மாணவர்களை ஏற்றிச் சென்ற பாடசாலைப் பேருந்து ஒன்று சாலையில் கவிழ்ந்து விபத்திற்குள்ளாகியுள்ளது.
இந்த விபத்துச் சம்பவம் பெங்களூரு பாணத்தூர் - பாலகெரே சாலையில் இன்று காலை சம்பவித்துள்ளது.
குறித்த சாலை கனமழையால் பள்ளங்களும் சேறுகளும் நிறைந்து மோசமான நிலையில் காணப்பட்டுள்ளது.
குறித்த சாலை ஊடாக கிட்டத்தட்ட 20 மாணவர்களை ஏற்றிக் கொண்டு பாடசாலை பேருந்து ஒன்று பயணித்துள்ளது.
பேருந்து பயணித்துக் கொண்டிருந்த போது குறித்த சாலையில் பயணித்த மற்றுமொரு பேருந்தை விலத்திச் செல்வதற்காக முயற்சித்த வேளை சேறுகளில் சிக்கி சாலை அருகே கவிழ்ந்து விபத்திற்குள்ளாகியது.
பேருந்து விபத்திற்குள்ளானதும் மாணவர்களை உடனே பேருந்தின் பின் கதவு வழியாக பாதுகாப்பாக மீட்டு வெளியேற்றினர்.
பயணத்திற்கு ஏதுவாக இன்றிய குறித்த பாதையில் பயணிப்பது மிகவும் சிரமமானது. இதனால் பெரும் வபத்துக்கள் ஏற்பட்டு வருகின்றன என்று விசனம் வெளியிடப்பட்டுள்ளது.
இதேவேளை முதல்வர் மற்றும் துணை முதல்வர் சில மாதங்களுக்கு முன்பு குறித்த பகுதியைப் பார்வையிட்டு ஆய்வு செய்தமை குறிப்பிடத்தக்கது.
சாலையில் கவிழ்ந்த பாடசாலை பேருந்து; பயணித்த 20 மாணவர்களும் பாதுகாப்பாக வெளியேற்றம் மாணவர்களை ஏற்றிச் சென்ற பாடசாலைப் பேருந்து ஒன்று சாலையில் கவிழ்ந்து விபத்திற்குள்ளாகியுள்ளது. இந்த விபத்துச் சம்பவம் பெங்களூரு பாணத்தூர் - பாலகெரே சாலையில் இன்று காலை சம்பவித்துள்ளது. குறித்த சாலை கனமழையால் பள்ளங்களும் சேறுகளும் நிறைந்து மோசமான நிலையில் காணப்பட்டுள்ளது. குறித்த சாலை ஊடாக கிட்டத்தட்ட 20 மாணவர்களை ஏற்றிக் கொண்டு பாடசாலை பேருந்து ஒன்று பயணித்துள்ளது. பேருந்து பயணித்துக் கொண்டிருந்த போது குறித்த சாலையில் பயணித்த மற்றுமொரு பேருந்தை விலத்திச் செல்வதற்காக முயற்சித்த வேளை சேறுகளில் சிக்கி சாலை அருகே கவிழ்ந்து விபத்திற்குள்ளாகியது. பேருந்து விபத்திற்குள்ளானதும் மாணவர்களை உடனே பேருந்தின் பின் கதவு வழியாக பாதுகாப்பாக மீட்டு வெளியேற்றினர். பயணத்திற்கு ஏதுவாக இன்றிய குறித்த பாதையில் பயணிப்பது மிகவும் சிரமமானது. இதனால் பெரும் வபத்துக்கள் ஏற்பட்டு வருகின்றன என்று விசனம் வெளியிடப்பட்டுள்ளது. இதேவேளை முதல்வர் மற்றும் துணை முதல்வர் சில மாதங்களுக்கு முன்பு குறித்த பகுதியைப் பார்வையிட்டு ஆய்வு செய்தமை குறிப்பிடத்தக்கது.