• Apr 16 2026

கொழும்பு மாநகர சபையில் நாமே ஆட்சி அமைப்போம் - சஜித் தரப்பு நம்பிக்கை..!

Ziya / Jun 9th 2025, 8:33 am
image

நடைபெற்று முடிந்த உள்ளூராட்சி மன்றத் தேர்தல் முடிவுகளின் அடிப்படையில் எதிர்க்கட்சிகள் மற்றும் சுயேச்சைக் குழுக்களுடன் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டு பொது இணக்கப்பாட்டுடன் கொழும்பு உட்பட ஏனைய மாநகர சபைகளில் ஆட்சியமைப்போம்என ஐக்கிய மக்கள் சக்தியின் கம்பஹா மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் ஹர்ஷன ராஜகருண தெரிவித்தார்.

கம்பஹாவில் நேற்றையதினம்(08) நடைபெற்ற நிகழ்வில் கலந்து கொண்ட பின்னர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.

இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில்,

நாட்டு மக்கள் பெரும்பான்மை பலத்தை வழங்கியுள்ளார்கள். ஆகவே ஏதும் செய்யலாம் என்ற எண்ணத்தில் அரசாங்கம் தான்தோன்றித்தனமாக செயற்பட்டது. 

அதிகாரம் நிலையற்றது என்பதை மக்கள் ஜனநாயக ரீதியில் அரசாங்கத்துக்கு ஜனநாயக ரீதியில் எடுத்துரைத்துள்ளார்கள்.

நடைபெற்று முடிந்த உள்ளூராட்சி மன்றத் தேர்தல் முடிவுகள் அரசாங்கத்தின் பின்னடைவை எடுத்துக்காட்டுகிறது. 

அரசாங்கத்தின் போலியான வாக்குறுதிகளால் ஏமாற்றமடைந்த மக்கள் அரசாங்கத்துக்கு தக்க பதிலடி கொடுத்துள்ளார்கள்  எனவும் அவர் தெரிவித்தார்.


கொழும்பு மாநகர சபையில் நாமே ஆட்சி அமைப்போம் - சஜித் தரப்பு நம்பிக்கை. நடைபெற்று முடிந்த உள்ளூராட்சி மன்றத் தேர்தல் முடிவுகளின் அடிப்படையில் எதிர்க்கட்சிகள் மற்றும் சுயேச்சைக் குழுக்களுடன் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டு பொது இணக்கப்பாட்டுடன் கொழும்பு உட்பட ஏனைய மாநகர சபைகளில் ஆட்சியமைப்போம்என ஐக்கிய மக்கள் சக்தியின் கம்பஹா மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் ஹர்ஷன ராஜகருண தெரிவித்தார்.கம்பஹாவில் நேற்றையதினம்(08) நடைபெற்ற நிகழ்வில் கலந்து கொண்ட பின்னர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில்,நாட்டு மக்கள் பெரும்பான்மை பலத்தை வழங்கியுள்ளார்கள். ஆகவே ஏதும் செய்யலாம் என்ற எண்ணத்தில் அரசாங்கம் தான்தோன்றித்தனமாக செயற்பட்டது. அதிகாரம் நிலையற்றது என்பதை மக்கள் ஜனநாயக ரீதியில் அரசாங்கத்துக்கு ஜனநாயக ரீதியில் எடுத்துரைத்துள்ளார்கள்.நடைபெற்று முடிந்த உள்ளூராட்சி மன்றத் தேர்தல் முடிவுகள் அரசாங்கத்தின் பின்னடைவை எடுத்துக்காட்டுகிறது. அரசாங்கத்தின் போலியான வாக்குறுதிகளால் ஏமாற்றமடைந்த மக்கள் அரசாங்கத்துக்கு தக்க பதிலடி கொடுத்துள்ளார்கள்  எனவும் அவர் தெரிவித்தார்.

Advertisement

Advertisement

Advertisement