைக்காக பாணந்துறை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

காயமடைந்த நபர் மாலமுல்லாவைச் சேர்ந்த 32 வயதுடையவர் என அடையாளம் காணப்பட்டுள்ளார்.

துப்பாக்கிச் சூட்டுக்கான காரணம் மற்றும் சந்தேக நபர்கள் இன்னும் அடையாளம் காணப்படவில்லை.

சந்தேக நபரை கைது செய்ய மூன்று பொலிஸ் குழுக்கள் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருவதாக பொலிஸ் ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.

வீட்டில் உறங்கிக் கொண்டிருந்தவர் மீது துப்பாக்கிச் சூடு பாணந்துறையில் இன்று அதிகாலை பரபரப்பு பாணந்துறை, ஹிரண பகுதியில் இன்று (11) அதிகாலை  நபர் ஒருவர் மீது துப்பாக்கிச் சூடு மேற்கொள்ளப்பட்டுள்ளது. ஹிரண பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட மாலமுல்லா பகுதியில் அமைந்துள்ள வீடொன்றில் உறங்கிக் கொண்டிருந்த ஒருவரை இலக்கு வைத்தே துப்பாக்கிப் பிரயோகம் மேற்கொள்ளப்பட்டுள்ளது.அடையாளம் தெரியாத நபர் ஒருவர் குறித்த வீட்டின் ஜன்னலை உடைத்து, துப்பாக்கிச் சூடு நடத்திவிட்டு தப்பிச் சென்றதாக பொலிஸார் தெரிவித்தனர்.துப்பாக்கிச் சூட்டில் காயமடைந்த நபர் சிகிச்சைக்காக பாணந்துறை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.காயமடைந்த நபர் மாலமுல்லாவைச் சேர்ந்த 32 வயதுடையவர் என அடையாளம் காணப்பட்டுள்ளார்.துப்பாக்கிச் சூட்டுக்கான காரணம் மற்றும் சந்தேக நபர்கள் இன்னும் அடையாளம் காணப்படவில்லை.சந்தேக நபரை கைது செய்ய மூன்று பொலிஸ் குழுக்கள் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருவதாக பொலிஸ் ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.

Advertisement

Advertisement

Advertisement