• May 24 2025

பதில் கணக்காய்வாளர் நாயகத்திற்கு சேவை நீடிப்பு

Chithra / May 23rd 2025, 9:25 am
image


பதில் கணக்காய்வாளர் நாயகமாக பணியாற்றிவரும் ஜி.எச்.டி. தர்மபாலவுக்கு ஆறு மாத சேவை நீட்டிப்பு வழங்குவதற்கு அரசியலமைப்புச் சபையின் அனுமதி கிடைத்துள்ளது. 

நேற்று (22) பிற்பகல் கூடிய அரசியலமைப்புச் சபை, ஜனாதிபதியின் முன்மொழிவுக்கு இவ்வாறு அனுமதி வழங்கியுள்ளது. 

முன்னாள் கணக்காய்வாளர் நாயகம் ஓய்வு பெற்றதை அடுத்து, அந்தப் பதவி தற்போது 44 நாட்களாக வெற்றிடமாக உள்ளது. 

இதன்படி, பதில் கணக்காய்வாளர் நாயகமாக பணியாற்றி வரும் ஜி.எச்.டி. தர்மபாலவுக்கு ஆறு மாத சேவை நீட்டிப்பு வழங்குவதற்காக ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்கவினால் அரசியலமைப்புச் சபையிடம் முன்வைக்கப்பட்ட முன்மொழிவுக்கு இவ்வாறு அனுமதி கிடைத்துள்ளது.

பதில் கணக்காய்வாளர் நாயகத்திற்கு சேவை நீடிப்பு பதில் கணக்காய்வாளர் நாயகமாக பணியாற்றிவரும் ஜி.எச்.டி. தர்மபாலவுக்கு ஆறு மாத சேவை நீட்டிப்பு வழங்குவதற்கு அரசியலமைப்புச் சபையின் அனுமதி கிடைத்துள்ளது. நேற்று (22) பிற்பகல் கூடிய அரசியலமைப்புச் சபை, ஜனாதிபதியின் முன்மொழிவுக்கு இவ்வாறு அனுமதி வழங்கியுள்ளது. முன்னாள் கணக்காய்வாளர் நாயகம் ஓய்வு பெற்றதை அடுத்து, அந்தப் பதவி தற்போது 44 நாட்களாக வெற்றிடமாக உள்ளது. இதன்படி, பதில் கணக்காய்வாளர் நாயகமாக பணியாற்றி வரும் ஜி.எச்.டி. தர்மபாலவுக்கு ஆறு மாத சேவை நீட்டிப்பு வழங்குவதற்காக ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்கவினால் அரசியலமைப்புச் சபையிடம் முன்வைக்கப்பட்ட முன்மொழிவுக்கு இவ்வாறு அனுமதி கிடைத்துள்ளது.

Advertisement

Advertisement

Advertisement