• May 20 2026

மனித பாவனைக்கு உதவாத மரக்கறிகள் கைப்பற்றல்; ஏழு வர்த்தகர்களுக்கு எதிராக பாய்ந்த சட்டம்

Chithra / Jan 5th 2026, 7:52 am
image

 

திருகோணமலை - மூதூர் பகுதியில் மனித பாவனைக்கு உதவாத சுமார் 1500 கிலோகிராம் வெங்காயம் உள்ளிட்ட மரக்கறி வகைகள் கைப்பற்றப்பட்டுள்ளன


மூதூர் சுகாதார வைத்திய அதிகாரி தலைமையிலான பொதுச் சுகாதார பரிசோதகர்கள் மூதூர் வாராந்த பொதுச் சந்தையை நேற்று மாலை திடீர் சோதனைக்கு உட்படுத்தினர்.


இதன்போது மனித பாவனைக்கு உதவாத சுமார் 1500 கிலோகிராம் வெங்காயம் உள்ளிட்ட மரக்கறி வகைகள் கைப்பற்றப்பட்டுள்ளன.


அத்தோடு மனித பாவனைக்கு ஒவ்வாத மரக்கறி வகைகளை விற்பனை செய்த ஏழு வர்த்தகர்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.


அதேவேளை குறித்த மரக்கறிகளை பொதுமக்களுக்கு விற்பனை செய்ய தயாராக இருந்த வியாபாரிகளுக்கு மூதூர் பொது சுகாதார வைத்திய அதிகாரி, கண்டிப்பு உத்தரவையும், ஆலோசனையும் வழங்கியுள்ளமை குறிப்பிடத்தக்கது.


இவ்வாறான திடீர் சுற்றிவளைப்புகள் தொடர்ந்து முன்னெடுக்கப்படவுள்ளதாக மூதூர் சுகாதார வைத்திய அதிகாரி என்.ஹஸ்ஸாலி தெரிவித்துள்ளார்.    


மனித பாவனைக்கு உதவாத மரக்கறிகள் கைப்பற்றல்; ஏழு வர்த்தகர்களுக்கு எதிராக பாய்ந்த சட்டம்  திருகோணமலை - மூதூர் பகுதியில் மனித பாவனைக்கு உதவாத சுமார் 1500 கிலோகிராம் வெங்காயம் உள்ளிட்ட மரக்கறி வகைகள் கைப்பற்றப்பட்டுள்ளனமூதூர் சுகாதார வைத்திய அதிகாரி தலைமையிலான பொதுச் சுகாதார பரிசோதகர்கள் மூதூர் வாராந்த பொதுச் சந்தையை நேற்று மாலை திடீர் சோதனைக்கு உட்படுத்தினர்.இதன்போது மனித பாவனைக்கு உதவாத சுமார் 1500 கிலோகிராம் வெங்காயம் உள்ளிட்ட மரக்கறி வகைகள் கைப்பற்றப்பட்டுள்ளன.அத்தோடு மனித பாவனைக்கு ஒவ்வாத மரக்கறி வகைகளை விற்பனை செய்த ஏழு வர்த்தகர்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.அதேவேளை குறித்த மரக்கறிகளை பொதுமக்களுக்கு விற்பனை செய்ய தயாராக இருந்த வியாபாரிகளுக்கு மூதூர் பொது சுகாதார வைத்திய அதிகாரி, கண்டிப்பு உத்தரவையும், ஆலோசனையும் வழங்கியுள்ளமை குறிப்பிடத்தக்கது.இவ்வாறான திடீர் சுற்றிவளைப்புகள் தொடர்ந்து முன்னெடுக்கப்படவுள்ளதாக மூதூர் சுகாதார வைத்திய அதிகாரி என்.ஹஸ்ஸாலி தெரிவித்துள்ளார்.    

Advertisement

Advertisement

Advertisement