உள்நாட்டுச் சந்தையில் கீரி சம்பா உள்ளிட்ட சில அரிசி வகைகளுக்கு கடும் தட்டுப்பாடு நிலவுவதாகவும், இந்நிலை தொடர்ந்தால் நுகர்வோரைப் பாதுகாக்க அரிசியை இறக்குமதி செய்ய வேண்டியிருக்கும் என்றும் அத்தியாவசிய சேவைகள் ஆணையாளர் நாயகம் பி.கே. பிரபாத் சந்திரகீர்த்தி எச்சரித்துள்ளார்.
அரசாங்க தகவல் திணைக்களத்தில் நேற்று நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின் போதே அவர் இந்தத் தகவலை வெளியிட்டார்.
சம்பா மற்றும் கீரி சம்பா அரிசி வகைகள் கட்டுப்பாட்டு விலையை விட அதிக விலைக்கு விற்கப்படுவதாக
எழுப்பப்பட்ட கேள்விக்கு பதிலளித்த அவர், நிலைமை பாரதூரமாக உள்ளதைச் சுட்டிக்காட்டினார்.
சில பகுதிகளில் கறுப்புச் சந்தை விலையில் கூட கீரி சம்பா மற்றும் சில அரிசி வகைகளை வாங்க முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. இது நாம் தீவிரமாக அவதானிக்க வேண்டிய ஒரு சிக்கலாகும்," என அவர் குறிப்பிட்டார்.
தற்போது நாட்டில் நெல் அறுவடைக்காலம் ஆரம்பமாகியுள்ள போதிலும், சந்தையில் நிலவும் இந்தத் தட்டுப்பாடு குறித்து தேசிய உணவுப் பாதுகாப்புக் குழு விரிவாகக் கலந்துரையாடியுள்ளது.
சந்தையில் நிலவும் தட்டுப்பாட்டை நீக்கவும், முறையற்ற விலை அதிகரிப்பைக் கட்டுப்படுத்தவும் தற்காலிக தீர்வாக வெளிநாடுகளில் இருந்து அரிசியை இறக்குமதி செய்ய வேண்டிய சூழல் எதிர்காலத்தில் ஏற்படலாம் என ஆணையாளர் நாயகம் இதன்போது தெரிவித்தார்.
சந்தையில் கீரி சம்பாவிற்கு கடும் தட்டுப்பாடு: அரிசியை இறக்குமதி செய்ய வேண்டிய நிலை ஏற்படும் உள்நாட்டுச் சந்தையில் கீரி சம்பா உள்ளிட்ட சில அரிசி வகைகளுக்கு கடும் தட்டுப்பாடு நிலவுவதாகவும், இந்நிலை தொடர்ந்தால் நுகர்வோரைப் பாதுகாக்க அரிசியை இறக்குமதி செய்ய வேண்டியிருக்கும் என்றும் அத்தியாவசிய சேவைகள் ஆணையாளர் நாயகம் பி.கே. பிரபாத் சந்திரகீர்த்தி எச்சரித்துள்ளார்.அரசாங்க தகவல் திணைக்களத்தில் நேற்று நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின் போதே அவர் இந்தத் தகவலை வெளியிட்டார்.சம்பா மற்றும் கீரி சம்பா அரிசி வகைகள் கட்டுப்பாட்டு விலையை விட அதிக விலைக்கு விற்கப்படுவதாக எழுப்பப்பட்ட கேள்விக்கு பதிலளித்த அவர், நிலைமை பாரதூரமாக உள்ளதைச் சுட்டிக்காட்டினார்.சில பகுதிகளில் கறுப்புச் சந்தை விலையில் கூட கீரி சம்பா மற்றும் சில அரிசி வகைகளை வாங்க முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. இது நாம் தீவிரமாக அவதானிக்க வேண்டிய ஒரு சிக்கலாகும்," என அவர் குறிப்பிட்டார்.தற்போது நாட்டில் நெல் அறுவடைக்காலம் ஆரம்பமாகியுள்ள போதிலும், சந்தையில் நிலவும் இந்தத் தட்டுப்பாடு குறித்து தேசிய உணவுப் பாதுகாப்புக் குழு விரிவாகக் கலந்துரையாடியுள்ளது.சந்தையில் நிலவும் தட்டுப்பாட்டை நீக்கவும், முறையற்ற விலை அதிகரிப்பைக் கட்டுப்படுத்தவும் தற்காலிக தீர்வாக வெளிநாடுகளில் இருந்து அரிசியை இறக்குமதி செய்ய வேண்டிய சூழல் எதிர்காலத்தில் ஏற்படலாம் என ஆணையாளர் நாயகம் இதன்போது தெரிவித்தார்.