சீ தமிழ் தொலைக்காட்சியில் இடம்பெற்று வரும் சரிகமப இசை நிகழ்ச்சியில் இலங்கையைச் சேர்ந்த பாடகர் சபேசன் இந்த வாரமும் அசத்தலாகப் பாடியுள்ளார்.
உலகளவில் பிரபலம் வாய்ந்த சீ தமிழ் சரிகமப இசை நிகழ்ச்சியின் சீனியர் சீசன் 5 இல் இலங்கையைச் சேர்ந்த சபேசன் கலந்து கொண்டு சிறந்த பாடல்களைப் பாடி வருகின்றார்.
அந்த வகையில் சரிகமப சீனியர் சீசன் 5 இசைநிகழ்ச்சியில் இந்த வாரம் ரவுண் பஸ் சுற்று இடம்பெற்றுள்ளது.
ரவுண் பஸ் சுற்று என்பதால் சரிகமப நடுவர்கள், தொகுப்பாளினி, பாடகர்கள் உள்ளிட்ட அனைவரும் பஸ்ஸில் சரிகமப இசை நிகழ்ச்சிக்குச் சென்றுள்ளனர்.
பஸ்ஸில் பயணித்த பின்னர் ஆரம்பமான ரவுண் பஸ் சுற்றில் சபேசன் , சுருதி இணை ஜோடியாக “குருவாயூரப்பா குருவாயூரப்பா” என்ற பாடலைப் பாடினர்.
இருவரும் பாடலைப் பாடி முடிந்ததும் நடுவர்கள் தங்களது கமன்ஸ்களை தெரிவித்தனர். அதில் சபேசனுக்கு நல்ல கமன்ஸ்கள் கிடைக்கப்பெற்றது.
எனினும் சபேசனுடன் இணைந்து பாடிய சுருதிக்கு கோல்டன் பெவோர்மன்ஸ் வழங்காததால் சபேசனுக்கு கோல்டன் பெவோர்மன்ஸ் கிடைக்குமா இல்லையா என்ற ரீதியில் ரசிகர்களிடையே பதற்றம் ஏற்பட்டது.
இந்த நிலையில் வார வாரம் கோல்டன் பெவோர்மன்ஸைத் தட்டித் தூக்கிய சபேசன், அதே வரிசையில் தொடர்ச்சியாக இந்த வாரமும் கோல்டன் பெவோர்மன்ஸை தட்டித் தூக்கியுள்ளார்.
சரிகமபவின் இந்த சீசன் ஆரம்பித்தது முதல் தற்போது வரையான அனைத்து சுற்றிலும் சபேசன் கோல்டன் பெவோர்மன்ஸ் பெற்று நடுவர்களையும் கவர்ந்துள்ளார்.
தனது திறமையை சரிகமப மேடையில் வார வாரம் வெளிப்படுத்தும் சபேசனுக்கு இலங்கை உள்ளிட்ட பல பகுதிகளில் இருந்தும் பாராட்டும் ஆதரவுகளும் பெருகி வருகின்றமை குறிப்பிடத்தக்கது.
வார வாரம் கோல்டனை தட்டித்தூக்கும் சபேசன்; பஸ் ரவுண்ட் சுற்றிலும் அசத்தல் பெவோர்மன்ஸ் சீ தமிழ் தொலைக்காட்சியில் இடம்பெற்று வரும் சரிகமப இசை நிகழ்ச்சியில் இலங்கையைச் சேர்ந்த பாடகர் சபேசன் இந்த வாரமும் அசத்தலாகப் பாடியுள்ளார். உலகளவில் பிரபலம் வாய்ந்த சீ தமிழ் சரிகமப இசை நிகழ்ச்சியின் சீனியர் சீசன் 5 இல் இலங்கையைச் சேர்ந்த சபேசன் கலந்து கொண்டு சிறந்த பாடல்களைப் பாடி வருகின்றார். அந்த வகையில் சரிகமப சீனியர் சீசன் 5 இசைநிகழ்ச்சியில் இந்த வாரம் ரவுண் பஸ் சுற்று இடம்பெற்றுள்ளது. ரவுண் பஸ் சுற்று என்பதால் சரிகமப நடுவர்கள், தொகுப்பாளினி, பாடகர்கள் உள்ளிட்ட அனைவரும் பஸ்ஸில் சரிகமப இசை நிகழ்ச்சிக்குச் சென்றுள்ளனர். பஸ்ஸில் பயணித்த பின்னர் ஆரம்பமான ரவுண் பஸ் சுற்றில் சபேசன் , சுருதி இணை ஜோடியாக “குருவாயூரப்பா குருவாயூரப்பா” என்ற பாடலைப் பாடினர். இருவரும் பாடலைப் பாடி முடிந்ததும் நடுவர்கள் தங்களது கமன்ஸ்களை தெரிவித்தனர். அதில் சபேசனுக்கு நல்ல கமன்ஸ்கள் கிடைக்கப்பெற்றது. எனினும் சபேசனுடன் இணைந்து பாடிய சுருதிக்கு கோல்டன் பெவோர்மன்ஸ் வழங்காததால் சபேசனுக்கு கோல்டன் பெவோர்மன்ஸ் கிடைக்குமா இல்லையா என்ற ரீதியில் ரசிகர்களிடையே பதற்றம் ஏற்பட்டது. இந்த நிலையில் வார வாரம் கோல்டன் பெவோர்மன்ஸைத் தட்டித் தூக்கிய சபேசன், அதே வரிசையில் தொடர்ச்சியாக இந்த வாரமும் கோல்டன் பெவோர்மன்ஸை தட்டித் தூக்கியுள்ளார். சரிகமபவின் இந்த சீசன் ஆரம்பித்தது முதல் தற்போது வரையான அனைத்து சுற்றிலும் சபேசன் கோல்டன் பெவோர்மன்ஸ் பெற்று நடுவர்களையும் கவர்ந்துள்ளார். தனது திறமையை சரிகமப மேடையில் வார வாரம் வெளிப்படுத்தும் சபேசனுக்கு இலங்கை உள்ளிட்ட பல பகுதிகளில் இருந்தும் பாராட்டும் ஆதரவுகளும் பெருகி வருகின்றமை குறிப்பிடத்தக்கது.