• Aug 24 2025

ரணிலுக்காக சிறை சென்ற சஜித், மஹிந்த! படையெடுக்கும் அரசியல்வாதிகள்

Chithra / Aug 23rd 2025, 11:19 am
image

சிறைச்சாலை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ள முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவை சந்திப்பதற்காக எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச மற்றும் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ உட்பட பல அரசியல்வாதிகள் சென்றுள்ளனர். 

அதன்படி சிறைச்சாலை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ள முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவின் சுகநலன்களை விசாரிப்பதற்காக முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவும் இன்று காலை சிறைச்சாலைக்கு சென்றுள்ளார்.

அதன்படி சிறைச்சாலை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ள முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவின் சுகநலன்களை விசாரிப்பதற்காக முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவும் இன்று காலை சிறைச்சாலைக்கு சென்றுள்ளார்.


இன்று (23) காலை 9.30 மணியளவில், சஜித் பிரேமதாச மற்றும் ஐக்கிய மக்கள் சக்தியின் பாராளுமன்ற உறுப்பினர் நளின் பண்டார, நாடாளுமன்ற உறுப்பினர் முஜிபுர் ரஹ்மான், முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் ஜே.சீ அலவத்துவல உள்ளிட்ட பலரும் வெலிக்கடை சிறைச்சாலைக்குச்  சென்றுள்ளனர். 

சிங்கப்பூருக்கு விஜயம் செய்திருந்த சஜித் பிரேமதாச தமது விஜயத்தை முடித்துக்கொண்டு நாட்டுக்குத் திரும்பியதையடுத்து ரணில் விக்ரமசிங்கவை பார்வையிடச் சென்றுள்ளமை குறிப்பிடத்தக்கது.

ரணிலுக்காக சிறை சென்ற சஜித், மஹிந்த படையெடுக்கும் அரசியல்வாதிகள் சிறைச்சாலை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ள முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவை சந்திப்பதற்காக எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச மற்றும் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ உட்பட பல அரசியல்வாதிகள் சென்றுள்ளனர். அதன்படி சிறைச்சாலை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ள முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவின் சுகநலன்களை விசாரிப்பதற்காக முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவும் இன்று காலை சிறைச்சாலைக்கு சென்றுள்ளார்.அதன்படி சிறைச்சாலை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ள முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவின் சுகநலன்களை விசாரிப்பதற்காக முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவும் இன்று காலை சிறைச்சாலைக்கு சென்றுள்ளார்.இன்று (23) காலை 9.30 மணியளவில், சஜித் பிரேமதாச மற்றும் ஐக்கிய மக்கள் சக்தியின் பாராளுமன்ற உறுப்பினர் நளின் பண்டார, நாடாளுமன்ற உறுப்பினர் முஜிபுர் ரஹ்மான், முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் ஜே.சீ அலவத்துவல உள்ளிட்ட பலரும் வெலிக்கடை சிறைச்சாலைக்குச்  சென்றுள்ளனர். சிங்கப்பூருக்கு விஜயம் செய்திருந்த சஜித் பிரேமதாச தமது விஜயத்தை முடித்துக்கொண்டு நாட்டுக்குத் திரும்பியதையடுத்து ரணில் விக்ரமசிங்கவை பார்வையிடச் சென்றுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Advertisement

Advertisement

Advertisement