• Oct 21 2026

ஐக்கிய மக்கள் சக்தியின் கட்டுப்பாட்டிலிருந்த பிரதேச சபைக்கு அதிரடி தடை! ஆளுநர் உத்தரவு

Chithra / Oct 20th 2026, 11:34 am
image


மத்திய மாகாணத்திற்குட்பட்ட பாத்தஹேவாஹெட்ட பிரதேச சபையின் அனைத்து நிர்வாகச் செயற்பாடுகளும் நேற்று (19) முதல் உடனடியாக நடைமுறைக்கு வரும் வகையில் இடைநிறுத்தப்பட்டுள்ளன.


ஐக்கிய மக்கள் சக்தியின் ஆட்சியின்கீழ் இயங்கிவந்த குறித்த பிரதேச சபையின் நடவடிக்கைகளை இடைநிறுத்துமாறு மத்திய மாகாண ஆளுநர் உத்தரவிட்டுள்ளார்.


பிரதேச சபையில் இடம்பெற்றுள்ளதாகக் கூறப்படும் பல்வேறு நிதி மற்றும் நிர்வாக முறைகேடுகள் தொடர்பில் விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ள நிலையிலேயே இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.


குறித்த முறைகேடுகள் தொடர்பான விசாரணைகள் எவ்விதத் தலையீடுகளுமின்றி, சுயாதீனமாகவும் நடுநிலையாகவும் முன்னெடுக்கப்படுவதை உறுதிப்படுத்தும் நோக்கிலேயே இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக மத்திய மாகாண ஆளுநர் அலுவலகம் தெரிவித்துள்ளது.


இதன்படி, விசாரணைகள் முன்னெடுக்கப்படும் நிலையில் பிரதேச சபையின் நிர்வாகச் செயற்பாடுகள் இடைநிறுத்தப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

ஐக்கிய மக்கள் சக்தியின் கட்டுப்பாட்டிலிருந்த பிரதேச சபைக்கு அதிரடி தடை ஆளுநர் உத்தரவு மத்திய மாகாணத்திற்குட்பட்ட பாத்தஹேவாஹெட்ட பிரதேச சபையின் அனைத்து நிர்வாகச் செயற்பாடுகளும் நேற்று (19) முதல் உடனடியாக நடைமுறைக்கு வரும் வகையில் இடைநிறுத்தப்பட்டுள்ளன.ஐக்கிய மக்கள் சக்தியின் ஆட்சியின்கீழ் இயங்கிவந்த குறித்த பிரதேச சபையின் நடவடிக்கைகளை இடைநிறுத்துமாறு மத்திய மாகாண ஆளுநர் உத்தரவிட்டுள்ளார்.பிரதேச சபையில் இடம்பெற்றுள்ளதாகக் கூறப்படும் பல்வேறு நிதி மற்றும் நிர்வாக முறைகேடுகள் தொடர்பில் விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ள நிலையிலேயே இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.குறித்த முறைகேடுகள் தொடர்பான விசாரணைகள் எவ்விதத் தலையீடுகளுமின்றி, சுயாதீனமாகவும் நடுநிலையாகவும் முன்னெடுக்கப்படுவதை உறுதிப்படுத்தும் நோக்கிலேயே இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக மத்திய மாகாண ஆளுநர் அலுவலகம் தெரிவித்துள்ளது.இதன்படி, விசாரணைகள் முன்னெடுக்கப்படும் நிலையில் பிரதேச சபையின் நிர்வாகச் செயற்பாடுகள் இடைநிறுத்தப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Advertisement

Advertisement

Advertisement