கொழும்பு மாவட்டத்திற்கான நில மதிப்பீட்டுச் சுட்டியானது 10.6 சதவீத வருடாந்த வளர்ச்சியைப் பதிவு செய்துள்ளதாக இலங்கை மத்திய வங்கி தெரிவித்துள்ளது.
இலங்கை மத்திய வங்கியினால் வெளியிடப்பட்டுள்ள புதிய அறிக்கையில் இது தெரிவிக்கப்பட்டுள்ளது.
2024 ஆம் ஆண்டின் இரண்டாம் பாதியுடன் ஒப்பிடுகையில், 2025 ஆம் ஆண்டின் இரண்டாம் பாதியில் கொழும்பு மாவட்ட நிலங்களின் விலை தொடர்ந்து ஏறுமுகத்தில் இருப்பதை இந்தத் தரவுகள் காட்டுகின்றன.
நில மதிப்பீட்டுச் சுட்டியின் அனைத்துப் பிரிவுகளிலும் இந்த அதிகரிப்பு காணப்படுவதுடன், குறிப்பாக குடியிருப்பு மற்றும் வர்த்தகத் தேவைகளுக்கான நிலங்களின் விலையில் குறிப்பிடத்தக்க உயர்வு ஏற்பட்டுள்ளது.
இதன்படி, குடியிருப்பு நிலங்களின் விலை 12.4 சதவீதமாகவும், வர்த்தக நிலங்களின் விலை 11.3 சதவீதமாகவும் உயர்ந்துள்ளன.
மேலும், கைத்தொழில் சார்ந்த நிலங்களின் விலை 8.0 சதவீத வளர்ச்சியைப் பதிவு செய்துள்ளதாக மத்திய வங்கியின் அறிக்கை சுட்டிக்காட்டுகின்றது.
கொழும்பு மாவட்டத்தில் காணி விலை கடும் உயர்வு கொழும்பு மாவட்டத்திற்கான நில மதிப்பீட்டுச் சுட்டியானது 10.6 சதவீத வருடாந்த வளர்ச்சியைப் பதிவு செய்துள்ளதாக இலங்கை மத்திய வங்கி தெரிவித்துள்ளது. இலங்கை மத்திய வங்கியினால் வெளியிடப்பட்டுள்ள புதிய அறிக்கையில் இது தெரிவிக்கப்பட்டுள்ளது.2024 ஆம் ஆண்டின் இரண்டாம் பாதியுடன் ஒப்பிடுகையில், 2025 ஆம் ஆண்டின் இரண்டாம் பாதியில் கொழும்பு மாவட்ட நிலங்களின் விலை தொடர்ந்து ஏறுமுகத்தில் இருப்பதை இந்தத் தரவுகள் காட்டுகின்றன.நில மதிப்பீட்டுச் சுட்டியின் அனைத்துப் பிரிவுகளிலும் இந்த அதிகரிப்பு காணப்படுவதுடன், குறிப்பாக குடியிருப்பு மற்றும் வர்த்தகத் தேவைகளுக்கான நிலங்களின் விலையில் குறிப்பிடத்தக்க உயர்வு ஏற்பட்டுள்ளது.இதன்படி, குடியிருப்பு நிலங்களின் விலை 12.4 சதவீதமாகவும், வர்த்தக நிலங்களின் விலை 11.3 சதவீதமாகவும் உயர்ந்துள்ளன.மேலும், கைத்தொழில் சார்ந்த நிலங்களின் விலை 8.0 சதவீத வளர்ச்சியைப் பதிவு செய்துள்ளதாக மத்திய வங்கியின் அறிக்கை சுட்டிக்காட்டுகின்றது.