• Apr 17 2026

9 மாகாணங்களுக்குப் பலத்த மின்னல் எச்சரிக்கை!

Chithra / Apr 5th 2026, 1:32 pm
image

மத்திய, சப்ரகமுவ, ஊவா, தென் மற்றும் வடமத்திய மாகாணங்களுக்கும் அம்பாறை மாவட்டத்திற்கும் பலத்த மின்னல் குறித்த எச்சரிக்கை அறிவிப்பொன்றை வளிமண்டலவியல் திணைக்களம் விடுத்துள்ளது. 


மேற்கூறிய பகுதிகளில் சில இடங்களில் இன்று மாலை 2.00 மணிக்குப் பின்னர் இடியுடன் கூடிய மழையுடன் பலத்த மின்னல் ஏற்படுவதற்கான சாத்தியக்கூறுகள் அதிகமாகக் காணப்படுகின்றன. 


இடியுடன் கூடிய மழை பெய்யும் போது அப்பகுதிகளில் தற்காலிகமாகப் பலத்த காற்று வீசக்கூடும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. 


மின்னலினால் ஏற்படக்கூடிய விபத்துக்களைக் குறைப்பதற்குத் தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு வளிமண்டலவியல் திணைக்களம் பொதுமக்களிடம் கோரிக்கை விடுத்துள்ளது.


9 மாகாணங்களுக்குப் பலத்த மின்னல் எச்சரிக்கை மத்திய, சப்ரகமுவ, ஊவா, தென் மற்றும் வடமத்திய மாகாணங்களுக்கும் அம்பாறை மாவட்டத்திற்கும் பலத்த மின்னல் குறித்த எச்சரிக்கை அறிவிப்பொன்றை வளிமண்டலவியல் திணைக்களம் விடுத்துள்ளது. மேற்கூறிய பகுதிகளில் சில இடங்களில் இன்று மாலை 2.00 மணிக்குப் பின்னர் இடியுடன் கூடிய மழையுடன் பலத்த மின்னல் ஏற்படுவதற்கான சாத்தியக்கூறுகள் அதிகமாகக் காணப்படுகின்றன. இடியுடன் கூடிய மழை பெய்யும் போது அப்பகுதிகளில் தற்காலிகமாகப் பலத்த காற்று வீசக்கூடும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. மின்னலினால் ஏற்படக்கூடிய விபத்துக்களைக் குறைப்பதற்குத் தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு வளிமண்டலவியல் திணைக்களம் பொதுமக்களிடம் கோரிக்கை விடுத்துள்ளது.

Advertisement

Advertisement

Advertisement