• May 01 2024

ஜனாதிபதி தேர்தலே நடத்தப்படாமல் ஜனாதிபதி தொடர்ந்தும் பதவியில் இருப்பதற்கான வியூகங்கள் வகுக்கப்படுகின்றதா? சுரேஸ் பிரேமச்சந்திரன்..!!

Tamil nila / Apr 17th 2024, 9:26 pm
image

Advertisement

ஜனாதிபதித் தேர்தல் நடத்தப்படாமல் தொடர்ந்தும் ரணில் பதவியில் இருப்பதற்கான வியூகங்கள் வகுக்கப்படுகின்றவா என்ற சந்தேகம் மக்கள் மற்றும் அரசியல் கட்சிகளிடத்தில் ஏற்பட்டிருக்கின்றது  என ஈ.பி.ஆர்.எல்.எப் கட்சியின் தலைவர்  சுரேஸ்பிரேமச்சந்திரன் இன்று ஏற்பாடுசெய்த பத்திரிகையாளர் சந்திப்பில் கருத்துவெளியிட்டார். 

அவர் மேலும் தெரிவிக்கையில்,,

இலங்கையின் அரசியல் சாசனத்தின் படி எதிர்வரும் செப்ரெம்பர், ஒக்டோபர் மாதம் அளவில்  ஜனாதிபதித் தேர்தல் நடைபெற்று புதிய ஜனாதிபதி பொறுப்பேற்க வேண்டும். இலங்கையின் தேர்தல் ஆணையகமும் புதிய தேர்தல் ஒன்று நடத்தப் பட வேண்டும்.

எனவும் அதற்கான திகதி மிக விரைவில் அறிவிக்கப்படும் என்றும் கூறிவருகின்றது. இது இப்படி இருக்க அரசியல் வாதிகள் மத்தியிலும் பொதுமக்கள் மத்தியிலும் தேர்தல் ஒத்தி வைக்கப்படும் என்ற அச்சம் தொற்றிக்கொண்டுள்ளது. கடந்த காலங்களிலும் உள்ளூராட்சித் தேர்தலை அரசாங்கம் தள்ளி வைத்திருக்கின்றது. மாகாண சபைத் தேர்தல் புதிய தேர்தல் முறையொன்றினைக் கொண்டு வருகின்றோம் என்று காரணம் கூறப்பட்டு காலரையறையின்றி ஒத்தி வைக்கப்பட்டிருக்கின்றது.

மாகாண சபைகள், உள்ளூாட்சி சபைகள் என்பன அரசின் ஏஜன்டுகள் அல்லது அரசாங்கத்தினால் நியமிகப்பட்டவர்கள் எனப்படுவோரின் அதிகாரத்தின் கீழ்க் காணப்படுகின்றது. 

உள்ளூராட்சி மன்றத்திலிருந்து மாகாணசபை மற்றும் பாராளுமன்றம் வரையும் அரசின் செல்வாக்கு மேலோங்கிக் காணப்படுகின்றது. அரசுதான் நினைத்த விடயங்களை செய்கின்ற சூழ்நிலைதான் இன்று ஏற்பட்டிருக்கின்றது. எதிக்கட்சியோ அல்லது மக்களின் ஜனநாயக உரிமைகளோ மதிக்கப்படவில்லை. மக்களால் தெரிவுசெய்யப்பட்ட அமைப்புகள் உருவாக்கப்படவில்லை. 

தேர்தலே நடத்தாமல் தொடர்ந்தும் பதவியில் இருப்பதற்கான வியூகங்கள் வகுக்கப்படுகின்றனவா? என்ற சந்தேகம் எழுகின்றது. இந்த ஜனாதிபதி பதவிக்கு வருவதற்கு மூல காரணமாக இருந்தது அரகலய போராட்டமும். தொடர்ந்து கோட்டபாய ராஜபக்ச நாட்டை விட்டு வெளியெறியதும் இதன் பிரகாரம் தான் ஜனாதிபதி ரணில் விக்கிரம சிங்க ஜனதிபதியாக பொறுப்பெற்க வேண்டிய சூழ்நிலை ஏற்பட்டது. 

