முழு உலகையுமே உலுக்கிய உயிர்த்த ஞாயிறு பயங்கரவாதத் தாக்குதல் இடம்பெற்று ஏழு ஆண்டுகள் நிறைவடைவதனை முன்னிட்டு, உயிரிழந்தவர்களுக்கான 7 ஆம் ஆண்டு நினைவேந்தல் நிகழ்வுகள் இன்று செவ்வாய்க்கிழமை நாடு தழுவிய ரீதியில் உணர்வுபூர்வமாக நடைபெறவுள்ளன.
நீதி மற்றும் உண்மையை நிலைநாட்டக் கோரி முன்னெடுக்கப்படவுள்ள இந்நாளை முன்னிட்டு,
பலத்த பாதுகாப்பு மற்றும் விசேட போக்குவரத்து ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.
இன்று காலை 8:45 மணிக்கு முதலாவது குண்டு வெடித்த நேரத்தைக் குறிக்கும் வகையில், நாடு முழுவதும் உள்ள அனைத்துத் தேவாலயங்களிலும் மணி ஒலிக்கப்பட்டு, இரண்டு நிமிட மௌன அஞ்சலி செலுத்தப்படவுள்ளது.
காலை 8:47 மணி: மெழுகுவர்த்திகள் மற்றும் விளக்குகள் ஏற்றி அஞ்சலி செலுத்துதல்.காலை 8:50 மணி: விசேட ஆராதனைகள் மற்றும் பிரார்த்தனைகள் ஆரம்பம்.
கொழும்பு கொச்சிக்கடை புனித அந்தோனியார் தேவாலயத்தில் பேராயர் கர்தினால் மெல்கம் ரஞ்சித் ஆண்டகை தலைமையில் பிரதான நினைவேந்தல் நடைபெறும். இதில் வெளிநாட்டுத் தூதுவர்கள், ஐக்கிய நாடுகள் சபையின் பிரதிநிதிகள் மற்றும் சர்வமதத் தலைவர்கள் கலந்துகொண்டு உரையாற்றவுள்ளனர்.
நீர்கொழும்பு கட்டுவாப்பிட்டி புனித செபஸ்தியார் தேவாலயத்தில் காலை 7:30 மணிக்கு விசேட திருப்பலி ஒப்புக்கொடுக்கப்பட்டு, காலை 8:45 மணிக்கு நினைவுத் தூபியில் அஞ்சலி செலுத்தப்படும்.
தாக்குதலில் பாதிக்கப்பட்டவர்களுக்கு இன்னும் முழுமையான நீதி கிடைக்கவில்லை என்பதை வலியுறுத்தி, நாளை மாலை 4 மணிக்கு நீர்கொழும்பு மேரி ஸ்டெல்லா மைதானத்திலிருந்து கட்டுவாப்பிட்டி தேவாலயம் வரை "நீதி மற்றும் உண்மை வேண்டி" மாபெரும் பிரார்த்தனைப் பேரணி முன்னெடுக்கப்படவுள்ளது.
நினைவேந்தலை முன்னிட்டு கொழும்பு கொச்சிக்கடை தேவாலயத்தை அண்மித்த வீதிகளில் நாளை அதிகாலை முதல் விசேட போக்குவரத்துத் திட்டம் அமுல்படுத்தப்படவுள்ளதுடன், தேவாலயங்களைச் சூழப் பலத்த பொலிஸ் பாதுகாப்பும் பலப்படுத்தப்பட்டுள்ளது.
2019 ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் 21 ஆம் திகதி நடத்தப்பட்ட இந்தத் தற்கொலைத் தாக்குதல்களில் 269 பேர் உயிரிழந்ததுடன், 500-க்கும் அதிகமானோர் காயமடைந்தமை குறிப்பிடத்தக்கது.
இதேவேளை கொச்சிக்கடை புனித அந்தோனியார் தேவாலயத்தில் நடைபெறவுள்ள விசேட ஆராதனைக்கு இணையாக போக்குவரத்துத் திட்டம் ஒன்று நடைமுறைப்படுத்தப்படவுள்ளதாக பொலிஸார் அறிவித்துள்ளனர்.
உயிர்த்த ஞாயிறு தாக்குதல் இடம்பெற்று 07 ஆண்டுகள் நிறைவடைவதை முன்னிட்டு இந்த ஆராதனை ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதுடன், அந்த ஆராதனைக்கு இணையாக இந்த போக்குவரத்துத் திட்டம் செயல்படுத்தப்படவுள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.
இதன்படி, இன்று காலை 7.00 மணி முதல் ஆராதனை நிறைவடையும் வரை தேவாலயத்தை சுற்றியுள்ள வீதிகளில் அவ்வப்போது போக்குவரத்து மட்டுப்படுத்தப்படும் என பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர்.
