• Apr 15 2026

அக்குரேகொட துப்பாக்கிச்சூடு; சந்தேகநபர்கள் பயணித்த கார் எரிந்த நிலையில் மீட்பு

Chithra / Feb 15th 2026, 8:19 am
image

அக்குரேகொட பகுதியில் சட்டத்தரணியையும், அவரின் மனைவியையும் சுட்டுக் கொலை செய்த சந்தேகநபர்கள் பயணித்தாக சந்தேகிக்கப்படும் கார் தீக்கிரையான நிலையில் கண்டுபிடிக்கப்பட்டடுள்ளது.


காலி - அகலிய, குட்டியாவத்தை பகுதியில் உள்ள வீதியொன்றில் கைவிடப்பட்டிருந்த நிலையில் நுகேகொடை பிரிவு குற்றப் புலனாய்வுப் பணியகத்தினால் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. 


குறித்த கார் கண்டெடுக்கப்பட்ட போது அது தீப்பற்றி எரிந்துகொண்டிருந்ததாக அந்தப் பணியகம் தெரிவித்துள்ளது. 


கிடைக்கப்பெற்ற தகவலுக்கு அமைய பொலிஸார் அங்கு விரைந்த சந்தர்ப்பத்தில் எரியூட்டப்பட்ட நிலையில் காணப்பட்டதாக குறிப்பிட்டனர். 


இந்தக் கொலையானது வெளிநாட்டில் தலைமறைவாக இருக்கும் பாதாள உலகக் குழு உறுப்பினரான "கரந்தெனிய சுத்தா" எனப்படும் ஜயலத் சில்வா என்பவரால் வழிநடத்தப்பட்டிருக்கலாம் என பொலிஸார் சந்தேகிக்கின்றனர். 


குறித்த சட்டத்தரணி முன்னர் கரந்தெனிய சுத்தாவின் வழக்குகளுக்காக ஆஜராகி வந்ததாகவும், பின்னர் அவரது எதிரியான "லோகு பெட்டி" எனப்படும் குற்றவாளியின் வழக்குகளுக்காக ஆஜராகியுள்ளதாகவும் தெரியவந்துள்ளது. 


இதன் காரணமாக, கரந்தெனிய சுத்தா தொடர்பான தகவல்களை லோகு பெட்டிக்கு வழங்கியிருக்கலாம் என்ற சந்தேகத்தின் அடிப்படையில், சுத்தாவின் தரப்பினரால் இந்த கொலைச் சம்பவம் அரங்கேற்றப்பட்டிருக்கலாம் என பொலிஸார் முன்னர் தெரிவித்திருந்தனர். 


சம்பவம் தொடர்பாக நுகேகொடை பிரிவு குற்றப் புலனாய்வுப் பணியகம் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருகிறது.

அக்குரேகொட துப்பாக்கிச்சூடு; சந்தேகநபர்கள் பயணித்த கார் எரிந்த நிலையில் மீட்பு அக்குரேகொட பகுதியில் சட்டத்தரணியையும், அவரின் மனைவியையும் சுட்டுக் கொலை செய்த சந்தேகநபர்கள் பயணித்தாக சந்தேகிக்கப்படும் கார் தீக்கிரையான நிலையில் கண்டுபிடிக்கப்பட்டடுள்ளது.காலி - அகலிய, குட்டியாவத்தை பகுதியில் உள்ள வீதியொன்றில் கைவிடப்பட்டிருந்த நிலையில் நுகேகொடை பிரிவு குற்றப் புலனாய்வுப் பணியகத்தினால் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. குறித்த கார் கண்டெடுக்கப்பட்ட போது அது தீப்பற்றி எரிந்துகொண்டிருந்ததாக அந்தப் பணியகம் தெரிவித்துள்ளது. கிடைக்கப்பெற்ற தகவலுக்கு அமைய பொலிஸார் அங்கு விரைந்த சந்தர்ப்பத்தில் எரியூட்டப்பட்ட நிலையில் காணப்பட்டதாக குறிப்பிட்டனர். இந்தக் கொலையானது வெளிநாட்டில் தலைமறைவாக இருக்கும் பாதாள உலகக் குழு உறுப்பினரான "கரந்தெனிய சுத்தா" எனப்படும் ஜயலத் சில்வா என்பவரால் வழிநடத்தப்பட்டிருக்கலாம் என பொலிஸார் சந்தேகிக்கின்றனர். குறித்த சட்டத்தரணி முன்னர் கரந்தெனிய சுத்தாவின் வழக்குகளுக்காக ஆஜராகி வந்ததாகவும், பின்னர் அவரது எதிரியான "லோகு பெட்டி" எனப்படும் குற்றவாளியின் வழக்குகளுக்காக ஆஜராகியுள்ளதாகவும் தெரியவந்துள்ளது. இதன் காரணமாக, கரந்தெனிய சுத்தா தொடர்பான தகவல்களை லோகு பெட்டிக்கு வழங்கியிருக்கலாம் என்ற சந்தேகத்தின் அடிப்படையில், சுத்தாவின் தரப்பினரால் இந்த கொலைச் சம்பவம் அரங்கேற்றப்பட்டிருக்கலாம் என பொலிஸார் முன்னர் தெரிவித்திருந்தனர். சம்பவம் தொடர்பாக நுகேகொடை பிரிவு குற்றப் புலனாய்வுப் பணியகம் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருகிறது.

Advertisement

Advertisement

Advertisement