• Mar 08 2026

களுத்துறையில் சற்றுமுன்னர் துப்பாக்கிச் சூடு; ஒருவர் வைத்தியசாலையில்!

shanu / Feb 14th 2026, 9:35 pm
image

களுத்துறையில் சற்றுமுன்னர் இடம்பெற்ற துப்பாக்கிச்சூட்டில் ஒருவர் காயமடைந்து வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். 


களுத்துறை வடக்கு பொலிஸ் பிரிவுக்குட்பட்ட வடியமங்கட பகுதியில் இன்று (14) இரவு 7.50 மணியளவிலேயே துப்பாக்கிச்சூடு நடத்தப்பட்டுள்ளது. 


மோட்டார் சைக்கிளில் பிரவேசித்த இனந்தெரியாத நபர்களால் இந்த துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். 


சம்பவத்தில் 32 வயதுடைய நபர் ஒருவரே காயமடைந்த நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். 


சம்பவம் தொடர்பிலான மேலதிக விசாரணைகளை பொலிஸார் முன்னெடுத்து வருகின்றனர்.

களுத்துறையில் சற்றுமுன்னர் துப்பாக்கிச் சூடு; ஒருவர் வைத்தியசாலையில் களுத்துறையில் சற்றுமுன்னர் இடம்பெற்ற துப்பாக்கிச்சூட்டில் ஒருவர் காயமடைந்து வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். களுத்துறை வடக்கு பொலிஸ் பிரிவுக்குட்பட்ட வடியமங்கட பகுதியில் இன்று (14) இரவு 7.50 மணியளவிலேயே துப்பாக்கிச்சூடு நடத்தப்பட்டுள்ளது. மோட்டார் சைக்கிளில் பிரவேசித்த இனந்தெரியாத நபர்களால் இந்த துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். சம்பவத்தில் 32 வயதுடைய நபர் ஒருவரே காயமடைந்த நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். சம்பவம் தொடர்பிலான மேலதிக விசாரணைகளை பொலிஸார் முன்னெடுத்து வருகின்றனர்.

Advertisement

Advertisement

Advertisement