• Apr 19 2026

'தையல் பயிற்சியும் சத்துணவுத் திட்டமும்' - பச்சிலைப்பள்ளியில் களைகட்டிய வாழ்வாதார நிகழ்வு!

Ziya / Mar 23rd 2026, 4:48 pm
image

பச்சிலைப்பள்ளி பிரதேச சபையின் ஏற்பாட்டில் நடாத்தப்பட்ட மூன்று மாத தையல் பயிற்சி நெறியை பூர்த்தி செய்த 34 பேருக்கான சான்றிதழ் வழங்கும் நிகழ்வும் 14 பாடசாலைகளைச் சேர்ந்த 100 மாணவர்களுக்கான ஐந்து மாதத்திற்கான சத்துணவு வழங்கும் திட்ட அங்குரார்ப்பண நிகழ்வும் பச்சிலைப்பள்ளி பிரதேச சபையின் தவிசாளர் சுப்பிரமணியம் சுரேன் தலைமையில் இன்று பிரதேச சபை மண்டபத்தில் நடைபெற்றுள்ளது.


குறித்த நிகழ்வின் முதன்மை விருந்தினராக பாராளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறீதரன் கலந்து கொண்டார்.


நிகழ்வில் பச்சிலைப்பள்ளி பிரதேச செயலாளர் .இ.த.ஜெயசீலன்,கிளிநொச்சி வடக்கு வலயக்கல்விப்பணிப்பாளர் அ.சிவனருள்ராஜா,மாவட்ட உள்ளூராட்சி உதவி ஆணையாளர் ப.சத்தியராகவன் மற்றும் பாடசாலைகளின் முதல்வர்கள், பெற்றோர்கள் மாணவர்கள் கலந்து கொண்டனர்.


தையல் பயிற்சியில் பங்குபற்றியவர்களின் விற்பனை கண்காட்சியும் இடம்பெற்றது.


'தையல் பயிற்சியும் சத்துணவுத் திட்டமும்' - பச்சிலைப்பள்ளியில் களைகட்டிய வாழ்வாதார நிகழ்வு பச்சிலைப்பள்ளி பிரதேச சபையின் ஏற்பாட்டில் நடாத்தப்பட்ட மூன்று மாத தையல் பயிற்சி நெறியை பூர்த்தி செய்த 34 பேருக்கான சான்றிதழ் வழங்கும் நிகழ்வும் 14 பாடசாலைகளைச் சேர்ந்த 100 மாணவர்களுக்கான ஐந்து மாதத்திற்கான சத்துணவு வழங்கும் திட்ட அங்குரார்ப்பண நிகழ்வும் பச்சிலைப்பள்ளி பிரதேச சபையின் தவிசாளர் சுப்பிரமணியம் சுரேன் தலைமையில் இன்று பிரதேச சபை மண்டபத்தில் நடைபெற்றுள்ளது.குறித்த நிகழ்வின் முதன்மை விருந்தினராக பாராளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறீதரன் கலந்து கொண்டார்.நிகழ்வில் பச்சிலைப்பள்ளி பிரதேச செயலாளர் .இ.த.ஜெயசீலன்,கிளிநொச்சி வடக்கு வலயக்கல்விப்பணிப்பாளர் அ.சிவனருள்ராஜா,மாவட்ட உள்ளூராட்சி உதவி ஆணையாளர் ப.சத்தியராகவன் மற்றும் பாடசாலைகளின் முதல்வர்கள், பெற்றோர்கள் மாணவர்கள் கலந்து கொண்டனர்.தையல் பயிற்சியில் பங்குபற்றியவர்களின் விற்பனை கண்காட்சியும் இடம்பெற்றது.

Advertisement

Advertisement

Advertisement