• May 01 2024

வடக்கு உக்ரைனில் ரஷ்யா ஏவுகணைத் தாக்குதல்..!! ஒன்பது பேர் உயிரிழப்பு..!!

Tamil nila / Apr 17th 2024, 9:34 pm
image

Advertisement

வடக்கு உக்ரைனில் உள்ள செர்னிஹிவ் என்ற இடத்தில் ரஷ்ய ஏவுகணைத் தாக்குதலில் பொதுமக்கள் பலர் கொல்லப்பட்டதுடன், காயமடைந்தும் உள்ளனர்.

மூன்று ஏவுகணைகள் நகர மையத்திற்கு அருகில் ரஷ்யா ஏவியுள்ளதாக பிராந்திய மேயர் வியாசஸ்லாவ் சாஸ் கூறுகிறார்.

இந்த தாக்குதலில் ஒன்பது பேர் கொல்லப்பட்டதாகவும் அவர் தெரிவித்தார்.

தாக்குதலில் காயமடைந்த 18 பேர் அங்கு சிகிச்சை பெற்று வருவதாக Chernihiv பிராந்திய மருத்துவமனையின் தலைவர் கூறினார்.

செர்னிஹிவ் மீதான இந்தத் தாக்குதல், ரஷ்யாவால் ஆக்கிரமிக்கப்பட்ட கிரிமியாவில் உள்ள ரஷ்ய இராணுவத் தளத்தின் மீது உக்ரைன் தாக்குதல் நடத்தியுள்ளதாக தகவல்கள் வெளிவந்த சில மணிநேரங்களுக்குள் இடம்பெற்றுள்ளது.

உக்ரைன் ஜனாதிபதி வோலோடிமிர் ஜெலென்ஸ்கி சமூக ஊடகங்களில், "துரதிர்ஷ்டவசமாக, இறப்பு எண்ணிக்கை இன்னும் உயரக்கூடும்.

உக்ரைன் போதுமான எண்ணிக்கையிலான வான் பாதுகாப்பு அமைப்புகளைப் பெற்றிருந்தால், ரஷ்ய பயங்கரவாதத்தை எதிர்கொள்ள முடியும்.” எனக் கூறினார்.

பொதுமக்களை மீதுதான தாக்குதல்களை ரஷ்யா தொடர்ந்து மறுத்து வருகிறது. உக்ரைனின் நகரங்கள் மற்றும் கிராமங்கள் மீது இதுவரை ஆயிரக்கணக்கான ஏவுகணைகள் மற்றும் ட்ரோன்களை ரஷ்யா ஏவியுள்ளதாகவும் இதில் நூற்றுக்கணக்கான பொதுமக்கள் கொல்லப்பட்டுள்ளதாகவும் உக்ரைன் கூறுகிறது.



வடக்கு உக்ரைனில் ரஷ்யா ஏவுகணைத் தாக்குதல். ஒன்பது பேர் உயிரிழப்பு. வடக்கு உக்ரைனில் உள்ள செர்னிஹிவ் என்ற இடத்தில் ரஷ்ய ஏவுகணைத் தாக்குதலில் பொதுமக்கள் பலர் கொல்லப்பட்டதுடன், காயமடைந்தும் உள்ளனர்.மூன்று ஏவுகணைகள் நகர மையத்திற்கு அருகில் ரஷ்யா ஏவியுள்ளதாக பிராந்திய மேயர் வியாசஸ்லாவ் சாஸ் கூறுகிறார்.இந்த தாக்குதலில் ஒன்பது பேர் கொல்லப்பட்டதாகவும் அவர் தெரிவித்தார்.தாக்குதலில் காயமடைந்த 18 பேர் அங்கு சிகிச்சை பெற்று வருவதாக Chernihiv பிராந்திய மருத்துவமனையின் தலைவர் கூறினார்.செர்னிஹிவ் மீதான இந்தத் தாக்குதல், ரஷ்யாவால் ஆக்கிரமிக்கப்பட்ட கிரிமியாவில் உள்ள ரஷ்ய இராணுவத் தளத்தின் மீது உக்ரைன் தாக்குதல் நடத்தியுள்ளதாக தகவல்கள் வெளிவந்த சில மணிநேரங்களுக்குள் இடம்பெற்றுள்ளது.உக்ரைன் ஜனாதிபதி வோலோடிமிர் ஜெலென்ஸ்கி சமூக ஊடகங்களில், "துரதிர்ஷ்டவசமாக, இறப்பு எண்ணிக்கை இன்னும் உயரக்கூடும்.உக்ரைன் போதுமான எண்ணிக்கையிலான வான் பாதுகாப்பு அமைப்புகளைப் பெற்றிருந்தால், ரஷ்ய பயங்கரவாதத்தை எதிர்கொள்ள முடியும்.” எனக் கூறினார்.பொதுமக்களை மீதுதான தாக்குதல்களை ரஷ்யா தொடர்ந்து மறுத்து வருகிறது. உக்ரைனின் நகரங்கள் மற்றும் கிராமங்கள் மீது இதுவரை ஆயிரக்கணக்கான ஏவுகணைகள் மற்றும் ட்ரோன்களை ரஷ்யா ஏவியுள்ளதாகவும் இதில் நூற்றுக்கணக்கான பொதுமக்கள் கொல்லப்பட்டுள்ளதாகவும் உக்ரைன் கூறுகிறது.

Advertisement

Advertisement

Advertisement