• May 02 2026

நிதி மோசடி விசாரணை பிரிவில் மஹிந்தவுடன் முன்னிலையான ஷிரந்தி!

Chithra / Feb 3rd 2026, 10:34 am
image

முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்சவின் மனைவி ஷிரந்தி ராஜபக்ச பொலிஸ் நிதி மோசடி விசாரணை பிரிவில் முன்னிலையாகியுள்ளார்.

 

சிரிலிய சவிய வேலைத்திட்டம் தொடர்பில் வாக்குமூலம் வழங்குவதற்காக ஷிரந்தி ராஜபக்சவை கடந்த 27 ஆம் திகதி நிதி மோசடி விசாரணை பிரிவில் முன்னிலையாகுமாறு அறிவிக்கப்பட்டிருந்தது.


இருப்பினும் அங்கு முன்னிலையாக இரண்டு வார கால அவகாசம் வழங்கப்பட வேண்டும் என அவர் தமது சட்டத்தரணி ஊடாக கோரிக்கை விடுத்திருந்தார்.


இந்தநிலையில், நிதிக்குற்ற விசாரணை பிரிவில் இன்று முன்னிலையாகுமாறு அவருக்கு அழைப்பாணை விடுக்கப்பட்டிருந்தது.


இந்நிலையில் முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்சவுடன் இணைந்து நிதிக் குற்றவியல்  விசாரணைப் பிரிவிற்கு ஷிரந்தி ராஜபக்ச வருகைத் தந்துள்ளார். 


கொழும்பில் அமைந்துள்ள நிதிக் குற்றவியில் விசாரணைப் பிரிவிற்கு முன்னால் பெருந்திரளான ராஜபக்ச விசுவாசிகள்  ஒன்று திரண்டுள்ளனர்.


நிதி மோசடி விசாரணை பிரிவில் மஹிந்தவுடன் முன்னிலையான ஷிரந்தி முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்சவின் மனைவி ஷிரந்தி ராஜபக்ச பொலிஸ் நிதி மோசடி விசாரணை பிரிவில் முன்னிலையாகியுள்ளார். சிரிலிய சவிய வேலைத்திட்டம் தொடர்பில் வாக்குமூலம் வழங்குவதற்காக ஷிரந்தி ராஜபக்சவை கடந்த 27 ஆம் திகதி நிதி மோசடி விசாரணை பிரிவில் முன்னிலையாகுமாறு அறிவிக்கப்பட்டிருந்தது.இருப்பினும் அங்கு முன்னிலையாக இரண்டு வார கால அவகாசம் வழங்கப்பட வேண்டும் என அவர் தமது சட்டத்தரணி ஊடாக கோரிக்கை விடுத்திருந்தார்.இந்தநிலையில், நிதிக்குற்ற விசாரணை பிரிவில் இன்று முன்னிலையாகுமாறு அவருக்கு அழைப்பாணை விடுக்கப்பட்டிருந்தது.இந்நிலையில் முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்சவுடன் இணைந்து நிதிக் குற்றவியல்  விசாரணைப் பிரிவிற்கு ஷிரந்தி ராஜபக்ச வருகைத் தந்துள்ளார். கொழும்பில் அமைந்துள்ள நிதிக் குற்றவியில் விசாரணைப் பிரிவிற்கு முன்னால் பெருந்திரளான ராஜபக்ச விசுவாசிகள்  ஒன்று திரண்டுள்ளனர்.

Advertisement

Advertisement

Advertisement