ஜனாதிபதி தேர்தல் நடைபெறுவதற்கான காலங்கள் நெருங்கிக் கொண்டிருக்கின்றது. ஆயினும் அந்தத் தேர்தல் நடைபெறுமா என்ற ஐயம் தமிழ் சிங்கள முஸ்லிம் மக்கள் மத்தியில் ஏற்பட்டிருக்கின்றது. எனவே இன்னுமோர் அரகலய போராட்டம் தேவையா? அல்லது நாடு முழுவதும் மக்கள் எழுச்சியொன்று ஏற்படவேண்டுமா? என்ற கேல்விகளும் எழுந்து நிற்கின்றதன. 

அரசாங்கத்தின் இவ்வாறான போக்குகள் மீண்டும் பாரிய எழுச்சியொன்றுக்கு வழிவகுக்கலாம். இவ்வாறான எழுச்சிகள் என்பது பொருளாதாரக் கொள்கைகள் திட்டங்கள் என்பவை பின்தள்ளிப் போவதற்கான சூழ்நிலையும் ஏற்படுத்தும். ஜனநாயகத்தினை மதித்து மக்களின் வாக்குரிமைகளை மதித்து இந்தத் தேர்தல் குறிப்பாக ஜனாதிபதித் தேர்தல் குறிப்பிடப்படும் திகதியில் குறிப்பிடப்படும் காலத்தில் நடத்தப்பட வேண்டும்.  என ஒட்டுமொத்த மக்களும் விரும்புகின்றனர். தேர்தல்களை காலவரையறையின்றி ஒத்தி வைப்பதை விடுத்து மக்களை மதித்து இந்தத் தேர்தல் நடத்தப்பட வேண்டும் என்பது எமது நிலைப்பாடாகும்- என்று தெரிவித்தார்.

ஜனாதிபதி தேர்தலே நடத்தப்படாமல் ஜனாதிபதி தொடர்ந்தும் பதவியில் இருப்பதற்கான வியூகங்கள் வகுக்கப்படுகின்றதா சுரேஸ் பிரேமச்சந்திரன். ஜனாதிபதித் தேர்தல் நடத்தப்படாமல் தொடர்ந்தும் ரணில் பதவியில் இருப்பதற்கான வியூகங்கள் வகுக்கப்படுகின்றவா என்ற சந்தேகம் மக்கள் மற்றும் அரசியல் கட்சிகளிடத்தில் ஏற்பட்டிருக்கின்றது  என ஈ.பி.ஆர்.எல்.எப் கட்சியின் தலைவர்  சுரேஸ்பிரேமச்சந்திரன் இன்று ஏற்பாடுசெய்த பத்திரிகையாளர் சந்திப்பில் கருத்துவெளியிட்டார். அவர் மேலும் தெரிவிக்கையில்,,இலங்கையின் அரசியல் சாசனத்தின் படி எதிர்வரும் செப்ரெம்பர், ஒக்டோபர் மாதம் அளவில்  ஜனாதிபதித் தேர்தல் நடைபெற்று புதிய ஜனாதிபதி பொறுப்பேற்க வேண்டும். இலங்கையின் தேர்தல் ஆணையகமும் புதிய தேர்தல் ஒன்று நடத்தப் பட வேண்டும்.எனவும் அதற்கான திகதி மிக விரைவில் அறிவிக்கப்படும் என்றும் கூறிவருகின்றது. இது இப்படி இருக்க அரசியல் வாதிகள் மத்தியிலும் பொதுமக்கள் மத்தியிலும் தேர்தல் ஒத்தி வைக்கப்படும் என்ற அச்சம் தொற்றிக்கொண்டுள்ளது. கடந்த காலங்களிலும் உள்ளூராட்சித் தேர்தலை அரசாங்கம் தள்ளி வைத்திருக்கின்றது. மாகாண சபைத் தேர்தல் புதிய தேர்தல் முறையொன்றினைக் கொண்டு வருகின்றோம் என்று காரணம் கூறப்பட்டு காலரையறையின்றி ஒத்தி வைக்கப்பட்டிருக்கின்றது.மாகாண சபைகள், உள்ளூாட்சி சபைகள் என்பன அரசின் ஏஜன்டுகள் அல்லது அரசாங்கத்தினால் நியமிகப்பட்டவர்கள் எனப்படுவோரின் அதிகாரத்தின் கீழ்க் காணப்படுகின்றது. உள்ளூராட்சி மன்றத்திலிருந்து மாகாணசபை மற்றும் பாராளுமன்றம் வரையும் அரசின் செல்வாக்கு மேலோங்கிக் காணப்படுகின்றது. அரசுதான் நினைத்த விடயங்களை செய்கின்ற சூழ்நிலைதான் இன்று ஏற்பட்டிருக்கின்றது. எதிக்கட்சியோ அல்லது மக்களின் ஜனநாயக உரிமைகளோ மதிக்கப்படவில்லை. மக்களால் தெரிவுசெய்யப்பட்ட அமைப்புகள் உருவாக்கப்படவில்லை. தேர்தலே நடத்தாமல் தொடர்ந்தும் பதவியில் இருப்பதற்கான வியூகங்கள் வகுக்கப்படுகின்றனவா என்ற சந்தேகம் எழுகின்றது. இந்த ஜனாதிபதி பதவிக்கு வருவதற்கு மூல காரணமாக இருந்தது அரகலய போராட்டமும். தொடர்ந்து கோட்டபாய ராஜபக்ச நாட்டை விட்டு வெளியெறியதும் இதன் பிரகாரம் தான் ஜனாதிபதி ரணில் விக்கிரம சிங்க ஜனதிபதியாக பொறுப்பெற்க வேண்டிய சூழ்நிலை ஏற்பட்டது. ஜனாதிபதி தேர்தல் நடைபெறுவதற்கான காலங்கள் நெருங்கிக் கொண்டிருக்கின்றது. ஆயினும் அந்தத் தேர்தல் நடைபெறுமா என்ற ஐயம் தமிழ் சிங்கள முஸ்லிம் மக்கள் மத்தியில் ஏற்பட்டிருக்கின்றது. எனவே இன்னுமோர் அரகலய போராட்டம் தேவையா அல்லது நாடு முழுவதும் மக்கள் எழுச்சியொன்று ஏற்படவேண்டுமா என்ற கேல்விகளும் எழுந்து நிற்கின்றதன. அரசாங்கத்தின் இவ்வாறான போக்குகள் மீண்டும் பாரிய எழுச்சியொன்றுக்கு வழிவகுக்கலாம். இவ்வாறான எழுச்சிகள் என்பது பொருளாதாரக் கொள்கைகள் திட்டங்கள் என்பவை பின்தள்ளிப் போவதற்கான சூழ்நிலையும் ஏற்படுத்தும். ஜனநாயகத்தினை மதித்து மக்களின் வாக்குரிமைகளை மதித்து இந்தத் தேர்தல் குறிப்பாக ஜனாதிபதித் தேர்தல் குறிப்பிடப்படும் திகதியில் குறிப்பிடப்படும் காலத்தில் நடத்தப்பட வேண்டும்.  என ஒட்டுமொத்த மக்களும் விரும்புகின்றனர். தேர்தல்களை காலவரையறையின்றி ஒத்தி வைப்பதை விடுத்து மக்களை மதித்து இந்தத் தேர்தல் நடத்தப்பட வேண்டும் என்பது எமது நிலைப்பாடாகும்- என்று தெரிவித்தார்.

Advertisement

Advertisement

Advertisement