• Apr 15 2026

பகலில் கொளுத்தும் வெப்பம்; மாலையில் இடியுடன் கனமழை - அதிகாலையில் பனிமூட்டம்!

shanu / Apr 15th 2026, 11:02 am
image

மத்திய மலைநாட்டில் கடந்த சில நாட்களாக காலை வேளையில் அதிக அளவில் பனிமூட்டமும் மாலையில் கனமழையும் பெய்து வருகின்றது. 


குறிப்பாக நுவரெலியா - ஹட்டன், ஹட்டன் - கண்டி, ஹட்டன் - கொழுப்பு, ஹட்டன் சாமி மலை, ஹட்டன் பொகவந்தலாவ, ஹட்டன் மஸ்கெலியா, ஹட்டன் நல்லதண்ணி, ஹட்டன் நோட்டின், ஹட்டன் டயகம, ஹட்டன் தலவாக்கலை மற்றும் ஏனைய பிரதேசங்களில் அதிகளவில் பனிமூட்டம் நிலவியுள்ளது. 


மத்திய மலைநாட்டில்  பகல் வேளையில் அதிக உஷ்ணம் நிலவிவரும் வேளையில் மாலை நேரத்தில் இடி மின்னலுடன் கூடிய கன மழை பெய்து வருகிறது. அத்துடன்  அதிகாலை வேளையில் கடும் பனி மூட்டம் நிலவுகிறது. 


வெப்பம் உச்சக்கட்டத்தில் உள்ளதால் பல பாதிப்புக்களை மக்கள் எதிர்கொண்டு வருகின்றனர். இந்த நிலையில் வெப்பத்தைத் தணிக்கும் விதமாக மாலையில் மழையும் காலையில் பனிமூட்டமும் நிலவுவதால் மக்கள் ஓரளவு வெளியில் நடமாட முடிகின்றது. 


அதிகளவு பனிமூட்டம் நிலவுவதால் வாகனங்களை மிகவும் அவதானமாக செலுத்துமாறு ஹட்டன் வலய காவல் துறை தலைமை அதிகாரி பிரதீப் வேண்டுகோள் விடுத்துள்ளார்.


புத்தாண்டு காலத்தில் மத்திய மலை நாட்டிற்கு வருகை தந்த வாகனங்கள் மீண்டும் தலைநகர் கொழும்பு மற்றும் ஏனைய பகுதிகளுக்கு செல்லும் போது மிக மிக அவதானத்துடன் செயற்பட வேண்டும் என அவர் மேலும் தெரிவித்தார்.


பகலில் கொளுத்தும் வெப்பம்; மாலையில் இடியுடன் கனமழை - அதிகாலையில் பனிமூட்டம் மத்திய மலைநாட்டில் கடந்த சில நாட்களாக காலை வேளையில் அதிக அளவில் பனிமூட்டமும் மாலையில் கனமழையும் பெய்து வருகின்றது. குறிப்பாக நுவரெலியா - ஹட்டன், ஹட்டன் - கண்டி, ஹட்டன் - கொழுப்பு, ஹட்டன் சாமி மலை, ஹட்டன் பொகவந்தலாவ, ஹட்டன் மஸ்கெலியா, ஹட்டன் நல்லதண்ணி, ஹட்டன் நோட்டின், ஹட்டன் டயகம, ஹட்டன் தலவாக்கலை மற்றும் ஏனைய பிரதேசங்களில் அதிகளவில் பனிமூட்டம் நிலவியுள்ளது. மத்திய மலைநாட்டில்  பகல் வேளையில் அதிக உஷ்ணம் நிலவிவரும் வேளையில் மாலை நேரத்தில் இடி மின்னலுடன் கூடிய கன மழை பெய்து வருகிறது. அத்துடன்  அதிகாலை வேளையில் கடும் பனி மூட்டம் நிலவுகிறது. வெப்பம் உச்சக்கட்டத்தில் உள்ளதால் பல பாதிப்புக்களை மக்கள் எதிர்கொண்டு வருகின்றனர். இந்த நிலையில் வெப்பத்தைத் தணிக்கும் விதமாக மாலையில் மழையும் காலையில் பனிமூட்டமும் நிலவுவதால் மக்கள் ஓரளவு வெளியில் நடமாட முடிகின்றது. அதிகளவு பனிமூட்டம் நிலவுவதால் வாகனங்களை மிகவும் அவதானமாக செலுத்துமாறு ஹட்டன் வலய காவல் துறை தலைமை அதிகாரி பிரதீப் வேண்டுகோள் விடுத்துள்ளார்.புத்தாண்டு காலத்தில் மத்திய மலை நாட்டிற்கு வருகை தந்த வாகனங்கள் மீண்டும் தலைநகர் கொழும்பு மற்றும் ஏனைய பகுதிகளுக்கு செல்லும் போது மிக மிக அவதானத்துடன் செயற்பட வேண்டும் என அவர் மேலும் தெரிவித்தார்.

Advertisement

Advertisement

Advertisement