ஏழு ஆண்டுகள் கடந்தும் விடை தெரியாத துயரம்: நாடு தழுவிய ரீதியில் இன்று விசேட பிரார்த்தனை - நீதி கோரி பேரணிகள் முழு உலகையுமே உலுக்கிய உயிர்த்த ஞாயிறு பயங்கரவாதத் தாக்குதல் இடம்பெற்று ஏழு ஆண்டுகள் நிறைவடைவதனை முன்னிட்டு, உயிரிழந்தவர்களுக்கான 7 ஆம் ஆண்டு நினைவேந்தல் நிகழ்வுகள் இன்று செவ்வாய்க்கிழமை நாடு தழுவிய ரீதியில் உணர்வுபூர்வமாக நடைபெறவுள்ளன.நீதி மற்றும் உண்மையை நிலைநாட்டக் கோரி முன்னெடுக்கப்படவுள்ள இந்நாளை முன்னிட்டு, பலத்த பாதுகாப்பு மற்றும் விசேட போக்குவரத்து ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.இன்று காலை 8:45 மணிக்கு முதலாவது குண்டு வெடித்த நேரத்தைக் குறிக்கும் வகையில், நாடு முழுவதும் உள்ள அனைத்துத் தேவாலயங்களிலும் மணி ஒலிக்கப்பட்டு, இரண்டு நிமிட மௌன அஞ்சலி செலுத்தப்படவுள்ளது.காலை 8:47 மணி: மெழுகுவர்த்திகள் மற்றும் விளக்குகள் ஏற்றி அஞ்சலி செலுத்துதல்.காலை 8:50 மணி: விசேட ஆராதனைகள் மற்றும் பிரார்த்தனைகள் ஆரம்பம்.கொழும்பு கொச்சிக்கடை புனித அந்தோனியார் தேவாலயத்தில் பேராயர் கர்தினால் மெல்கம் ரஞ்சித் ஆண்டகை தலைமையில் பிரதான நினைவேந்தல் நடைபெறும். இதில் வெளிநாட்டுத் தூதுவர்கள், ஐக்கிய நாடுகள் சபையின் பிரதிநிதிகள் மற்றும் சர்வமதத் தலைவர்கள் கலந்துகொண்டு உரையாற்றவுள்ளனர்.நீர்கொழும்பு கட்டுவாப்பிட்டி புனித செபஸ்தியார் தேவாலயத்தில் காலை 7:30 மணிக்கு விசேட திருப்பலி ஒப்புக்கொடுக்கப்பட்டு, காலை 8:45 மணிக்கு நினைவுத் தூபியில் அஞ்சலி செலுத்தப்படும்.தாக்குதலில் பாதிக்கப்பட்டவர்களுக்கு இன்னும் முழுமையான நீதி கிடைக்கவில்லை என்பதை வலியுறுத்தி, நாளை மாலை 4 மணிக்கு நீர்கொழும்பு மேரி ஸ்டெல்லா மைதானத்திலிருந்து கட்டுவாப்பிட்டி தேவாலயம் வரை "நீதி மற்றும் உண்மை வேண்டி" மாபெரும் பிரார்த்தனைப் பேரணி முன்னெடுக்கப்படவுள்ளது.நினைவேந்தலை முன்னிட்டு கொழும்பு கொச்சிக்கடை தேவாலயத்தை அண்மித்த வீதிகளில் நாளை அதிகாலை முதல் விசேட போக்குவரத்துத் திட்டம் அமுல்படுத்தப்படவுள்ளதுடன், தேவாலயங்களைச் சூழப் பலத்த பொலிஸ் பாதுகாப்பும் பலப்படுத்தப்பட்டுள்ளது.2019 ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் 21 ஆம் திகதி நடத்தப்பட்ட இந்தத் தற்கொலைத் தாக்குதல்களில் 269 பேர் உயிரிழந்ததுடன், 500-க்கும் அதிகமானோர் காயமடைந்தமை குறிப்பிடத்தக்கது.இதேவேளை கொச்சிக்கடை புனித அந்தோனியார் தேவாலயத்தில் நடைபெறவுள்ள விசேட ஆராதனைக்கு இணையாக போக்குவரத்துத் திட்டம் ஒன்று நடைமுறைப்படுத்தப்படவுள்ளதாக பொலிஸார் அறிவித்துள்ளனர். உயிர்த்த ஞாயிறு தாக்குதல் இடம்பெற்று 07 ஆண்டுகள் நிறைவடைவதை முன்னிட்டு இந்த ஆராதனை ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதுடன், அந்த ஆராதனைக்கு இணையாக இந்த போக்குவரத்துத் திட்டம் செயல்படுத்தப்படவுள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர். இதன்படி, இன்று காலை 7.00 மணி முதல் ஆராதனை நிறைவடையும் வரை தேவாலயத்தை சுற்றியுள்ள வீதிகளில் அவ்வப்போது போக்குவரத்து மட்டுப்படுத்தப்படும் என பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர்.