• Aug 28 2025

பாடசாலை வாகனம் - டிப்பர் மோதி கோர விபத்து; மாணவர்கள் உட்பட மூவர் பலி- பலர் படுகாயம்!

shanuja / Aug 27th 2025, 9:56 am
image

பாடசாலை மாணவர்களை ஏற்றிச் சென்ற வாகனம்  டிப்பருடன்  மோதி ஏற்பட்ட விபத்தில் இரண்டு மாணவர்கள் உட்பட மூவர் உயிரிழந்துள்ளதாகப் பொலிஸார் தெரிவித்தனர். 


இந்த விபத்துச் சம்பவம்  குளியாப்பிட்டி ஏரி பஞ்சாயத்து பாலம் அருகே இன்று (27) காலை சம்பவித்துள்ளது. 


குறித்த பகுதியிலுள்ள வீதி வழியாக பாடசாலைக்கு மாணவர்களை ஏற்றிச் சென்ற  வாகனம், அதே வீதியில் சென்ற  டிப்பருடன் மோதி விபத்து சம்பவித்துள்ளது. 


விபத்தில் பாடசாலை மாணவர்கள் இருவரும்   பாடசாலை வாகன  சாரதி ஒருவருமாக மூவர் உயிரிழந்துள்ளதாகப் பொலிஸார் தெரிவித்துள்ளனர். 


அத்துடன் 13 பேர் காயமடைந்துள்ளனர். காயமடைந்தவர்கள் சிகிச்சைக்காக அருகிலுள்ள மருத்துவமனைகளுக்கு கொண்டு செல்லப்பட்டனர்.


விபத்திற்கான காரணத்தைக் கண்டறிய முதற்கட்ட விசாரணைகள் நடைபெற்று வருவதாகப் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

பாடசாலை வாகனம் - டிப்பர் மோதி கோர விபத்து; மாணவர்கள் உட்பட மூவர் பலி- பலர் படுகாயம் பாடசாலை மாணவர்களை ஏற்றிச் சென்ற வாகனம்  டிப்பருடன்  மோதி ஏற்பட்ட விபத்தில் இரண்டு மாணவர்கள் உட்பட மூவர் உயிரிழந்துள்ளதாகப் பொலிஸார் தெரிவித்தனர். இந்த விபத்துச் சம்பவம்  குளியாப்பிட்டி ஏரி பஞ்சாயத்து பாலம் அருகே இன்று (27) காலை சம்பவித்துள்ளது. குறித்த பகுதியிலுள்ள வீதி வழியாக பாடசாலைக்கு மாணவர்களை ஏற்றிச் சென்ற  வாகனம், அதே வீதியில் சென்ற  டிப்பருடன் மோதி விபத்து சம்பவித்துள்ளது. விபத்தில் பாடசாலை மாணவர்கள் இருவரும்   பாடசாலை வாகன  சாரதி ஒருவருமாக மூவர் உயிரிழந்துள்ளதாகப் பொலிஸார் தெரிவித்துள்ளனர். அத்துடன் 13 பேர் காயமடைந்துள்ளனர். காயமடைந்தவர்கள் சிகிச்சைக்காக அருகிலுள்ள மருத்துவமனைகளுக்கு கொண்டு செல்லப்பட்டனர்.விபத்திற்கான காரணத்தைக் கண்டறிய முதற்கட்ட விசாரணைகள் நடைபெற்று வருவதாகப் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

Advertisement

Advertisement

Advertisement