சிவனடிபாத மலைக்கு புனித யாத்திரை மேற்கொண்ட முதியவர் ஒருவர் நேற்றும் திடீரென உயிரிழந்துள்ளார்.
நேற்று மதியம் 3 மணியளவில் இடம்பெற்ற இந்தச் சோகச் சம்பவம் குறித்து நல்லதண்ணி பொலிஸார் தெரிவிப்பதாவது,
உயிரிழந்தவர் மொரவக்க பகுதியைச் சேர்ந்த 81 வயதுடைய குணபால என அடையாளம் காணப்பட்டுள்ளார்.
இவர் தனது உறவினர்களுடன் இணைந்து சிவனடிபாத மலைக்கு தரிசனம் செய்ய சென்றுள்ளார்.
மலை ஏறிக்கொண்டிருந்தபோது, ஊசி மலை பகுதியில் வைத்து அவருக்கு திடீரென உடல்நலக்குறைவு ஏற்பட்டுள்ளது.
உடனடியாக அவர் மஸ்கெலியா வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்ட போதிலும், செல்லும் வழியிலேயே உயிரிழந்துள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.
தற்போது அன்னாரது உடல் மஸ்கெலியா மாவட்ட வைத்தியசாலையின் சவக்கிடங்கில் வைக்கப்பட்டுள்ளது.
உயிரிழந்தவரின் உறவினர்கள் வருகை தந்த பின்னர், உடல் டிக்கோயா கிளங்கன் ஆதார வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்படவுள்ளது.
அங்கு சட்ட வைத்திய அதிகாரியின் முன்னிலையில் உடற்கூற்றுப் பரிசோதனை மேற்கொள்ளப்படவுள்ளதாக பொலிஸார் மேலும் தெரிவித்தனர்.
இச்சம்பவம் குறித்து நல்லதண்ணி பொலிஸார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.
சிவனடிபாதமலைக்கு தரிசனம் செய்ய சென்ற முதியவருக்கு சோகம் சிவனடிபாத மலைக்கு புனித யாத்திரை மேற்கொண்ட முதியவர் ஒருவர் நேற்றும் திடீரென உயிரிழந்துள்ளார்.நேற்று மதியம் 3 மணியளவில் இடம்பெற்ற இந்தச் சோகச் சம்பவம் குறித்து நல்லதண்ணி பொலிஸார் தெரிவிப்பதாவது,உயிரிழந்தவர் மொரவக்க பகுதியைச் சேர்ந்த 81 வயதுடைய குணபால என அடையாளம் காணப்பட்டுள்ளார்.இவர் தனது உறவினர்களுடன் இணைந்து சிவனடிபாத மலைக்கு தரிசனம் செய்ய சென்றுள்ளார். மலை ஏறிக்கொண்டிருந்தபோது, ஊசி மலை பகுதியில் வைத்து அவருக்கு திடீரென உடல்நலக்குறைவு ஏற்பட்டுள்ளது.உடனடியாக அவர் மஸ்கெலியா வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்ட போதிலும், செல்லும் வழியிலேயே உயிரிழந்துள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.தற்போது அன்னாரது உடல் மஸ்கெலியா மாவட்ட வைத்தியசாலையின் சவக்கிடங்கில் வைக்கப்பட்டுள்ளது. உயிரிழந்தவரின் உறவினர்கள் வருகை தந்த பின்னர், உடல் டிக்கோயா கிளங்கன் ஆதார வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்படவுள்ளது.அங்கு சட்ட வைத்திய அதிகாரியின் முன்னிலையில் உடற்கூற்றுப் பரிசோதனை மேற்கொள்ளப்படவுள்ளதாக பொலிஸார் மேலும் தெரிவித்தனர். இச்சம்பவம் குறித்து நல்லதண்ணி பொலிஸார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.