• Jun 21 2026

கியூ.ஆர் குறியீட்டு முறை தொடர்ந்தும் அமுல்படுத்தப்படும்! பெற்றோலிய கூட்டுத்தாபனம் அறிவிப்பு

Chithra / Jun 21st 2026, 10:36 am
image


எரிபொருள் விநியோகத்திற்காகப் பயன்படுத்தப்படும் கியூ.ஆர் குறியீட்டு முறைமை நீக்கப்படமாட்டாது என இலங்கை பெற்றோலிய கூட்டுத்தாபனம் தெரிவித்துள்ளது.


எரிபொருள் நுகர்வைத் தொடர்ந்து திறம்பட நிர்வகிக்கும் நோக்குடனேயே இந்தத் தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளதாக அதன் தலைவர் டி.ஏ. ராஜகருண குறிப்பிட்டுள்ளார். அத்துடன், உலக சந்தையில் எரிபொருள் விலைகள் தொடர்ந்து ஏற்ற இறக்கங்களைச் சந்தித்து வருவதாகவும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

 

இதேவேளை, உலக சந்தையில் கடந்த வாரம் சரிவைச் சந்தித்த மசகு எண்ணெய் விலைகள், நேற்று சற்றே அதிகரிப்பைக் காட்டியுள்ளன. இதன்படி, ஒரு கொள்கலன் டீசலின் விலை 1.06 டொலராலும், 92 ரக பெற்றோல் கொள்கலன் விலை 2.58 டொலராலும் அதிகரித்துள்ளது. 


தற்போதைய விலை நிலவரம் ஸ்திரமாக நீடித்தால், கூட்டுத்தாபனத்திற்கு நட்டம் ஏற்படாது என்பதால் உள்நாட்டில் தற்போதைய விலையிலேயே தொடர்ந்து எரிபொருளை விநியோகிக்க முடியும் என்றும், வரும் நாட்களில் உலக சந்தையில் விலை மேலும் வீழ்ச்சியடைந்தால் அடுத்த மாத விலை திருத்தத்தின் போது உள்நாட்டிலும் விலைகள் குறைய வாய்ப்புள்ளதாக பெற்றோலிய கூட்டுத்தாபனத்தின் நிர்வாக பணிப்பாளர் மயூர நெத்திகுமார குறிப்பிட்டுள்ளார்.

கியூ.ஆர் குறியீட்டு முறை தொடர்ந்தும் அமுல்படுத்தப்படும் பெற்றோலிய கூட்டுத்தாபனம் அறிவிப்பு எரிபொருள் விநியோகத்திற்காகப் பயன்படுத்தப்படும் கியூ.ஆர் குறியீட்டு முறைமை நீக்கப்படமாட்டாது என இலங்கை பெற்றோலிய கூட்டுத்தாபனம் தெரிவித்துள்ளது.எரிபொருள் நுகர்வைத் தொடர்ந்து திறம்பட நிர்வகிக்கும் நோக்குடனேயே இந்தத் தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளதாக அதன் தலைவர் டி.ஏ. ராஜகருண குறிப்பிட்டுள்ளார். அத்துடன், உலக சந்தையில் எரிபொருள் விலைகள் தொடர்ந்து ஏற்ற இறக்கங்களைச் சந்தித்து வருவதாகவும் அவர் மேலும் தெரிவித்துள்ளார். இதேவேளை, உலக சந்தையில் கடந்த வாரம் சரிவைச் சந்தித்த மசகு எண்ணெய் விலைகள், நேற்று சற்றே அதிகரிப்பைக் காட்டியுள்ளன. இதன்படி, ஒரு கொள்கலன் டீசலின் விலை 1.06 டொலராலும், 92 ரக பெற்றோல் கொள்கலன் விலை 2.58 டொலராலும் அதிகரித்துள்ளது. தற்போதைய விலை நிலவரம் ஸ்திரமாக நீடித்தால், கூட்டுத்தாபனத்திற்கு நட்டம் ஏற்படாது என்பதால் உள்நாட்டில் தற்போதைய விலையிலேயே தொடர்ந்து எரிபொருளை விநியோகிக்க முடியும் என்றும், வரும் நாட்களில் உலக சந்தையில் விலை மேலும் வீழ்ச்சியடைந்தால் அடுத்த மாத விலை திருத்தத்தின் போது உள்நாட்டிலும் விலைகள் குறைய வாய்ப்புள்ளதாக பெற்றோலிய கூட்டுத்தாபனத்தின் நிர்வாக பணிப்பாளர் மயூர நெத்திகுமார குறிப்பிட்டுள்ளார்.

Advertisement

Advertisement

Advertisement