ஜோர்டானில் உள்ள அமெரிக்க இராணுவத் தளம் மீது நடத்தப்பட்ட தாக்குதலைத் தொடர்ந்து, ஈரானுக்கு எதிராக வலுவான இராணுவ நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் எச்சரித்துள்ளார்.
வெள்ளை மாளிகையில் பேசிய டிரம்ப், “அவர்களை மிகக் கடுமையாகத் தாக்குவோம்” எனத் தெரிவித்ததுடன், தெஹ்ரானுடன் சாத்தியமான உடன்பாட்டுக்கு அமெரிக்கா தயாராக இருப்பதாகவும் கூறினார்.
எனினும், அமெரிக்க இராணுவ நடவடிக்கை தொடரும் என்றும் அவர் வலியுறுத்தியுள்ளார்.
இதற்கிடையில், மத்திய கிழக்கில் பதற்றம் அதிகரித்து வரும் நிலையில், எகிப்து கடற்பரப்பில் எண்ணெய்க் கப்பல்களை குறிவைத்து ஆளில்லா விமானத் தாக்குதல் நடத்தப்பட்டதாகக் கூறப்படும் சம்பவம் குறித்தும் தனக்கு தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளதாக டிரம்ப் உறுதிப்படுத்தியுள்ளார்.
இதனால், அமெரிக்கா–ஈரான் மோதல் அடுத்தகட்டத்திற்கு செல்லுமா என்ற எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது.
ஈரானுக்கு டிரம்பின் அதிரடி எச்சரிக்கை ஜோர்டானில் உள்ள அமெரிக்க இராணுவத் தளம் மீது நடத்தப்பட்ட தாக்குதலைத் தொடர்ந்து, ஈரானுக்கு எதிராக வலுவான இராணுவ நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் எச்சரித்துள்ளார்.வெள்ளை மாளிகையில் பேசிய டிரம்ப், “அவர்களை மிகக் கடுமையாகத் தாக்குவோம்” எனத் தெரிவித்ததுடன், தெஹ்ரானுடன் சாத்தியமான உடன்பாட்டுக்கு அமெரிக்கா தயாராக இருப்பதாகவும் கூறினார்.எனினும், அமெரிக்க இராணுவ நடவடிக்கை தொடரும் என்றும் அவர் வலியுறுத்தியுள்ளார்.இதற்கிடையில், மத்திய கிழக்கில் பதற்றம் அதிகரித்து வரும் நிலையில், எகிப்து கடற்பரப்பில் எண்ணெய்க் கப்பல்களை குறிவைத்து ஆளில்லா விமானத் தாக்குதல் நடத்தப்பட்டதாகக் கூறப்படும் சம்பவம் குறித்தும் தனக்கு தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளதாக டிரம்ப் உறுதிப்படுத்தியுள்ளார்.இதனால், அமெரிக்கா–ஈரான் மோதல் அடுத்தகட்டத்திற்கு செல்லுமா என்ற எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது.