செம்மணி சித்துபாத்தி இந்து மயானம் தமிழன அழிப்பின் நினைவகமாக பேணும் முன்மொழிவு, நல்லூர் பிரதேச சபையின் தவிசாளர் ப.மயூரனால் இன்றைய சபை அமர்வில் முன்மொழியப்பட்டது.
குறித்த முன்மொழிவினை வைத்து உரையாற்றி தவிசாளர் மயூரன் தன்னுடைய உரையில், இனஅழிப்பு செய்யப்பட்டு புதைக்கப்பட்ட எமது உறவுகள் இன்று செம்மணி சித்துபாத்தி இந்து மயானத்திலிருந்து அகழ்ந்து எடுக்கப்பட்டு வருகின்றனர்.
எம்மீது நிகழ்த்தப்பட்ட இனஅழிப்பின் சாட்சியகமாக இவ் மயானம் காணப்படுகின்றது. இந் நிலையில் இன அழிப்பின் சாட்சியங்களை பாதுகாக்க வேண்டியதும் அதனை இளைய தலைமுறைக்கு கடந்த வேண்டிய பொறுப்பு எமக்கு இருக்கின்றது.
குறித்த இந்து மயானம் எமது சபை எல்லைக்குள் காணப்படுகின்ற நிலையில் இதனை ஒரு மயானமாக தொடர்ந்து பேணாமல் இது எம்மீதான இனஅழிப்பின் ஒரு சாட்சியகமாக நினைவகமாக பேணுவதற்குரிய நடவடிக்கைகளை நாம் அனைவரும் ஒன்றிணைந்து மேற்கொள்ள வேண்டும் என்ற முன்மொழிவினை முன்வைப்பதோடு, குறித்த விடயம் தொடர்பில் செம்மணி சித்துபாத்தி இந்து மயான சபையினருடன் கலந்துரையாடி , அது தொடர்பான விபரங்களுடன் குறித்த முன்மொழிவினை உங்களின் ஏகமனதான ஆதரவுடன் ஒரு தீர்மானமாக நிறைவேற்றுவதற்காக அடுத்த சபை அமர்வில் சமர்ப்பிக்கின்றேன் என்றார்.
செம்மணி சித்துபாத்தி இந்து மயானம் தமிழன அழிப்பின் நினைவகமாக முன்மொழிவு செம்மணி சித்துபாத்தி இந்து மயானம் தமிழன அழிப்பின் நினைவகமாக பேணும் முன்மொழிவு, நல்லூர் பிரதேச சபையின் தவிசாளர் ப.மயூரனால் இன்றைய சபை அமர்வில் முன்மொழியப்பட்டது.குறித்த முன்மொழிவினை வைத்து உரையாற்றி தவிசாளர் மயூரன் தன்னுடைய உரையில், இனஅழிப்பு செய்யப்பட்டு புதைக்கப்பட்ட எமது உறவுகள் இன்று செம்மணி சித்துபாத்தி இந்து மயானத்திலிருந்து அகழ்ந்து எடுக்கப்பட்டு வருகின்றனர். எம்மீது நிகழ்த்தப்பட்ட இனஅழிப்பின் சாட்சியகமாக இவ் மயானம் காணப்படுகின்றது. இந் நிலையில் இன அழிப்பின் சாட்சியங்களை பாதுகாக்க வேண்டியதும் அதனை இளைய தலைமுறைக்கு கடந்த வேண்டிய பொறுப்பு எமக்கு இருக்கின்றது.குறித்த இந்து மயானம் எமது சபை எல்லைக்குள் காணப்படுகின்ற நிலையில் இதனை ஒரு மயானமாக தொடர்ந்து பேணாமல் இது எம்மீதான இனஅழிப்பின் ஒரு சாட்சியகமாக நினைவகமாக பேணுவதற்குரிய நடவடிக்கைகளை நாம் அனைவரும் ஒன்றிணைந்து மேற்கொள்ள வேண்டும் என்ற முன்மொழிவினை முன்வைப்பதோடு, குறித்த விடயம் தொடர்பில் செம்மணி சித்துபாத்தி இந்து மயான சபையினருடன் கலந்துரையாடி , அது தொடர்பான விபரங்களுடன் குறித்த முன்மொழிவினை உங்களின் ஏகமனதான ஆதரவுடன் ஒரு தீர்மானமாக நிறைவேற்றுவதற்காக அடுத்த சபை அமர்வில் சமர்ப்பிக்கின்றேன் என்றார்.