• Jul 30 2026

வவுனியாவில் மரக்கறி ஏற்றிச் சென்ற கப் வாகனம் கோர விபத்து - இருவர் பரிதாபமாக பலி!

Chithra / Jul 30th 2026, 10:10 am
image


தம்புள்ளையில் இருந்து பருத்தித்துறைக்கு மரக்கறிகளை ஏற்றிச் சென்ற கப் ரக வாகனம் வேகக் கட்டுப்பாட்டை இழந்து விபத்துக்குள்ளானதில், அதில் பயணித்த இருவர் உயிரிழந்துள்ளதாக வவுனியா, கனகராயன்குளம் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.


இந்த விபத்து ஏ-9 பிரதான வீதியில் கனகராயன்குளம் பகுதியில் இடம்பெற்றுள்ளது.


விபத்தில் வாகனத்தில் பயணித்த இருவர் படுகாயமடைந்த நிலையில் மீட்கப்பட்டு உடனடியாக மாங்குளம் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.


எனினும், வைத்தியசாலையில் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்ட போதிலும், சிகிச்சை பலனின்றி இருவரும் உயிரிழந்துள்ளனர்.


விபத்து தொடர்பான மேலதிக விசாரணைகளை கனகராயன்குளம் பொலிஸார் தீவிரமாக முன்னெடுத்து வருகின்றனர்.


வவுனியாவில் மரக்கறி ஏற்றிச் சென்ற கப் வாகனம் கோர விபத்து - இருவர் பரிதாபமாக பலி தம்புள்ளையில் இருந்து பருத்தித்துறைக்கு மரக்கறிகளை ஏற்றிச் சென்ற கப் ரக வாகனம் வேகக் கட்டுப்பாட்டை இழந்து விபத்துக்குள்ளானதில், அதில் பயணித்த இருவர் உயிரிழந்துள்ளதாக வவுனியா, கனகராயன்குளம் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.இந்த விபத்து ஏ-9 பிரதான வீதியில் கனகராயன்குளம் பகுதியில் இடம்பெற்றுள்ளது.விபத்தில் வாகனத்தில் பயணித்த இருவர் படுகாயமடைந்த நிலையில் மீட்கப்பட்டு உடனடியாக மாங்குளம் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.எனினும், வைத்தியசாலையில் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்ட போதிலும், சிகிச்சை பலனின்றி இருவரும் உயிரிழந்துள்ளனர்.விபத்து தொடர்பான மேலதிக விசாரணைகளை கனகராயன்குளம் பொலிஸார் தீவிரமாக முன்னெடுத்து வருகின்றனர்.

Advertisement

Advertisement

Advertisement